62 புனித சூசையப்பர் ஆலயம், தாறாதட்டு


புனித சூசையப்பர் ஆலயம்

இடம் : தாறாதட்டு.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித அந்தோணியார் ஆலயம், முள்ளங்கனாவிளை.

குடும்பங்கள் : 230
அன்பியங்கள் : 9

ஞாயிறு திருப்பலி : காலை 05.45 மணிக்கு.

பங்குத்தந்தை : அருட்பணி கில்பர்ட் லிங்சன்.

திருவிழா : மே மாதம் 01 ம் தேதி முதல் 10 ம் தேதி வரையிலான பத்து நாட்கள்.

வரலாறு :

தாறாத்தட்டு பகுதியில் 1972 ம் ஆண்டுகளில் சுமார் 100 கத்தோலிக்க குடும்பங்கள் வசித்து வந்தனர். இப்பகுதி மக்களின் ஆலயம் இல்லாத குறையினை போக்க முள்ளங்கனாவிளை பங்கு அருட்பணியாளர் டைனீசியஸ் ஆலோசனைப்படி ஊர் மக்களில் பலரிடமாக 51 சென்ட் நிலத்தை நன்கொடையாக பெற்றனர். 1976 ல் அருட்பணியாளர் ஜோசப் அவர்கள் பணிக்காலத்தில் ஆலய கட்டுமானப் பணிகள் ஆரம்பித்து, பின்னர் பணிகள் நிறைவு பெற்று 19-04-1978 ல் ஆயர் மேதகு ஆரோக்கியசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு முள்ளங்கனாவிளை புனித அந்தோணியார் ஆலயத்தின் கிளைப் பங்காக இருந்து வருகின்றது.

முதல் பங்கு அருட்பணிப் பேரவையானது அருட்பணி ஜார்ஜ் அவர்களின் முயற்சியால் 22-08-1993 ல் 6 அன்பியங்களுடன் அமைக்கப் பட்டது. தற்போது 9 அன்பியங்கள் உள்ளன.

அருட்பணியாளர் மரிய அற்புதம் பணிக்காலத்தில் கலையரங்கம் கட்டப்பட்டது. அருட்பணி விக்டர் பணிக்காலத்தில் புதிய பீடம் கட்டப் பட்டு 04-08-2006 ல் கோட்டார் மறை ஆயர் மேதகு அ. லியோன் தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

பல்வேறு சபைகள் இயக்கங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தற்போதைய புதிய ஆலயமானது அருட்பணி கலிஸ்டஸ் பணிக்காலத்தில் 03-04-2016 அன்று அவராலேயே அடிக்கல் போடப்பட்டு, பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பின் பலனாக 28-04-2017 அன்று குழித்துறை மறை ஆயர் மேதகு ஜெறோம் தாஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி கில்பர்ட் லிங்சன் பணிக்காலத்தில் புதிய கொடிமரம் வைக்கப்பட்டு 27-04-2018 அன்று பங்கின் முன்னாள் அருட்பணியாளர்கள் பென்னி, கலிஸ்டஸ் ஆகியோரால் அர்ச்சிக்கப் பட்டது.