134 தூய அந்தோணியார் ஆலயம், நுள்ளிவிளை


தூய அந்தோணியார் ஆலயம்

இடம் : RC தெரு, நுள்ளிவிளை.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

பங்குத்தந்தை : அருட்பணி V. விக்டர்.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், காரங்காடு.

குடும்பங்கள் : 40
அன்பியங்கள் : 2

ஞாயிறு திருப்பலி : காலை 05.00 மணிக்கு.

செவ்வாய்க்கிழமை மாலை 06.30 மணிக்கு நவநாள் திருப்பலி.

திருவிழா : ஜனவரி மாதக் கடைசி வாரத்தில் ஆரம்பித்து பிப்ரவரி மாதத் துவக்கத்தில் நிறைவடைகின்ற வகையில் 13 நாட்கள்.

வரலாறு :

சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்னர் நெட்டாங்கோடு என்ற ஊரில் வாழ்ந்து வந்த உள்நாட்டு மீனவர்கள், நுள்ளிவிளைப் பகுதியில் ஒரு சிறு குருசடி அமைத்து புனித அந்தோனியார், புனித மிக்கேல் அதிதூதர் ஆகிய இரு புனிதர்களின் பெயர்களை சூட்டினார்கள்.

அருட்பணி. அந்தோணி அவர்கள் காரங்காடு பங்குத்தந்தையாக இருந்த போது குருசடியை விரிவாக்கம் செய்து சிறிய ஆலயமாக மாற்றி, ஆலயத்திற்கு புனித அந்தோனியார் ஆலயம் என பெயரும் சூட்டப்பட்டது.

பின்னர் அருட்பணி. அந்தோணிமுத்து அவர்களால் புதிய ஆலய கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, அருட்பணி. ஜோசப் அவர்களால் கட்டி முடிக்கப்பட்டு, 12.01.1964 அன்று மேதகு ஆயர் ஆஞ்ஞிசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

தற்போதைய புதிய அழகிய ஆலயமானது அருட்பணி. ஜெயபிரகாஷ் அவர்களின் முயற்சியால் பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.