365 அற்புத குழந்தை இயேசு ஆலயம், சோளிங்கர்


அற்புத குழந்தை இயேசு ஆலயம்.

இடம் : சோளிங்கர், 631102

மாவட்டம் : வேலூர்
மறை மாவட்டம் : வேலூர்
மறை வட்டம் : அரக்கோணம்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித சவேரியார் ஆலயம், சோகனூர்.

பங்குத்தந்தை : அருட்பணி A. தேவசகாயம் B.A B.L Email : a.devasagayam37@gmail.com

குடும்பங்கள் : 18
அன்பியங்கள் : 2

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு

திருவிழா : டிசம்பர் மாதம் 25 ம் தேதி

வழித்தடம் : 
அரக்கோணம் - சோளிங்கர் 27 கி.மீ
வாலாஜா - சோளிங்கர் 29 கி.மீ
சோகனூர் - சோளிங்கர் 17 கி.மீ.

வரலாறு :

இயற்கை எழில் சூழ்ந்த அழகிய சோளிங்கர் கிராமத்தில் அற்புத குழந்தை இயேசுவிற்கு சிறு ஆலயம் ஒன்று கட்டப்பட்டு, 1999 வரை KG கண்டிகையின் கிளைப்பங்காக இருந்தது.

அருட்பணி P. சார்லஸ் அவர்கள் பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்டப்பட்டு 25-06-1994 அன்று, வேலூர் மறை மாவட்ட ஆயர் மேதகு A.M சின்னப்பா SDB அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

அருட்பணி G. மத்தியாஸ் அவர்களின் முற்சியால் 1999 முதல் சோகனூர் பங்கின் கிளைப்பங்காக ஆனது.

இங்குள்ள மக்கள் கல்வியறிவில் சிறந்தவர்களாக இருந்து பல்வேறு துறைகளில் சிறப்பு பெற்று விளங்குகின்றனர். மேலும் இறை விசுவாசம் மிக்கவர்கள், குருக்களிடத்தில் மிகுந்த மரியாதை மிக்கவர்கள்.

ஆலய திருவிழாவானது கிறிஸ்து பிறப்பு நாளான டிசம்பர் மாதம் 25 ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அதிகாலை 02.00 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பெருவிழா, ஆலய திருவிழா மற்றும் திருமுழுக்கு, முதல் திருவிருந்து (புதுநன்மை) அருள் அடையாளங்கள் கொடுத்து முப்பெரும் விழாக்களாக கொண்டாடப் படுகிறது.

சோகனூர் பங்கின் கிளைப்பங்காக ஆனது முதல் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :

1. அருட்தந்தை Dr. G.மத்தியாஸ் (1999-2010)
2. அருட்தந்தை பவுல் வேளாங்கண்ணி (2010-2011)
3. அருட்தந்தை. செபாஸ்டின் (2011- 2013)
4. அருட்தந்தை. A. தேவசகாயம் (2013 முதல் தற்போது வரை)

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி A. தேவசகாயம் BA BL