364 அற்புத குழந்தை இயேசு ஆலயம், ஜானகாபுரம்


அற்புத குழந்தை இயேசு ஆலயம்.

இடம் : ஜானகாபுரம், பறவத்தூர் அஞ்சல், 632510

மாவட்டம் : வேலூர்
மறை மாவட்டம் : வேலூர்
மறை வட்டம் : அரக்கோணம்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித சவேரியார் ஆலயம், சோகனூர்

பங்குத்தந்தை அருட்பணி A. தேவசகாயம் B.A B.L
மின்னஞ்சல் : a.devasagayam37@gmail.com

குடும்பங்கள் : 23
அன்பியங்கள் : 2

ஞாயிறு திருப்பலி : மாலை 04.00 மணிக்கு

திருவிழா : தை மாதம் 1 -ம் தேதி (ஜனவரி மாதத்தில் 14 அல்லது 15 ம் தேதி)

மண்ணின் இறையழைத்தல் :
அருட்சகோதரி கலைச்செல்வி.

வழித்தடம் :
சோகனூர் - ஜானகாபுரம் 13 கி.மீ
பாறாஞ்சி - ஜானகாபுரம் 9 கி.மீ
KG கண்டிகை - ஜானகாபுரம் 3 கி.மீ
திருத்தணி - ஜானகாபுரம் 10 கி.மீ

ஜானகாபுரம் வரலாறு :

இயற்கை எழில் சூழ்ந்த அழகிய சிறு ஜானகாபுரம். அருட்தந்தை பரம்பெட் அவர்கள் திருத்தணி மற்றும் KG கண்டிகையில் தங்கி மறைப்பரப்பு பணி செய்த போது ஜானகாபுரத்தில் ஐந்து குடும்பங்கள் கிறிஸ்தவம் தழுவின. அருட்தந்தை பரம்பெட் அவர்கள் கோதுமை, பால் பொருட்கள் கொடுத்து இவர்களை வாழ்வித்துள்ளார். ஜானகாபுரத்தில் சிறு ஓலைக்குடில் ஆலயம் ஒன்று அமைக்கப் பட்டு அரக்கோணம் பங்கின் கிளையாக இருந்தது. .

அருட்தந்தை K. K ஜோசப் அவர்கள் புதிதாக இடம் வாங்கி அதில் புதிய ஆலயம் கட்டி, 21-07-1995 அன்று மேதகு ஆயர் A. M சின்னப்பா SDB அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. மேலும் அருட்தந்தை K. K ஜோசப் அவர்கள் இம்மக்கள் கல்வியறிவு பெறவும் பல்வேறு அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படவும் காரணமாக இருந்தார்.

தொடர்ந்து பணிசெய்த 2003 ம் ஆண்டு வரை அரக்கோணம் பங்குத்தந்தையர்கள் ஜானகாபுரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினர்.

2004 -ல் சோகனூர் தனிப்பங்காக உயர்த்தப்பட்ட போது அதன் கிளையாக மாறியது.

புனித தொமினிக்கன் சபை அருட்சகோதரிகள் இம் மக்களுக்காக சிறப்பாக பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

சோகனூர் பங்கின் கிளையாக இருந்தது முதல் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :
1. அருட்தந்தை Dr. G.மத்தியாஸ் (2004-2011)
2. அருட்தந்தை பவுல் வேளாங்கண்ணி (2010-2011)
3. அருட்தந்தை. செபாஸ்டின் (2011- 2013)
4. அருட்தந்தை. A. தேவசகாயம் (2013-- தற்போது வரை)

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி A. தேவசகாயம் B.A B.L