114 குழந்தை இயேசு ஆலயம், கோட்டூர்கோணம்


குழந்தை இயேசு ஆலயம்

இடம் : கோட்டூர்கோணம்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்பணி சுரேஷ் ராஜ்.

நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை.

குடும்பங்கள் : 132
அன்பியங்கள் : 7

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு.

திருவிழா : ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறையை உள்ளடக்கிய ஐந்து நாட்கள்.

Location map : KottorKonam R.C Church Pallivilai,Kottorkonam, Kulasekharam, Tamil Nadu 629161 094893 31528
https://g.co/kgs/FZ3qrb

வரலாறு :

கோட்டூர்கோணம் ஊரானது குலசேகரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

கி.பி 1895 ஆம் ஆண்டு பேச்சிப்பாறை அணை கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டு, அதற்காக கூலித் தொழிலார்களாக இம் மக்கள் இங்கு குடியமர்த்தப் பட்டனர்.
1895 ஆண்டு முளகுமூடு பங்குத்தந்தை அருட்பணி. ஆன்டனி விக்டர் அவர்கள் கோட்டூர்கோணம் பகுதியில் அப்பட்டுசுற்று பிலாங்காவிளை புரயிடத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கினார்.

பேச்சிப்பாறை அணைகட்டிய முதன்மைப் பணியாளர்கள் எட்டுபேர் ஐரோப்பியர்கள். இவர்களுடைய ஆன்மீகத் தேவைகளையும், கூலித் தொழிலாளர்களாக குடியேறிய மக்களின் ஆன்மீகத் தேவைகளையும் நிறைவேற்றவும் ஒரு சிறு ஆலயம் மற்றும் ஓய்வறையையும் அருட்பணி. விக்டர் அவர்கள் கட்டினார்.

குழந்தை இயேசுவின் மீது முகுந்த பற்று கொண்ட அருட்பணி. விக்டர் அவர்கள் ஆலயத்திற்கு குழந்தை இயேசுவின் பெயரை சூட்டினார். தொடர்ந்து பெரிய ஆலயம் கட்ட அடித்தளமிட்டார். ஆனால் அவர் திடீரென்று மரணமடைய ஆலய வேலைகளை தொடர இயலவில்லை. இதனிடையே கோட்டூர்கோணத்திற்கும் ,முளகுமூடு பங்குப் பணியாளருக்குமானது தொடர்புகள் விட்டுப் போயின.

கி.பி 1916 ஆம் ஆண்டு I.C.M சபை அருட்சகோதரிகள் வந்த பிறகு கோட்டூர்கோணத்தில் மீண்டும் அருள் ஒளி பரவப் தொடங்கியது.

இத்துடன் இங்கு அமைந்திருந்த சிறு ஆலயத்தில் இரண்டாம் வகுப்பு வரை ஓராசிரியர் பள்ளி நடத்தப்பட்டு வந்தது.

பல ஆண்டுகளாக குலசேகரம் பங்கின் கிளைப் பங்காக இருந்து, மறை மாவட்ட குருக்கள் மற்றும் பல்லோட்டின் சபை குருக்களின் வழிகாட்டுதலில் வளர்ச்சி பெற்று சிறந்து விளங்கியது.

தற்போதைய ஆலயத்திற்கு அன்றைய குருகுல முதல்வர் அருட்பணி. பவுல் லியோன் அடிகளார் 21.01.1990 அன்று அடிக்கல் நாட்டினார். கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 10.06.1992 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

1998 ஆம் ஆண்டு முதல் பங்கு அருட் பணிப்பேரவை நடந்து வருகிறது.

21.09.2001 அன்று தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. வ. இராபர்ட் அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக வழி நடத்தினார்கள்.