புனித குழந்தை தெரசாள் ஆலயம்
இடம் : செட்டிச்சார்விளை
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.
ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்பணி ஜாக்ஸஸ் இளங்கோ.
நிலை : பங்குதளம்
கிளை : புனித கார்மல் அன்னை ஆலயம், வேர்க்கிளம்பி.
குடும்பங்கள் : 700
அன்பியங்கள் : 26
ஞாயிறு திருப்பலி : காலை 07.30 மணிக்கு.
திருவிழா : செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் ஆரம்பித்து அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நிறைவு பெறுகின்ற வகையில் பத்து நாட்கள்.
நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுவாமியார்மடம் சந்திப்பில் இருந்து வலப்புறமாக சென்றால் இவ்வாலத்தை வந்தடையலாம்.
வரலாறு :
இயற்கை வளங்கள் நிறைந்த அழகிய ஊர் தான் செட்டிச்சார்விளை. அக்காலத்தில் மக்கள் ஆதிக்க வர்க்கத்தினரிடம் மக்கள் அடிமைப்பட்டு ஒடுக்கப்பட்ட வேளையில், இறைவனை வழிபட ஒரு ஆலயம் வேண்டும் என்ற உணர்வு இம் மக்களுக்கு உண்டானது.
திரு. மரிய மெய்யல் அவர்கள் தம்முடன் பலரையும் இணைத்துக் கொண்டு அயராத முயற்சியினால் குருசடி ஒன்றை கட்டினார்கள்.
பின்னர் 1961 ஆம் ஆண்டு மக்களின் ஒத்துழைப்புடன் கார்மல் சபை குருக்கள் தூய குழந்தை தெரசாள் ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டது. ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 1964 ஆம் ஆண்டு அர்ச்சிக்கப் பட்டது.
புனிதையின் பரிந்துரையால் எண்ணற்ற அற்புதங்கள் நடந்து கொண்டிருக்க ஆலயத்தில் இடநெருக்கடி ஏற்பட்டதால் 1991 ஆம் ஆண்டு மணலிக்கரை பங்குத்தந்தை பேரருட்பணி. பீட்டர் சூசைராஜ், அருட்பணி. ஆல்பர்ட் ராஜ் ஆகியோரின் முயற்சியில் புதிய ஆலயத்திற்கு ஒரு ஏக்கர் 13 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. மேதகு ஆயரின் உதவி பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் 06.04.1999 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் புதிய ஆலயம் அர்ச்சிக்கப் பட்டது.