547 புனித அந்தோனியார் ஆலயம், சுருளகோடு

புனித அந்தோனியார் ஆலயம் 

இடம் : சுருளகோடு

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம் : கோட்டார் 

மறைவட்டம் : தேவசகாயம் மவுண்ட் 

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்கு : கிறிஸ்து அரசர் ஆலயம், வீரப்புலி 

பங்குத்தந்தை : அருள்பணி. தாமஸ் ஆண்ட்ரூஸ், SAC

குடும்பங்கள் : 75

அன்பியங்கள் : 4

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு 

செவ்வாய், வெள்ளி மாலை 06.30 மணிக்கு செபமாலை, 07.00 மணிக்கு திருப்பலி. 

திருவிழா : ஜனவரி மாதத்தில் பொங்கல் விடுமுறை நாட்களில். 

மண்ணின் மைந்தர் :

Rev. Brother. சுஜின், SJ

வழித்தடம் : நாகர்கோவில் -பாலமோர்ரோடு -திட்டுவிளை -தடிக்காரன்கோணம். இங்கிருந்து இடதுபுறம் சுமார் 5கி.மீ தொலைவில் சுருளோடு ஜங்ஷன். இங்கிருந்து சற்று தூரம் உட்புறமாகச் சென்றால் இவ்வாலயத்தை அடையலாம். 

Location map : St. Antony's Church Kanyakumari, Tamil Nadu 629851

https://maps.app.goo.gl/GkomzA8yyXURNaW96


வரலாறு :

சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட அழகிய ஊர் சுருளகோடு. 

பல ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதிக்கு, மணலிக்கரை பங்கிலிருந்து கார்மல் சபை அருள்பணியாளர்கள் வந்து மக்களுக்கு நற்செய்தி அறிவித்து வந்ததுடன், சமூக பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியிருந்த மக்களுக்கு உதவிகள் செய்து வந்தனர். இதன் பயனாக இங்கு கிறிஸ்தவம் பரவத் தொடங்கியது. 

கி.பி 1965 -ஆம் ஆண்டு சுருளகோடு பகுதியில் குருசடி கட்டப்பட்டது. 

1967 -ஆம் ஆண்டு திரு. மிக்கேல் அவர்கள் ஆலயம் அமைக்க இலவசமாக நிலம் கொடுத்தார். அந்த நிலத்தில் கார்மல் சபை குருக்களின் உதவியால் ஓடு வேய்ந்த ஆலயம் 1970 -ஆம் ஆண்டு கட்டப்பட்டு மணலிக்கரை பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது. 

வெகு தொலைவில் உள்ள மணலிக்கரையிலிருந்து கார்மல் சபை குருக்கள், போக்குவரத்து வசதிகள் குறைந்த சுருளகோடு ஆலயத்திற்கு வந்து பணிசெய்ய மிகுந்த சிரமப்பட்டனர். 

ஆகவே 1980 -ஆம் ஆண்டு முதல் எட்டாமடை பங்கின் கிளைப் பங்காக சுருளகோடு ஆனது. 1987 -ஆம் ஆண்டு முதல் எட்டாமடை பங்கின் பொறுப்பேற்ற கிளரீசியன் சபை குருக்கள், சுருளகோடு பங்கின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தனர். இவர்களது பணிக்காலத்தில் ஆலயம் புனரமைப்பு செய்யப்பட்டது. ஆலய ஓடு மாற்றப்பட்டு, ஆஸ்பெஸ்டாஸ் கூரை போடப்பட்டது. கலையரங்கம் கட்டப் பட்டது. 

2003 -ஆம் ஆண்டு முதல் தடிக்காரன்கோணம் பங்கின் கிளைப் பங்காக சுருளகோடு ஆனது. 

2016 -ஆம் ஆண்டு தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, பல்லோட்டிய சபை குருக்களிடம் பொறுப்பு வழங்கப் பட்டது. அருள்பணி. ஞானசிகாமணி அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். 01.06.2016 முதல் வீரப்புலி கிறிஸ்து அரசர் ஆலயமானது, சுருளகோடு பங்கின் கிளைப் பங்காக செயல்படத் தொடங்கியது. 

பங்கில் கார்மல் சபை அருட்சகோதரிகள் இல்லம் அமைத்து, பள்ளிக்கூடத்தை நடத்தி வருகின்றனர். 

V. Guard Company - ஒன்று இங்கு உள்ளது. 


பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :

1. மறைக்கல்வி

2. மரியாயின் சேனை

3. இளையோர் இயக்கம் 

4. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம் 

5. கத்தோலிக்க சேவா சங்கம் 

6. பாலர்சபை

7. பீடச்சிறார்

8. பங்குப் பேரவை 

9. பாடகற்குழு 

10. அன்பிய ஒருங்கிணையம்

11. கிராம முன்னேற்ற சங்கம்.

பங்கின் பங்குத்தந்தையர்கள்:

1. அருள்பணி. ஞானசிகாமணி, SAC (2016- 2018)

2. அருள்பணி. தாமஸ் ஆண்ட்ரூஸ், SAC (2018 முதல் தற்போது வரை..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. தாமஸ் ஆண்ட்ரூஸ், SAC அவர்கள்.