628 புனித உத்திரிய மாதா ஆலயம், ஆலத்துடையான்பட்டி

  

புனித உத்திரிய மாதா ஆலயம் 

இடம் : ஆலத்துடையான்பட்டி, ஆலத்துடையான்பட்டி அஞ்சல், துறையூர் தாலுகா. 

மாவட்டம் : திருச்சி 

மறைமாவட்டம் : கும்பகோணம்

மறைவட்டம் : பெரம்பலூர். 

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : புனித மகதலேனா மரியாள் திருத்தலம், கோட்டப்பாளையம் 

பங்குத்தந்தை : அருட்பணி. அகஸ்டின் 

குடும்பங்கள் : 60

அன்பியம் : 1

15 நாட்களுக்கு ஒருமுறை மாலை 06.30 மணிக்கு திருப்பலி. 

திருவிழா : பொங்கல் பண்டிகை நாளில் கொண்டாடப்படும். 

வழித்தடம் : 

திருச்சி -துறையூர் ஆலத்துடையான்பட்டி

Location map : Alathudaiyanpatti

Tamil Nadu 621003

https://maps.app.goo.gl/4AT1ajYLHDpEpc4o9

வரலாறு : 

வீரமாமுனிவரின் கத்தோலிக்க மறைப்பரப்பு பணிகளால் ஆலத்துடையான்பட்டி பகுதிகளிலும் கிறிஸ்தவம் வேரூன்றியது. 

ஆலத்துடையான்பட்டி ஊர் கத்தோலிக்க மக்கள், வழிபாடுகளில் பங்கேற்க கோட்டப்பாளையம் ஆலயத்திற்கு சென்று வந்தனர். இங்கிருந்து சுமார் 8கி.மீ தொலைவில் உள்ள கோட்டப்பாளையம் ஆலயத்திற்கு சென்று வருவது சிரமமாக இருந்ததால், ஆலயத்துடையான்பட்டியில் ஒரு ஆலயம் அமைக்க மக்கள் முடிவு செய்து, கி.பி 1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் புனித கார்மல் மாதா ஆலயம் கட்டப்பட்டது. 

தொடர்ந்து கோட்டப்பாளையம் பங்கின் கிளைப் பங்காக ஆலத்துடையான்பட்டி செயல்பட்டு வந்தது. 

பின்னர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு 09.06.2003 அன்று குடந்தை மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில் ஆலய உறுப்பினர்.