புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்
இடம்: விஜய அச்சம்பாடு, நெசவாளர் தெரு, இட்டமொழி வழி, விஜய அச்சம்பாடு அஞ்சல், 627652
மாவட்டம்: திருநெல்வேலி
மறைமாவட்டம்: தூத்துக்குடி
மறைவட்டம்: சாத்தான்குளம்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித ஜெபமாலை மாதா ஆலயம், மன்னார்புரம்
பங்குத்தந்தை அருட்பணி. J. எட்வர்ட்
குடும்பங்கள்: 55
மாதத்தின் முதல் மற்றும் நான்காவது ஞாயிறு மாலை 06:30 மணி திருப்பலி
திருவிழா செப்டம்பர் மாதம் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து 29-ம் தேதி திருவிழா.
மண்ணின் இறையழைத்தல்:
அருட்சகோதரி. செல்வம்
வழித்தடம்: மன்னார்புரம் -இட்டமொழி -விஜய அச்சம்பாடு
திசையன்விளை -விஜய அச்சம்பாடு
Location map: St. Michael The Archangel Church
https://maps.app.goo.gl/waTp6CNhZWhQ8xWJ8
வரலாறு:
விஜய அச்சம்பாடு ஊரில் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மக்கள் கத்தோலிக்கம் தழுவினர். தற்போது ஐந்தாவது தலைமுறையினர் இங்கு வாழ்ந்து வருகின்றனர். 1930 ஆம் ஆண்டு புனித மிக்கேல் அதிதூதர் பெயரில் ஆலயம் கட்டப்பட்டு (ஆதாரம்: தூத்துக்குடி மறைமாவட்ட பொன்விழா மலர்), சாத்தான்குளம் பங்குத்தந்தையர்களால் வழிநடத்தப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு பின்னர் சோமநாதபேரி பங்கின் கீழ் விஜய அச்சம்பாடு செயல்பட்டு வந்தது.
1982 ஆம் ஆண்டில் மன்னார்புரம் தனிப் பங்காக உருவான போது, விஜய அச்சம்பாடு அதன் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.
அருட்பணி. ராஜா போஸ் பணிக்காலத்தில் 1987 ஆம் ஆண்டு ஆலய முன்மண்டபம் கட்டப்பட்டது.
அருட்பணி. ஜேசு வில்லியம் பணிக்காலத்தில் (1991-1996) ஆலயத்தை சுற்றிலும் மதிற்சுவர் கட்டப்பட்டது.
அருட்பணி. ததேயுஸ் ராஜன் பணிக்காலத்தில் ஆலய ஓட்டுக்கூரை மாற்றப்பட்டு, கான்கிரீட் மேற்கூரை போடப்பட்டு, கோபுரம் அமைக்கப்பட்டு மேதகு ஆயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்களால் 15.05.2002 அன்று அர்ச்சிக்கப்பட்டது.
இவ்வூரில் உள்ள மக்கள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் காரணமாக வெளியூர்களில் வாழ்ந்து வருகின்றனர். திருவிழா மற்றும் முக்கிய விழா நாட்களில் அனைவரும் ஒன்றுகூடி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக திருவிழா காலங்களில் விஜய அச்சம்பாடு ஊரில் உள்ள பிற சமய மக்களுடன் இணைந்து கொண்டாடி, சமய ஒற்றுமையை நிலைநாட்டி வருகின்றனர்.
மே மாதம் மாதா வணக்க மாதம் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. மே 31 ஆம் தேதி மாதாவின் தேர்பவனி, திருப்பலியுடன் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப் படுகிறது.
ஆர்.சி தொடக்கப்பள்ளி உள்ளது.
விஜய அச்சம்பாட்டில் வள்ளியூர் பல்நோக்கு சமூக சேவைச் சங்கத்தின் கீழ் செயல்படும் விடுதி ஒன்று உள்ளது. அருள்பணி. ரெக்ஸ் லூமின் அவர்கள் இயக்குநராக இருந்த காலத்தில் தொடங்கப்பட்டு, அருள்பணி. அருள் சகாயம் அவர்கள் காலத்தில் முழுமை பெற்றுச் செயல்படத் தொடங்கியது. பக்கத்தில் உள்ள கிராமங்களிலுருந்து பிள்ளைகள் வந்து தங்கி, தொடக்கப் பள்ளியில் படிக்கிறார்கள்.
ஆலய வரலாறு: தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழா மலர்.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய உறுப்பினர் திரு. இருதய ராஜ் அவர்கள்.
தகவல்கள் சேகரிப்பில் உதவி: அருட்பணி. அருள்மணி அவர்கள்.