இடம் : கூட்டாத்துப்பட்டி, கூட்டாத்துப்பட்டி அஞ்சல், வாழப்பாடி தாலுக்கா
மாவட்டம் : சேலம்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : சேலம்
நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்கு : புனித பாத்திமா அன்னை ஆலயம், பள்ளத்தாதனூர்
பங்குத்தந்தை : அருட்பணி. அந்தோணி தாஸ், HGN
குடும்பங்கள் : 125
அன்பியங்கள் : 7
திருப்பலி நேரங்கள் :
ஞாயிறு : காலை 08.30 மணிக்கு திருப்பலி
மாதத்தின் முதல் ஞாயிறு : மாலை 07.00 மணிக்கு திருப்பலி
செவ்வாய் : நண்பகல் 12.00 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி
வியாழன் : மாலை 07.00 மணிக்கு புனித செபஸ்தியார் நவநாள் திருப்பலி
சனி : மாலை 07.00 மணிக்கு புனித லூர்து அன்னை கெபியில் திருப்பலி
திங்கள், புதன், வெள்ளி : மாலை 07.00 மணிக்கு திருப்பலி
மாதத்தின் முதல் வெள்ளி : மாலை 07.00 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனை
திருவிழா : மே மாதத்தில்
வழித்தடம் : சேலத்திலிருந்து அயோத்தியாப் பட்டணம் வழியாக பேளூர் செல்லும் வழியில் 24கி.மீ தொலைவில் கூட்டாத்துப்பட்டியில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
Location map : https://g.co/kgs/PoqqiC
வரலாறு :
சேலம் மாவட்டத்தில் மலைகள் சூழ்ந்த பகுதியாம் அக்ரஹாரத்தின் ஒரு பகுதியாக கூட்டாத்துப்பட்டி இருந்து வந்தது. அப்போது கூட்டாத்துபட்டியில் கிறிஸ்தவம் பரவவில்லை.
தொடக்கத்தில் அக்ரஹாரம் பங்குத்தந்தை அருட்பணி. M. வர்க்கீஸ் (1950-1961) அவர்கள் கூட்டாத்துப்பட்டியில் வாழும் மக்களுக்கு நற்செய்தி அறிவித்து வந்தார். இதன் பயனாக கூட்டாத்துப்பட்டியில் கிறிஸ்தவம் துளிர் விட்டது. பிறகு, பல குடும்பங்களுக்கு திருமுழுக்கு வழங்கி கிறிஸ்துவ மறையில் இணைத்தார். மக்கள் அக்ரஹாரம் பங்கிற்கு திருப்பலியில் பங்கேற்க சென்று வந்தனர்.
பிறகு வந்த அருட்பணி. G. மோவியேல் (1961-1980) அவர்கள் கூட்டாத்துப்பட்டியில் வாழும் கிறிஸ்துவ மக்களின் ஆன்மீகத் தேவைகளுக்காக, புனித செபஸ்தியார் பெயரில் ஆலயம் ஒன்று 1970 -ம் ஆண்டு கட்டினார். இதுமுதல் அக்ரஹாரம் பங்கின் கிளைப் பங்காக கூட்டாத்துப்பட்டி செயல்பட்டு வந்தது.
இவ்வூரில் உள்ள கிறிஸ்துவ இறைமக்கள் அக்ரஹாரம் பங்குத்தந்தை அருட்பணி. R. சேவியர் அவர்களின் முயற்சியால், வாழும் புதிய இடமும், வீடுகளும் பெற்றுள்ளனர். கல்வியறிவில்லாத பிள்ளைகள் சேலம், திருச்செங்கோடு போன்ற நகரப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு அருட்தந்தையின் உதவியால் கல்வியறிவு பெற்றனர்.
பிறகு, அக்ரஹாரத்தின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்த கூட்டாத்துப்பட்டி ஆலயமானது 2011-ம் ஆண்டு தனிப்பங்காக மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்களால் அறிவிக்கப்பட்டு, HGN சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. புதிய பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. இன்னாசிமுத்து, HGN (2008-2014) அவர்கள் பொறுப்பேற்றார். பிறகு, இறைமக்களின் நன்கொடைகளால் புனித லூர்து அன்னை கெபியும், புனித அந்தோணியார் கெபியும் கட்டப்பட்டு மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
அருட்பணி. விக்டர் குரூஸ், HGN (2014-2015) அவர்களின் பணிக்காலத்தில் பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டு, சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. மேலும், கிளைப்பங்கான பள்ளத்தாதனூரில் மக்களின் ஒத்துழைப்புடன் நன்கொடையாளர்களின் உதவியால் புதிய ஆலயம் கட்டப்பட்டு மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
அருட்பணி. சத்தியநாதன், HGN (2015-2017) அவர்களின் பணிக்காலத்தில் ஆலயத்தில் பல சுரூபங்களை நிறுவியதுடன், மக்களை ஆன்மீகத்தில் வளரச் செய்தார்.
அருட்பணி. நெப்போலியன், HGN (2017-2019) அவர்களின் பணிக்காலத்தில் தேர் நிறுத்தி வைப்பதற்கு நிழற்கூடம் கட்டப்பட்டது.
இன்றைய பங்குத்தந்தை அருட்பணி. அந்தோணி தாஸ், HGN அவர்களின் முயற்சியால் தேர் கூடத்திற்கு கீழ்தளம் அமைக்கப்பட்டது. மேலும், இறைமக்களை ஆன்மீகப் பாதையில் வழிநடத்தி வருகிறார்.
பங்கில் உள்ள பக்தசபைகள்:
பங்குப்பேரவை
இளையோர் குழு
பீடச்சிறுவர்கள் இயக்கம்
பாடகற்குழு
பங்கில் உள்ள இல்லம்:
பாத்திமா இல்லம்
புனித ஞானப்பிரகாசியார் சபை அருட்சகோதரிகள்)
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்
1. அருட்பணி. இன்னாசிமுத்து, HGN (2008-2014)
2. அருட்பணி. விக்டர் குரூஸ், HGN (2014-2015)
3. அருட்பணி. சத்தியநாதன், HGN (2015-2017)
4. அருட்பணி. நெப்போலியன், HGN (2017-2019)
5. அருட்பணி. அந்தோணி தாஸ், HGN (2019 முதல் தற்போது வரை....)
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. அந்தோணி தாஸ், HGN