தூய லூர்து அன்னை திருத்தலம்
இடம் : B. பள்ளிப்பட்டி
மாவட்டம் : தருமபுரி
மறை மாவட்டம் : தருமபுரி
மறை வட்டம் : அரூர்
நிலை : திருத்தலம்
பங்கு : தூய கார்மேல் அன்னை ஆலயம், B. பள்ளிப்பட்டி
பங்குத்தந்தை : அருட்தந்தை L. சக்கரியாஸ்
திருவிழா :
தவக்காலத்தின் 9- வது வாரம் வருகிற வெள்ளிக்கிழமை கெபி திருவிழா. 3 நாட்கள் நடைபெறும்.
வெள்ளிக்கிழமை மாலை மாசற்ற இரத்தம் ஒலி, ஒளி காட்சியானது சிறப்பாக நடத்தப்படுகிறது. இது ஏழு மணி நேரம் பழைய ஏற்பாடு நிகழ்விலிருந்து, இயேசுவின் பாடுகள் மற்றும் விண்ணேற்பு நிகழ்வு வரை சிறப்பாக அரங்கேற்றப் படுகிறது. இதனைக் காண பல பகுதிகளில் இருந்தும் மக்கள் (குறிப்பாக பெங்களூரு, சென்னை, மைசூர், கேரளா) பலரும் இவ்வாலயம் வந்து கூடுவர்.
கொடியேற்றத்திலிருந்து 9 நாட்கள் நவநாள் சிறப்பாக கொண்டாடப் படுகிறது.
வழிபாட்டு நேரங்கள் :
சனிக்கிழமை : தூய லூர்து அன்னை கெபி திருத்தலத்தில் மாலை 06.00 மணிக்கு செபமாலை, மரியாள் மன்றாட்டு, திருப்பலி
ஒவ்வொரு மாதத்தின் 23- ம் தேதி தூய லூர்து அன்னை கெபி திருத்தலத்தில் தேர்பவனி (காரணம் ஜூன் 23-ம் மாதா சுரூபம் கண் அசைந்து காட்சி கொடுத்ததன் நினைவாக)
சிறப்புக்கள் :
சேர்வராயன் மலையின் தெற்குப் பக்கம் சேலம் -ம், வடக்குப் பக்கம் B. பள்ளிப்பட்டியும் காணப்படுவது தனிச்சிறப்பு.
தூய கார்மேல் ஆலயமானது 1930 ல் ஆரம்பிக்கப் பட்டது.
மலையின் மீது 1958-ல் தூய லூர்து அன்னை கெபி திருத்தலம் உருவானது.
2008 -ம் ஆண்டு பொன்விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.
23-06-2014 லூர்து அன்னை காட்சி நல்கிய தினம்.
தூய லூர்து அன்னை கெபி திருத்தலத்தில் கல்வாரி மலை சிறப்பாக அமைக்கப் பட்டுள்ளது.
கெபி திருத்தலத்திற்கு செல்ல செபமாலையின் 53 மணிகளை நினைவு கூருகின்ற வகையில் 53 படிக்கட்டுகள் அமைக்கப் பட்டுள்ளன. இது நமக்கு செபமாலை சொல்லும் உணர்வை அதிகரித்து விசுவாசத்தை ஆழப்படுத்துகிறது. மேலும் இயேசுவின் சிலுவைப் பாடுகளின் 14 நிலைகளும் சுரூபமாக தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன.
தேவ இரகசியங்கள் இரு புறங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது மலை உச்சியில் 61 அடி உயரத்தில் மாதாவின் சுரூபம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான கட்டுமானப் பொருட்களை மக்களே சுமந்து செல்வது தனிச்சிறப்பு.
வழித்தடம் :
Train route
சென்னை - சேலம் வண்டி
திருப்பத்தூர் ,ஜோலார்பேட்டை வழி இறங்குமிடம் பொம்மிடி.
Bus route :
சேலம் - தருமபுரி பேருந்து வழி பாப்பிரெட்டிப்பட்டி ,பொம்மிடி இறங்குமிடம் B. பள்ளிப்பட்டி
சென்னை - சேலம் பேருந்து
அரூர், ஊத்தங்கரை வழித்தடம் சாமியாபுரம் கூட்ரோடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி. அங்கிருந்து பொம்மிடி பேருந்தில் பயணித்து B. பள்ளிப்பட்டியில் இறங்கினால் இவ்வாலயத்தை வந்தடையலாம்.