491 உலக மீட்பர் ஆலயம், பாச்சல்


உலக மீட்பர் ஆலயம்

இடம் : பாச்சல், பாச்சல் அஞ்சல், 637018

மாவட்டம் : நாமக்கல்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : நாமக்கல்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய லூர்து அன்னை ஆலயம், இராசிபுரம்

பங்குத்தந்தை : அருட்பணி. இரா. ஜெயசீலன்

குடும்பங்கள் : 15
அன்பியம் : 1

சனிக்கிழமை மாலை 06.30 மணிக்கு திருப்பலி.

திருவிழா : டிசம்பர் மாதம் 24,25 ஆம் தேதிகளில்.

வழித்தடம் : இராசிபுரத்திலிருந்து நாமக்கல் வழியாக 11கி.மீ தொலைவில் (பாவை கல்லூரி அருகில்) பாச்சல் உள்ளது.

Location map : https://maps.app.goo.gl/aqYTaDJPCEBhCpTb8

வரலாறு:

பாச்சல் உலக மீட்பர் ஆலயமானது, 55 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. கி.பி.1965 ஆம் ஆண்டில் அருட்பணி. அருள் பிரகாசநாதர் அவர்களால் இவ்வாலயம் கட்டப்பட்டு காக்காவேரி பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது.

1991 ல் இராசிபுரம் தனிப்பங்கான போது அதன் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

அருட்பணி. இருதயநாதன் (1995-2001) அவர்களின் பணிக்காலத்தில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டதுடன், பெல்ஜியம் நாட்டு இளைஞர்களின் உதவியுடன் இம்மக்களுக்கு 10 வீடுகள் கட்டித்தரப்பட்டது.

அருட்பணி. C. மைக்கேல் (2002-2006) அவர்களின் பணிக்காலத்தில் ஆலயத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.

அருட்பணி.பீட்டர் பிரான்சிஸ் (2006-2011) அவர்களின் பணிக்காலத்தில் இவ்வாலயத்தின் மேற்கூரை (ஓடு) வேயப்பட்டது.

அருட்பணி.தியோடர் செல்வராஜ் (2011-2016) அவர்களின் பணிக்காலத்தில் சன்னல் மற்றும் கதவுகள் புதிதாக மாற்றப்பட்டன.

இன்றைய பங்குத்தந்தை அருட்பணி. இரா. ஜெயசீலன் அவர்களின் ஒத்துழைப்புடன், திரு. பிரபு மற்றும் அவர்களின் குடும்ப உதவியுடன் தூய லூர்து அன்னை மற்றும் உலக மீட்பர் (ஈரடுக்கு கெபி) சுரூபங்கள் தாங்கிய கெபி கட்டப்பட்டு, 12.02.2019 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

தற்போது பங்குத்தந்தை அருட்பணி. இரா. ஜெயசீலன் அவர்களின் வழிகாட்டுதலில் பாச்சல் இறைசமூகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இரு கரங்களையும் விரித்து அன்புடன் மக்களை வரவேற்கும் உலக மீட்பர் ஆலயத்தில் புதுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன.குறிப்பாக, குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் ஏராளம்! எனவே, நீங்களும் வாருங்கள்! உலக மீட்பரின் ஆசீர் பெற்றுச் செல்லுங்கள்!

தகவல்கள் : பங்குத்தந்தை இரா. ஜெயசீலன் அவர்கள். புகைப்படங்கள் ஆலய உறுப்பினர்.