97 குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், கொல்லங்கோடு


குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம்

இடம் : மணலி, கொல்லங்கோடு.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்பணி மார்ட்டின்.

நிலை : கிளைப்பங்கு
பங்குதளம் : புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், சூழால்.

குடும்பங்கள் : 92
அன்பியங்கள் : 4

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு.

திருவிழா : அக்டோபர் மாதத்தில் ஐந்து நாட்கள்.

சிறு குறிப்பு :

28-11-1993 ல் அடிக்கல் போடப்பட்டு பணிகள் நிறைவு செய்யப்பட்டு 04-05-1995 ல் கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு லியோன் தர்மராஜ் அவர்களால் இவ் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு சூழால் பங்கின் கிளைப் பங்காக இருந்து வருகின்றது . தற்போதைய ஆலயம் சிறியதாக இருப்பதாலும் பழமையடைந்திருப்பதாலும் புதிய ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டு நாளைய தினம் 01-10-2018 அன்று குழித்துறை மறை மாவட்ட ஆயர் மேதகு ஜெறோம் தாஸ் அவர்கள் அடிக்கல் போட்டு புதிய ஆலயப்பணிகளை துவக்கி வைக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் புதிய ஆலய பணிகள் சிறப்பாக நடைபெறவும், தேவையான நன்கொடைகள், பொருளுதவிகள் கிடைத்திடவும், பணிகள் தடையின்றி நடந்திடவும், குறித்த காலத்தில் பணிகளை நிறைவு செய்து அர்ச்சிப்பு விழாவை கொண்டாடிடவும் இதற்கான முழு முயற்சிகளை செய்ய இருக்கின்ற பங்குத்தந்தை அருட்பணி மார்ட்டின் மற்றும் பங்கு மக்களையும் இறைவன் நிறைவாய் ஆசீர்வதிக்க வேண்டுமென்று மன்றாடுவோம்.