புனித அந்தோணியார் ஆலயம்
இடம்: மடப்புரம், திருத்துறைப்பூண்டி, 614715
மாவட்டம்: திருவாரூர்
மறைமாவட்டம்: தஞ்சை
மறைவட்டம்: பட்டுக்கோட்டை
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித லூர்து அன்னை ஆலயம், திருத்துறைப்பூண்டி
பங்குத்தந்தை அருட்பணி. I. பிரான்சிஸ் சேவியர்
உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. M. பீட்டர் டேமியன் துரைராஜ்
குடும்பங்கள்: 90
அன்பியங்கள்: 4
செவ்வாய்க்கிழமை மாலை 06:00 மணிக்கு ஜெபமாலை 06:30 மணிக்கு திருப்பலி
மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை மாலை 06:30 மணிக்கு திருத்தேர் பவனி, திருப்பலி குணமளிக்கும் நற்கருணை ஆராதனை
திருவிழா: ஜூன் மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து 13 நாட்கள். 13 ஆம் நாள் மண்டகப்படி நடைபெறும். மேலும் அலங்கார திருத்தேர் பவனி மடப்புரம் ஊர் முழுவதும் வலம் வரும். திருவிழா முடிந்த மறுதினம் காலையில் கொடியிறக்கம், மதிய உணவு.
ஜனவரி மாதம் 17 ஆம் தேதி பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப் படும்.
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. A. ஜேக்கப் ஆன்டனி, தஞ்சை மறைமாவட்டம்
2. அருட்பணி. M. சேவியர், தஞ்சை மறைமாவட்டம்
3. அருட்பணி. R. மத்தியாஸ், MSFS
4. அருட்சகோதரி. மேரி ஜூடு, அன்னாள் சபை
5. அருட்சகோதரி. மார்கிரட், அடைக்கல அன்னை சபை
வரலாறு:
திருத்துறைப்பூண்டி புனித லூர்து அன்னை பங்கின் கிளைப் பங்கான மடப்புரத்தில், 1982 ஆம் ஆண்டு சிறிய கீற்றுக் கொட்டகை ஆலயம் கட்டப்பட்டது. 1988 ஆம் ஆண்டு இந்த ஆலயம் சிறிய ஆலயமாக கட்டப்பட்டது.
05.12.2010 அன்று அருட்பணி. P. சேவியர் அவர்களால் தற்போதைய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அருட்பணி. U. சவரிமுத்து அவர்களின் ஒத்துழைப்புடன் கட்டப்பட்டு, மேதகு ஆயர் M. தேவதாஸ் அம்புரோஸ் அவர்களால் 28.07.2015 அன்று புனிதம் செய்யப்பட்டது.
எழில்மிகு அழகிய கோபுரம் கட்டப்பட்டு பங்குத்தந்தை அருட்பணி. G. ஜான் பிரிட்டோ அவர்களால் 27.06.2017 அன்று புனிதம் செய்து திறந்து வைக்கப்பட்டது.
வழித்தடம்: திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி சாலையில் ஒன்றரை கி.மீ தொலைவில், மடப்புரம் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது.
தஞ்சை -மன்னார்குடி -திருத்துறைப்பூண்டி மடப்புரம்
Location map: https://g.co/kgs/jWyM3G
தகவல்கள்: ஆலய பொறுப்பாளர் திரு. லாரன்ஸ் அவர்கள்
ஆலய வரலாறு: பங்கு ஆலய நூற்றாண்டு விழா மலர்
தகவல்கள் சேகரிப்பில் உதவி மற்றும் புகைப்படங்கள்: மேட்ரிக்ஸ் கிறிஸ்டோபர் மற்றும் அன்பு ஆகியோர்.