613 புனித சவேரியார் ஆலயம், வடக்கு வண்டானம்

    

புனித சவேரியார் ஆலயம் 

இடம் : வடக்கு வண்டானம் 

மாவட்டம் : தூத்துக்குடி 

மறைமாவட்டம் : பாளையங்கோட்டை

மறைவட்டம் : கோவில்பட்டி

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்குகள்:

1. புனித லூர்தன்னை ஆலயம், அச்சங்குளம்

2. புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், தீத்தாம்பட்டி 

3. புனித அமலோற்பவ அன்னை ஆலயம், கடம்பூர் 

4. புனித அகுஸ்தினார் ஆலயம், சிவலிங்கபுரம். 

பங்குத்தந்தை : அருள்திரு. ச அருள் நேசமணி 

குடும்பங்கள் : 33 (கிளைப்பங்குகள் சேர்த்து 113)

அன்பியங்கள் : 7

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு திருப்பலி காலை 07.30 மணி

செவ்வாய் & வெள்ளி மாலை 07.00 மணிக்கு திருப்பலி 

திங்கள், புதன், வியாழன், சனி காலை 06.00 மணிக்கு திருப்பலி. 

திருவிழா : டிசம்பர் மாதம் முதல் சனி மற்றும் ஞாயிறு. 

மண்ணின் மைந்தர்கள் :

1. மேதகு ஆயர் ச. அந்தோனிசாமி, DD.,D.C.L., பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் 

2. அருட்பணி. சந்தியாகு, இரட்சகர் சபை 

3. அருட்பணி. ஞானப்பிரகாசம் (late) 

4. அருட்பணி. தேவதாஸ், IMS சபை

5. அருட்பணி. சூசையப்பன், கொல்கத்தா 

6. அருட்பணி. விசுவாச மனோஜ், ரோதக்ஸ் மறைமாவட்டம், பிரான்ஸ் 

7. அருட்பணி. மரிய அந்தோணிராஜன், குவனெலியன் சபை. 

1. அருட்சகோதரி. செசீலியா, ICM (late) 

2. அருட்சகோதரி. கேத்ரின் மேரி, OSM

3. அருட்சகோதரி. பிளாசிட்மேரி, OSM

4. அருட்சகோதரி. ஞானசொரூபி மேரி, OSM

5. அருட்சகோதரி. ராஜம் தெரசிட்டா, SMMI

6. அருட்சகோதரி. ஆன்டோ ரோசிட்டா, SMMI

7. அருட்சகோதரி. மைக்கேல் அமலா, SMMI

8. அருட்சகோதரி. விமலாமேரி, SMMI

9. அருட்சகோதரி. லில்லி, SMMI

10. அருட்சகோதரி. அமலோற்பவம், SMMI

11. அருட்சகோதரி. ஜாஸ்மின், SMMI

12. அருட்சகோதரி. பிரின்சி, SMMI

13. அருட்சகோதரி. டெல்பின், SMMI

வழித்தடம் : கோவில்பட்டி -கடம்பூர் வழித்தடத்தில் வடக்கு வண்டானம் உள்ளது. 

Location map : https://g.co/kgs/abZG1k

வரலாறு :

தென் தமிழக கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தாய்க்கோவில் என அழைக்கப்படும் காமநாயக்கன்பட்டி புனித பரலோக அன்னை திருத்தலத்தின் ஒரு பகுதியாக வடக்கு வண்டானம் இருந்த தொடக்க காலத்தில் ஓலை குடிசை ஆலயம் கட்டப்பட்டு, கிறிஸ்தவ விசுவாசம் வளர்க்கப்பட்டு, ஆலமரம் போல தழைத்து வளர்ந்தது.

தற்போது உள்ள ஆலயமானது அருட்திரு. தைரியநாதர் பணிக்காலத்தில் 1886 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, 1905 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. 1925 ஆம் ஆண்டு ஆலய மண்டபம் கட்டப்பட்டது. பின்னர் மண்டபமானது 1995 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. 

காமநாயக்கன்பட்டியிலிருந்து 1961 ஆம் ஆண்டு தேர்வு நிலை பங்காக வடக்கு வண்டானம் புனித சவேரியார் ஆலயம் பிரிக்கப்பட்டது. 01.01.1964 அன்று தனிப்பங்காக உயர்த்தப் பட்டது. 

1999 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் ஆலய புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டது. 

மண்ணின் மைந்தர் ஆயர் மேதகு ச. அந்தோனிசாமி:

வடக்கு வண்டானம் பங்கின் மைந்தரான மேதகு அந்தோனிசாமி அவர்கள் 15.12.2019 அன்று பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயராக திருநிலைப் படுத்தப்பட்டார். இந்த நாளில் வடக்கு வண்டானம் மக்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர். 

ஆயராக பொறுப்பேற்ற மறுதினம் 16.12.2019 அன்று மேதகு ஆயர். அந்தோனிசாமி அவர்கள், வடக்கு வண்டானம் புனித சவேரியார் ஆலயத்தில் நன்றி திருப்பலி நிறைவேற்றினார். இப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் இணைந்து இந்த நாளை சிறப்பித்து, தங்கள் மண்ணின் மைந்தரான ஆயருக்கு வாழ்த்துகள் தெரிவித்து நன்றி பாராட்டியது என்றும் நினைவில் நிற்கும் நிகழ்வாகும்... 

பங்கில் உள்ள கெபிகள் :

1. புனித மிக்கேல் அதிதூதர் கெபி 

2. புனித செபஸ்தியார் கெபி 

3. புனித அந்தோனியார் கெபி 

4. புனித யாகப்பர் கெபி

பங்கில் 

St. Xavier middle school

St. Joseph home for children

Fr. Anna Samy computer centre ஆகியவை உள்ளன. 

Sacred heart Sisters, Vellore:

இச்சபையின் அருட்சகோதரிகள் பணியாற்றி வருகின்றனர்.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :

பாலர் சபை

புனித சவேரியார் இளைஞர் மன்றம் 

புனித மிக்கேல் நற்பணி மன்றம். 

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர் பட்டியல் :

1. அருட்திரு. புஷ்பநாதர் 

2. அருட்திரு. R. S. அருளானந்தம் 

3. அருட்திரு. P. S. அந்தோணிசாமி

4. அருட்திரு. S. ஆரோக்கியசாமி

5. அருட்திரு. ஜான் மீம்பிளிக்கல்

6. அருட்திரு. P. ஞானப்பிரகாசம்

7. அருட்திரு. T. A. பெர்க்மான்ஸ் 

8. அருட்திரு. பாஸ்கல் டி சில்வா

9. அருட்திரு. M. பெர்க்மான்ஸ் 

10. அருட்திரு. A. ஜேம்ஸ் 

11.  அருட்திரு. S. A. அன்னாசாமி

12. அருட்திரு. ராசையா 

13. அருட்திரு. ஜஸ்டின் 

14. அருட்திரு. யூஜின் டேவிட் 

15. அருட்திரு. V. S. அந்தோனிராஜ் 

16. அருட்திரு. T. A. பெர்க்மான்ஸ் 

17. அருட்திரு. சகாயதாசன் 

18. அருட்திரு. ச. அருள் நேசமணி (தற்போது..)

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இவ்வாலயம் வந்து ஜெபித்து குழந்தை செல்வம் பெற்று, சாட்சியம் பகிர்கிறார்கள். நோயுற்றோர் அற்புத சுகம் பெறுகின்றனர். திருமண தடை நீங்கி இல்லற வாழ்வில் இணைந்தவர் பலர். 

நீங்களும் வண்டானத்து புனித சவேரியாரிடம் வாருங்கள்... இறையாசீர் பெற்று செல்லுங்கள்.. 

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்திரு. ச. அருள் நேசமணி.