68 புனித சவேரியார் ஆலயம், புல்லங்குழி


புனித சவேரியார் ஆலயம்

இடம் : புல்லங்குழி.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

நிலை : கிளைப்பங்கு.
பங்கு : புனித அந்தோணியார் ஆலயம், புல்லாணி.

குடும்பங்கள் : 20
அன்பியங்கள் : இல்லை.

ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு.

பங்குத்தந்தை : அருட்பணி ஷாஜி.
இணை பங்குத்தந்தை : அருட்பணி
லிதின்.

திருவிழா : டிசம்பர் மாதத்தில் மூன்று நாட்கள்.

வரலாறு :

தொலையாவட்டம் மீன் சந்தையை மையப்படுத்தி, உள்நாட்டு மீனவர்களுக்காக திரு. ஆன்றனி கோல்டுவின் அவர்கள் கொடுத்த நிலத்தில் ஒரு சிறு ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டு, இலவுவிளை பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது. அன்னாள் சபை அருட்சகோதரிகள் இலவுவிளையில் இருந்து இங்கு வந்து இறைப்பணி செய்து வந்தனர்.


2002 ல் அருட்பணி. இராபர்ட் பென்னி பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்ட ஆரம்பிக்கப்பட்டு அருட்பணி. வர்கீஸ் பணிக்காலத்தில் நிறைவு பெற்று அர்ச்சிக்கப் பட்டது. பின்னர் புல்லாணி பங்காக உயர்த்தப் பட்டவுடன் அதன் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

வழித்தடம் :

மார்த்தாண்டத்திலிருந்து விரிகோடு வழியாக தொலையாவட்டம் நோக்கி வருகிற போது புல்லாணி பங்கு ஆலயத்தைத் தாண்டி வலப்புறம் செல்கின்ற சானலை ஒட்டிய சாலையில் சென்று அங்கிருந்து இடப்புறம் திரும்பினால் புல்லங்குழி ஆலயத்தை சென்றடையலாம்.

அல்லது முள்ளங்கனாவிளையிலிருந்து தொலையாவட்டம் சாலையில் வருகின்ற போது செம்முதல் தாண்டி வலப்புறம் சென்றாலும் இவ்வாலயத்தை அடையலாம்.

(வெளியுலகில் அதிகம் அறியப்படாத இந்த ஆலயத்தை, அனைவரும் அறிந்திடும் வகையில் அதிகமாக பகிர்வோம்)