317 லூர்து அன்னை ஆலயம், புன்னைநகர்


லூர்து அன்னை ஆலயம்.

இடம் : புன்னைநகர், நாகர்கோவில்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்

நிலை : பங்குத்தளம்
கிளைகள் : இல்லை

பங்குத்தந்தை : அருட்பணி சாலமன்

குடும்பங்கள் : 675
அன்பியங்கள் : 13

ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணி மற்றும் மாலை 05.00 மணிக்கும்.

மாதத்தின் 3வது ஞாயிறு : காலை 10.30 மணிக்கு ஆங்கில திருப்பலி

திங்கள், செவ்வாய், புதன், வியாழன், சனி திருப்பலி : காலை 06.00 மணிக்கு.

செய்வாய் மாலை 06.00 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி.

வெள்ளி மாலை 06.00 மணிக்கு புனித லூர்து அன்னை நவநாள் திருப்பலி.

திருவிழா : 
ஈஸ்டர் ஞாயிறுக்கு பிறகு வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பித்து பத்து நாட்கள் நடைபெறும்.

வழித்தடம் :
நாகர்கோவில் மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, இராஜாக்கமங்கலம் செல்லும் அனைத்து பேருந்துகளும் இவ்வழியாகத் தான் செல்லும். இறங்குமிடம் புன்னைநகர்.

மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்பணி. M. அந்தோணிமுத்து
2. அருட்பணி. M. தேவசகாயம் 
3. அருட்பணி. D. பெர்க்மான்ஸ் 
4. அருட்பணி. D. ஜேசுதாசன் 
5. அருட்பணி. M. அருள்தேவதாசன்
6.அருட்பணி. அ. அனிசேவியர்.
7. அருட்பணி. J. அல்பரிக் நிமலன், Cap 
8. அருட்பணி. M. ஆரோக்கிய சிறில், OMD

1. அருட்சகோதரி. மேரி பெனடிக்டா 
2. அருட்சகோதரி. மேரி சூசன்னா
3. அருட்சகோதரி. ஜோசபின்மேரி
4. அருட்சகோதரி. மரிய பாக்கியம் 
5. அருட்சகோதரி. பீடு
6. அருட்சகோதரி. ம. பெலிக்ஸ் ஜெயா
7. அருட்சகோதரி. செலஸ்டின் 
8. அருட்சகோதரி. லீமாறோஸ்
9. அருட்சகோதரி. ரோஸ்மேரி 
10. அருட்சகோதரி. டாரதி ஆன்றனி.

புன்னைநகர் ஆலய வரலாறு :

புன்னை மரங்கள் நிறைந்த காடாக காணப்பட்ட காரணத்தினால் புன்னைக் காட்டுவிளை என்று அழைக்கப்பட்டு வந்த புன்னைநகர் புனித லூர்து அன்னையை பாதுகாவலியாகக் கொண்ட ஊராகும்.

முதன் முதலில் அன்னையின் பெயரில் ஓலைக்கூரை வேயப்பட்ட ஒரு ஜெபக்கூடம் தற்போது கலையரங்கம் அமைந்துள்ள இடத்தில் அமைக்கப்பட்டது. 1946 -ஆம் ஆண்டு அந்த ஜெபக்கூடம் மேற்கூரை ஓடுவேயப்பட்டு விரிவுபடுத்தப் பட்டது. இதனால் ஜெபக்கூடம் ஆலயமாக மாறியது.

குருசடி பங்குத்தந்தையாக அருட்தந்தை D. C ஆன்றனி அவர்கள் பணியாற்றிய போது, ஆயர் மேதகு ஆஞ்ஞிசாமி அவர்களின் அனுமதியுடன், இங்கு முதன் முதலில் 22-11-1953 அன்று திருப்பலி நிறைவேற்றப் பட்டு, குருசடி பங்கின் கிளையாக ஆனது.

1970 -இம் ஆண்டு கார்மல் நகர் தனிப்பங்கான போது நிர்வாக வசதிக்காக புன்னைநகர், குருசடி பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு கார்மல்நகர் பங்குடன் இணைக்கப்பட்டது.

மீண்டும் சில காரணங்களால் 2004 -ஆம் ஆண்டு முதல் புன்னைநகர் குருசடிப் பங்கின் கிளைப் பங்காக கொண்டு வரப்பட்டது.

1980 -ஆம் ஆண்டில் புதிய ஆலய கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 30-05-1982 அன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு ஆரோக்கிய சாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. இந்த ஆலயத்தின் அமைப்பு வட்ட வடிவில் ஆனது.

இவ்வாறாக சுமார் 50 ஆண்டுகளாக கிளைப்பங்காக இருந்த புன்னைநகர் பங்கானது கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் 23-11-2008 அன்று தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.