741 புனித அந்தோனியார் ஆலயம், குளத்தூர்


புனித அந்தோனியார் ஆலயம்

இடம்: குளத்தூர்

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: குறுக்குச்சாலை

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித வியாகுல மாதா ஆலயம், சிப்பிகுளம்

பங்குத்தந்தை: அருட்பணி. R. சந்தியாகு

குடும்பங்கள்: 5

ஞாயிறு திருப்பலி காலை 09:30 மணிக்கு

திருவிழா: ஜூன் 1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை

வழித்தடம்: வேப்பலோடையில் இருந்து வேம்பார் செல்லும் வழித்தடத்தில், குளத்தூர் அமைந்துள்ளது.

Location map: 

St Antony's Church, Kulathoor

https://maps.app.goo.gl/1BWWhZzCNUyyRXiX6

வரலாறு:

தூத்துக்குடி கடற்கரை சாலையின் அருகில் குளத்தூர் எனும் ஊரில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெ. முத்து பெருமாள் என்பவர். இவர் பிற சமயத்தை சார்ந்தவர். குளத்தூரில் பெரும்பாலும் பிறசமய மக்களே அதிகமாக வாழ்ந்து வந்தனர்.

முத்து பெருமாளுக்கு திருமணத்திற்கு முன்பே கழுத்தில் கட்டி ஒன்று உருவாகி, மிகுந்த அவதிக்குள்ளானார். கோடி அற்புதர் புனித அந்தோனியாரின் புதுமைகளை கேள்விப்பட்டு, அவர் மீது பற்று கொண்டு ஜெபிக்க கழுத்து கட்டி மறைந்து நலமடைந்துள்ளார். அன்று முதல் தவறாது ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் புளியம்பட்டி கோடி அற்புதர் புனித அந்தோனியார் ஆலயம் சென்று ஜெபித்து நலமும் வளமும் பெற்றுள்ளார். அதன்பின் தமது பெயரை முத்துஜான் என மாற்றிக் கொண்டு குடும்பத்துடன் கத்தோலிக்க கிறிஸ்தவரானார்.

குளத்தூர் மக்களும் புனித அந்தோனியாரின் மகிமையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கில், சிப்பிகுளம் பங்குத்தந்தை அருட்பணி. R. S. அகஸ்டின் அவர்களைச் சந்தித்து, குளத்தூரில் ஆலயம் அமைக்க தமக்கு சொந்தமான 22 சென்ட் நிலத்தை சிப்பிகுளம் பங்கின் பெயருக்கு எழுதிக் கொடுத்தார்.

1989 ஆம் ஆண்டு சிப்பிகுளம் பங்குத்தந்தை அருட்பணி. ஜான் சேவியர் அவர்களிடம் அப்போதைய ஆயர் மேதகு S. T. அமலநாதர் அவர்கள் குளத்தூரில் ஆலயம் அமைப்பது தொடர்பாக பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஆலயத்திற்கென கொடுக்கப் பட்ட இடத்தில் சிறு ஓலைக் குடிசை ஆலயம் கட்டப்பட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. 

12.03.1989 அன்று பங்குத்தந்தை அருட்பணி. ஜான் சேவியர் அவர்களால் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆலயப் பணிகள் நிறைவு பெற்று, 13.06.1991 அன்று ஆயர் மேதகு S. T. அமலநாதர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு பாதயாத்திரை செல்லம் மக்கள் இந்த ஆலயத்தில் தங்கி, பின்னர் தங்களது திருப்பயணத்தை தொடர்கின்றனர்.

சிறிய ஆலயமாக இருந்தாலும், கோடி அற்புதர், புதுமைகள் பல புரியும் புனித அந்தோனியாரின் வல்லமை நிரம்பிய இவ்வாலயம் வாரீர்.....!!! இறையாசீர் பெறுவீர்....!!

தகவல்கள் மற்றும் புகைப்படம்: பங்குத்தந்தை அருள்பணி. R. சந்தியாகு அவர்கள்.