புனித லூர்து அன்னை ஆலயம்.
🍇இடம் : கலந்தபனை, பணகுடி (PO)
🍓நிலை : கிளைப்பங்கு
🍓பங்கு : புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், புஷ்பவனம்.
🍑மாவட்டம் : திருநெல்வேலி
🍑மறை மாவட்டம் : தூத்துக்குடி
🍑மறை வட்டம் : வடக்கன்குளம்
💐பங்குத்தந்தை : அருட்பணி அருள்மணி
🌺குடும்பங்கள் : 35
🌺அன்பியங்கள் : 3
💥ஞாயிறு திருப்பலி : காலை 09.15 மணிக்கு.
💎மண்ணின் இறையழைத்தல் :
💐அருட்சகோதரி ஞானசெல்வி.
🎉திருவிழா : பெப்ரவரி மாதம் 02-ம் தேதி முதல் 11 ம் தேதி வரையிலான பத்து நாட்கள்.
👉 வழித்தடம் : வள்ளியூர் - பணகுடி தேசிய நெடுஞ்சாலையில் கலந்தபனை அமைந்துள்ளது.
வரலாறு :
*********
🌳பனை மரங்கள் அடர்ந்த பகுதியாக காணப்பட்ட இந்தப் பகுதியில் ராஜாக்கள் காலத்தில் நடை பயணமாகவே மக்கள் பயணம் செய்து வந்தனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அரசு அதிகாரிகளும், ஆட்சித் தலைவர் மற்றும் உயர் பதவியினர், பனை மரங்கள் நிறைந்த இந்த இடத்தில் கலந்து பேசுவார்கள். ஆகவே இவ்வூருக்கு கலந்தபனை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
🍀திரு. வெள்ளையா நாடார் அவர்கள் தனது நிலத்தை, தமது மருமகன் திரு. குருசு மிக்கேல் நாடார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆலயம் கட்ட இலவசமாக கொடுத்தார். 12-02-1941அன்று ஒரு சிறு ஓலைக்கூரை ஆலயம் கட்டப்பட்டு பணகுடி பங்கின் கிளையாக செயல்பட்டு வந்தது. அப்போது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஞாயிறு திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.
🍀1961 ல் ஆலயத்திற்கு ஓடு வேயப்பட்டது.
🍇அருட்பணி லூர்து மணி பணிக்காலத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப் பட்டன.
🎉1982 ல் அருட்பணி S. அமலதாஸ் அவர்களின் பணிக்காலத்தில் பெப்ரவரி மாதம் 02 ம் தேதி முதல் 11 ம் தேதி வரையிலான பத்து நாட்கள் திருவிழா கொண்டாடும் வழக்கம் துவக்கப்பட்டது. இன்று வரையில் இந்த வழக்கம் தொடர்ந்து வருகிறது.
🦋அருட்பணி பன்னீர்செல்வம் பணிக்காலத்தில் தற்போதைய ஆலயத்திற்கு மேதகு ஆயர் அமலநாதர் அவர்களால் 1992 ல் அடிக்கல் போடப்பட்டது.
⛪பல்வேறு சூழ்நிலைகளால் ஆலயப் பணிகள் மெதுவாக நடைபெற்று வந்த வேளையில் பணிபொறுப்பேற்ற அருட்பணி பிரான்சிஸ் தேவசகாயம் அவர்களால் பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, மேதகு ஆயரின் ஆசியுடன் அருட்பணி தேவராஜன் அவர்களால் 1995 ம் ஆண்டு அர்ச்சிக்கப் பட்டது.
🍇அருட்பணி பிரான்சிஸ் தேவசகாயம் அவர்களால் பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டு சில காலம் இங்கு தங்கி இறைப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
🌳ஆலய கொடிமரமானது திரு. சிங்கராயர் அவர்களின் நன்கொடையில், வள்ளியூரிலிருந்து மக்களால் தோளில் சுமந்து கொண்டு வரப்பட்டு நிலை நிறுத்தப் பட்டது குறிப்பிடத்தக்கது.
🌴ஆலயத்தை சுற்றிலும் மதிற்சுவர் கட்டப்பட்டு தென்னை மரங்களும், வேப்ப மரங்களும் வைக்கப்பட்டு சிறப்புற திகழ்கிறது.
🍚தவக்காலத்தில் பெரிய புதன் மற்றும் 10 திருவிழா என ஆண்டுக்கு இரண்டு முறைகள் பொது அசன விருந்து நடைபெறுகிறது. இதில் சாதி சமய பேதமின்றி அனைத்து மக்களும் கலந்து கொள்வது தனிச்சிறப்பு.
🌺புஷ்பவனம் தனிப்பங்காக ஆனவுடன், பணகுடியிலிருந்து மாற்றப்பட்டு புஷ்பவனத்தின் கிளைப் பங்காக கலந்தபனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
🍇1961 ம் ஆண்டு முதல் இவ்வாலய வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றவர் திரு. ரத்தின சுவாமி ஆசிரியர் என்பது என்றென்றும் நினைவு கூறத் தக்கது.
🙏தேசிய நெடுஞ்சாலையில் இவ்வாலயம் அமைந்துள்ளதாலும், பல்வேறு வேண்டுதல்களுடன் மக்கள் இவ்வாலயம் வந்து ஜெபித்து அருள் வரங்களை பெற்றுச் செல்கின்றனர். இவ்வாறு சிறப்பு பெற்று விளங்கும் இவ்வாலயத்தை "சத்திய வேதக் கோயில்"என்று மக்கள் அன்போடு அழைக்கின்றனர்.
👉தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி அருள்மணி மற்றும் ஆலய நிர்வாகிகள்.