57 புனித சவேரியார் ஆலயம், திருமணங்குடி


புனித சவேரியார் ஆலயம்.

இடம் : திருமணங்குடி.

மாவட்டம் : நாகப்பட்டினம்
மறை மாவட்டம் : தஞ்சாவூர்.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித அந்தோணியார் ஆலயம், கருங்கண்ணி.

குடும்பங்கள் : 55
அன்பியங்கள் : 2

ஞாயிறு திருப்பலி : இல்லை.

செவ்வாய் மாலை 07.30 மணிக்கும் வியாழன் மாலை 07.30 மணிக்கும் திருப்பலி நடைபெறும்.

பங்குத்தந்தை : அருட்பணி சபரிமுத்து.

திருவிழா : பெரிய திருவிழா ஏப்ரல் மாதத்தில் 11 நாட்கள்.

சிறிய திருவிழா டிசம்பர் 3ம் தேதி ஒரு நாள்.

சிறு குறிப்பு :

புனித சவேரியார் இந்தியாவில் நற்செய்தி பணியாற்றிய போது இப்பகுதியிலும் வந்து மறைபரப்பு பணி செய்ததாக கூறப்படுகின்றது. இவ்வாலயத்தின் பழைய ஆலயத்தை அகற்றி புது ஆலயம் கட்டுகின்ற வேளையில் புனித சவேரியார் இங்கு மறைபரப்பு பணி செய்ததை அறிந்திருந்த கோவா நகரத்து மக்கள், ஆலய கட்டுமானப் பணிகளுக்கு உதவி செய்தனர். பங்கு மக்களின் அயராத உழைப்பு, நன்கொடை மற்றும் அருட்பணியாளர்களின் வழி நடத்துதலில் ஆலயப் பணிகள் நிறைவு பெற்று 2017 ம் ஆண்டு புதிய ஆலயம் அர்ச்சிக்கப் பட்டது. திருவிழா காலங்களில் கோவா நகரத்து மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டு சிறப்புற செய்வார்கள்.

இந்த ஆலயமானது திருத்துறைப்பூண்டி - வேளாங்கண்ணி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.