156 புனித சூசையப்பர் ஆலயம், வாறுவிளை

  

புனித சூசையப்பர் ஆலயம்

இடம் : வாறுவிளை. 

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறை மாவட்டம் : குழித்துறை

மறைவட்டம் : வேங்கோடு

நிலை : கிளைப்பங்கு

பங்கு : புனித குழந்தை தெரசாள் ஆலயம், காஞ்சாம்புறம்

பங்குத்தந்தை : அருட்பணி. பெஞ்சமின் (வேங்கோடு வட்டார முதன்மைப் பணியாளர்) 

குடும்பங்கள் : 180

அன்பியங்கள் : 7

ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு 

புதன் : மாலை 05.30 மணிக்கு புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி 

மாதத்தின் முதல் ஞாயிறு : காலை 07.30 மணிக்கு நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு வழிபாடு.

திருவிழா : மே மாதம் மூன்றாம் வாரத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும்.

Location map: https://g.co/kgs/6578ZS

வாறுவிளை ஆலய வரலாறு :

வாறுவிளை பகுதி இறைமக்கள் ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க வாவறை ஆலயத்திற்கு செல்வது வழக்கமாக இருந்தது. 

இவ்வேளையில் மக்களின் ஆன்மீகத் தேவையை கருத்தில் கொண்டு வாறுவிளையில் 1964 ஆம் ஆண்டில் சிற்றாலயம் கட்டி, அது முதல் வாவறை பங்கின் கிளையாக செயல்பட்டு, திருப்பலி நடைபெற்று வந்தது. பின்னர் 1972 ஆம் ஆண்டு முதல் காஞ்சாம்புறம் பங்கின் கிளையாக இயங்கி வருகிறது.

அருட்பணி. அமிர்தராஜ் அவர்கள் பணிக்காலத்தில் புதிதாக ஓர் ஆலயம் கட்டப்பட்டு, 1974 ம் ஆண்டு ஆயர் மேதகு. ஆரோக்கிய சாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 

தொடர்ந்து திருத்தூது கழகங்கள் ஏற்படுத்தப் பட்டன. மக்களின் ஈடுபாட்டால் ஆலய வளாகத்தில் குருசடி ஒன்று கட்டி 1976 ஆம் ஆண்டு அர்ச்சிக்கப்பட்டது. 

பங்கின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தை ஒட்டி 1997 ல் ஒரு ஏழை பெண்ணிற்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

இயேசுவின் திரு இருதய சபை அருட்சகோதரிகளின் வழி தடத்துதலில், மக்கள் இறைவுறவில் வளர்ந்து வருகின்றனர். 

2007 ஆம் ஆண்டு சமூக அரங்கம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, போதிய நிதி இல்லாமையால் தொய்வுற்றது. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு அருட்பணி. பெஞ்சமின் மற்றும் அருட்பணி. அமலதாஸ் அவர்களின் முயற்சியின் விளைவாக தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

2016-2018 காலத்தில் ரூபாய் ஒரு இலட்சம், ஏழைகளுக்கு உதவியாக செய்துள்ளனர்.

நாற்பது ஆண்டு பழமையான குருசடி அகற்றப்பட்டு 08/03/2017 ல் அருட்பணி. அமலதாஸ் அவர்களால் அடிக்கல் இடப்பட்டு, 15/05/2017 ல் வேங்கோடு வட்டார முதல்வர் அருட்பணி. பெஞ்சமின் அவர்களால் அர்ச்சித்து அர்ப்பணிக்கப்பட்டது.

ஆலயம் விரிவாக்கப் பணிக்காக 07/10/2018 ல் அருட்பணி. செல்வநாதன் அவர்களால் அடிக்கல் இடப்பட்டு 21/11/2018 அன்று பணிகள் ஆரம்பமானது.

தொடர்ந்து பங்குத்தந்தை அருட்பணி. பெஞ்சமின் அவர்களின் சிறப்பான வழிகாட்டலில், வாறுவிளை மக்களின் முழு ஒத்துழைப்புடன் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 22.02.2020 அன்று குழித்துறை மறைமாவட்ட ஆயர் மேதகு ஜெறோம் தாஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.