அற்புத குழந்தை இயேசு மலங்கரை கத்தோலிக்க தேவாலயம்
இடம் : ARP Camp road, கடற்கரை சாலை, நாகர்கோவில்.
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : மார்த்தாண்டம்
மறை வட்டம் : நாகர்கோவில்
நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித அந்தோணியார் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம், கிறிஸ்துவிளாகம், நாகர்கோவில் 1.
பங்குத்தந்தை : அருட்பணி. S. ராபர்ட்
குடும்பங்கள் : 20
ஞாயிறு காலை 09.00 மணிக்கு காலை ஜெபம், 09.30 மணிக்கு திருப்பலி.
வெள்ளி மாலை 06.00 மணிக்கு மாலை ஜெபம், திருப்பலி.
திருவிழா : டிசம்பர் மாதம் 29, 30, 31 தேதிகளில்.
வழித்தடம் : நாகர்கோவில் -ஈத்தாமொழி -பீச் ரோடு.
வரலாறு :
அற்புத குழந்தை இயேசு ஆலயமானது, செட்டிகுளம் MGR நகரில் கட்டப்பட்டு, 08.09.1981 அன்று திருவனந்தபுரம் மறை மாநில துணை ஆயர் பேரருட்ததந்தை. லாரன்ஸ் மார் எப்ரேம் அவர்கள் முன்னிலையில், திருவனந்தபுரம் மறை மாநில பேரருட் பெருந்தகை பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் OIC. M.A.D.D அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
இவ்வாலயமானது 2010 ஆம் ஆண்டில் அருட்பணி. ஜான்குமார் அவர்களால் MGR நகரிலிருந்து மாற்றப்பட்டு, பீச் ரோடில் புதிதாக கட்டப்பட்டது.
ஆலயத்துடன் DM அருட்சகோதரிகள் இல்லம் ஒன்று உள்ளது. மேலும் இச்சபை அருட்சகோதரிகள் நடத்தும் TARA English medium primary school ஒன்று குழந்தைகளுக்கு நல்ல கல்வியையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.