887 இயேசுவின் திருஇருதய ஆலயம், வி மாதேப்பள்ளி

   

இயேசுவின் திருஇருதய ஆலயம்

இடம்: மாதேப்பள்ளி எக்ஸ் ரோடு, V.மாதேப்பள்ளி, வேப்பனப்பள்ளி தாலுகா, கிருஷ்ணகிரி, 635121

மாவட்டம்: கிருஷ்ணகிரி

மறைமாவட்டம்: தருமபுரி

மறைவட்டம்: கிருஷ்ணகிரி

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித பாத்திமா அன்னை திருத்தலம், கிருஷ்ணகிரி

பங்குப்பணியாளர் அருள்பணி. இசையாஸ்

உதவி பங்குப்பணியாளர் அருள்பணி. செபாஸ்டின்

குடும்பங்கள்: 7

அன்பியம்: 1

மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிறு காலை 11:00 மணிக்கு திருப்பலி

திருவிழா: குறிப்பிட்ட நாள் இல்லை. ஆனால் வருடத்திற்கு ஒருமுறை சிறப்பாக திருவிழா கொண்டாடப்படுகிறது.

வழித்தடம்: கிருஷ்ணகிரியிலிருந்து பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் குந்தாரப்பள்ளி கூட்ரோடு வலப்புறம் சென்று, வேப்பனப்பள்ளி சாலையில் பெரிய சூளைமேடு (மாருதி பள்ளி) கூட்ரோடுக்கு இடதுபுறமாக சென்று வி. மாதேப்பள்ளி போகும் வழியில் இடதுபுறம் இவ்வாலயம் அமைந்துள்ளது.

Location map: https://maps.app.goo.gl/NnPgJsT6PmkNSmh87

வரலாறு:

கிருஷ்ணகிரி மறைமாவட்டம் எலத்திகிரி பங்கில் உள்ள காத்தான்பள்ளம் என்ற சிறிய ஊரில் ஏற்பட்ட வறட்சி, பஞ்சம் காரணமாக 1978 ஆம் ஆண்டு செல்லப்பன் மற்றும் பெரியநாயகம் ஆகிய இரண்டு குடும்பங்கள் முதன் முறையாக V. மாதேப்பள்ளிக்கு குடியேறினார்கள். இவர்கள் ஒன்பதரை ஏக்கர் நிலத்தை வாங்கி, விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர்.

பின் நாட்களில் பெரியநாயகம் தன் நிலத்தை விற்றுவிட்டு கெலமங்கலம் என்ற ஊருக்கு குடியேறினார். இன்றும் செல்லப்பன் குடும்பத்தினர் மட்டும் இங்கே வாழ்ந்து வருகின்றனர். 

இங்கு ஆலயம் இல்லை எனவே இவ்விடத்தில், மாதந்தோறும் திருப்பலி நிறைவேற்ற குருக்கள் செல்லவில்லை.  எனவே திரு. செல்வப்பன் இறந்தபோது எலத்தகிரி பங்குதந்தை அருட்பணி. A. செபஸ்டின் அவர்கள் அடக்க சடங்கிற்கு வந்து திருப்பலி நிறைவேற்றியுள்ளார். வீட்டின் முற்றப்பகுதியில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. கிருஷ்ணகிரி பங்குத்தந்தை அருட்தந்தை சவரியப்பன் அவர்கள் மாதேப்பள்ளியில் மாதந்தோறும் திருப்பலி நிறைவேற்ற வருகை தந்தார்.

திருமதி. அகஸ்டினா மேரி தனது ஒரு ஏக்கர் நிலத்தில் 18 சென்ட் நிலத்தை, ஆலயம் கட்ட தானமாக பங்குத் தந்தையிடம் வழங்கினார். அந்த நிலத்தில் குடிசை அமைத்து 2006 முதல் 2008 வரை திருப்பலி நிறைவேற்றப்பட்டது. 

இந்த நிலத்தின் ஓரத்தில் லூர்து மாதா கெபி கட்டப்பட்டது. ஆலயம் கட்டும் பணிக்காக இங்குள்ளவர்களே, கிறிஸ்துவ மக்களிடம் நன்கொடைகள் பெற்று அருள்தந்தை M. ஜெகராஜ் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆலயம் கட்டப்பட்டு, 20.09.2008 அன்று பங்குத்தந்தை அருட்பணி. ஜெகராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது .

அன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குத்தந்தை, திருப்பலி நிறைவேற்றி வந்தார். பின் 2009 முதல் மாதத்தின் 2 ஆம் மற்றும் 4 ஆம் ஞாயிறுகளில் காலை 11.00 மணிக்கு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மேலும் அனைத்து பெருவிழா நாட்கள் மற்றும் குடும்பங்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு, திருப்பலி நிறைவேற்றப் படுகின்றன.

பிறமத சகோதர, சகோதரிகளும் இவ்வாலயத்திற்கு வந்து இறையாசீர் பெற்றுச்செல்கின்றனர்.

தகவல்கள்: பங்குத்தந்தையின் வழிகாட்டலில் ஆலய உறுப்பினர் திரு. ஏசுதாஸ் அவர்கள்.

ஆலய புகைப்படங்கள்: ஆலய உபதேசியார் திரு. ஜோஷ்வா அவர்கள்.