இடம் : சங்கனான்குளம், நாங்குநேரி தாலுகா, சங்கனான்குளம் அஞ்சல்
மாவட்டம் : திருநெல்வேலி
மறைமாவட்டம் : தூத்துக்குடி
மறைவட்டம் : சாத்தான்குளம்
நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித ஜெபமாலை அன்னை ஆலயம், மன்னார்புரம்
பங்குத்தந்தை : அருட்திரு. D. சகாயராஜ் வல்தாரிஸ்
குடும்பங்கள் : 2
மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் திருப்பலி
நாள்தோறும் மாலை 06.00 மணிக்கு செபம்.
திருவிழா : நவம்பர் மாதம் 23 ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 02ம் தேதி வரை.
வழித்தடம் : நாகர்கோவில் -வள்ளியூர் -கள்ளிகுளம் -மன்னார்புரம். இங்கிருந்து 3கி.மீ தொலைவில் சங்கனான்குளம் உள்ளது.
நாங்குநேரி -திசையன்விளை சாலையில், மன்னார்புரத்திற்கு முன்பாக (INS சாலை) சங்கனான்குளம் உள்ளது.
Location map : https://g.co/kgs/N4qWC3
வரலாறு :
புனித பிரான்சிஸ் சவேரியார் கோட்டாறு மணப்பாடு பகுதிகளில் நற்செய்தி பணிபுரிந்த வேளையில், சங்கனான்குளம் ஊருக்கு கால்நடையாக வந்த போது ஒரு வீட்டில் தாகத்திற்கு தண்ணீர் கேட்டுவாங்கி குடித்து விட்டு, இந்த ஊரில் ஒரு ஆலயம் கட்டுமாறு சொல்லி சென்றுள்ளார்.
சொல்லிச் சென்றவர் புனித சவேரியார் என்று தெரியாமலேயே மக்கள் குடிசை ஆலயம் ஒன்றைக் கட்டினர். காலப்போக்கில் இங்கு ஆலயம் கட்டச் சொன்னவர் புனித சவேரியார் என்பதை அவரது பயணக் குறிப்புகள் வழியாக மக்கள் தெரிந்து கொண்டனர். ஆகவே புதிய ஓட்டுக்கூரை ஆலயம் 1945 ம் ஆண்டு கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.
பின்னர் ஓட்டுக்கூரை மாற்றப்பட்டு, நன்கொடையாளர்களின் உதவியுடன் கான்கிரீட் அமைத்து, கோபுரம் கட்டப்பட்டு, ஆலயம் புதுப்பிக்கப்பட்டு 23.11.2005 அன்று அர்ச்சிக்கப் பட்டது.
சங்கனான்குளம் புனித சவேரியார் ஆலயமானது தொடக்கத்தில் சோமநாதபேரி பங்கின் கிளைப் பங்காகவும், பின்னர் அணக்கரை பங்கின் கிளைப் பங்காகவும், அதனைத் தொடர்ந்து தற்போது வரை மன்னார்புரம் பங்கின் கிளைப் பங்காகவும் செயல்பட்டு வருகிறது.
புனித சவேரியார் பாதம் பதிந்த இந்த புண்ணிய இடத்தில் அமைந்துள்ள ஆலயத்தில் பல புதுமைகள் நடந்து வருவதால் கிறிஸ்தவ மக்கள் மட்டுமல்லாது, இந்து சமய சகோதரர்கள் மனதினில் நீங்கா இடம்பெற்று, ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவை அவர்களே முன்நின்று மிகச் சிறப்பாக ஒருமித்து நடத்தி வருகிறார்கள்.
23.11.2020 திங்கட்கிழமை முதல் 02.12.2020 புதன்கிழமை வரை இவ்வாலய திருவிழா. திருவிழாவில் கலந்து கொண்டு இறைவனின் ஆசீர் பெற்றுச் செல்ல அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் சங்கனான்குளம் மக்கள்.