இடம் : மூலச்சல்
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித அந்தோணியார் ஆலயம், மணலி.
குடும்பங்கள் : 200
அன்பியங்கள்: 9
ஞாயிறு திருப்பலி : காலை 09.30 மணிக்கு.
பங்குத்தந்தை(2018): அருட்பணி N. மார்ட்டின்.
திருவிழா : மே மாதத்தில்.
வரலாறு :
கீழ மூலச்சல் ஊரில் கி.பி 1860 ஆம் ஆண்டில் வாழ்ந்த மக்களை, முளகுமூடு பங்கில் பணியாற்றிய அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளின் மறைப்பரப்பு பணியால் 100 க்கும் மேற்பட்ட மக்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாயினர்.
கிறிஸ்துவில் இணைந்த இம்மக்கள் பஜனை மடம் ஒன்று ஏற்படுத்தி இறைவார்த்தையை தியானித்து வந்தனர்.
கி.பி 1950 ல் முளகுமூடு பங்குத்தந்தையர்கள் அருட்பணி. மத்தியாஸ் மற்றும் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த அருட்பணி. ஜேம்ஸ் ஆகியோர் ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் சிற்றாலயம் ஒன்றை கட்டினார்கள். 1970 ல் இவ்வாலயம் தக்கலை பங்குடன் இணைக்கப்பட்டது.
ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டு 18.05.1990 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
04.06.2002 ல் மணலி தூய அந்தோனியார் ஆலயம் தனிப் பங்காக ஆனபின்னர், மூலச்சல் ஆலயம் மணலியின் கிளைப் பங்காக ஆனது.
மக்களின் தேவைக்காக சமூகக் கூடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
மண்ணின் மைந்தர்கள் :
அருட்பணி. ஜார்ஜ் பொன்னையா
அருட்சகோதரி கிறிஸ்டி
அருட்சகோதரி றோணிக்கம்
அருட்சகோதரி வாசினி.