வேலூர் மறைமாவட்டம்

வேலூர் மறைமாவட்டம் (இலத்தீன்: Velloren(sis)) என்பது வேலூர் விண்ணேற்பு அன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

மக்கள் தொகை கத்தோலிக்கர் - 146,091 (2004)

கதீட்ரல் விண்ணேற்பு அன்னை கதீட்ரல்


வரலாறு

நவம்பர் 13, 1952: சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு வேலூர் மறைமாவட்டம் உருவானது.

தலைமை ஆயர்கள்

வேலூர் மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)


ஆயர் சவுந்தர்ராஜ் பெரியநாயகம், S.D.B. (ஜூலை 11, 2006 – இதுவரை)

ஆயர் சின்னப்பா மலையப்பன், S.D.B. (நவம்பர் 17, 1993 – ஏப்ரல் 1, 2005)

ஆயர் மைக்கேல் அகஸ்டின் (ஜூன் 19, 1981 – பிப்ரவரி 18, 1992)

ஆயர் ராயப்பன் ஆன்டனி முத்து (நவம்பர் 23, 1970 – டிசம்பர் 19, 1980)

ஆயர் டேவிட் மரியநாயகம் சுவாமிதாஸ், S.D.B. (ஜூலை 4, 1956 – ஜூலை 17, 1969)

ஆயர் பாப்லோ மரியசெல்வம், S.D.B. (1953 – ஜூன் 25, 1954)

நன்றி: விக்கிபீடியா