225 தூய சகாய அன்னை ஆலயம், சகாயநகர்


தூய சகாய அன்னை ஆலயம்

இடம் : சகாயநகர், பாலப்பள்ளம் (via), சகாயநகர் (post)

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : பங்குத்தளம்
கிளைகள் : இல்லை

ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்தந்தை M. டைட்டஸ் மோகன்
இணை பங்குத்தந்தை : அருட்தந்தை லெவே பிரான்சிஸ்

குடும்பங்கள் : 488
அன்பியங்கள் : 15

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு

நாள்தோறும் காலை 06.30 மணிக்கு திருப்பலி

செவ்வாய் மாலை : 06.00 மணிக்கு செபமாலை, திருப்பலி ( புனித அந்தோணியார் திருத்தலத்தில்)

புதன் மாலை 04.45 மணிக்கு செபமாலை, திருப்பலி

திருவிழா : மே மாதத்தில் இரண்டாவது வெள்ளிக்கிழமை ஆரம்பித்து பத்து நாட்கள் நடைபெறும்.

வரலாறு :

முக்கடலும் சங்கமிக்கும் குமரி மாவட்டத்தில் பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது சகாயநகர் ஆலயம்.

தாய் : மாத்திரவிளை, புனித ஆரோபண அன்னை :

புனித சகாய அன்னை ஆலயத்திற்குட்பட்ட பகுதிகளான பண்டாரவிளை, பாலப்பள்ளம், கல்லுத்துறை, பாஞ்சிக்காடு, படுவூர் சங்கன்விளை, புதுவீட்டு விளாகம், கயத்தன்கரை, சகாயநகர், படுவூர் பிலாவிளை, பட்டன்விளை, கொட்டான்காச்சி விளை, தக்காளி விளை, ஈச்சிவிளை, ஆயினிவிளை, படுவூர் காட்டுவிளை, படுவூர் மேலவிளை, படுவூர் ஆகிய ஊர்களைச் சார்ந்த இறைமக்கள் அனைவருக்கும் தாய்ப்பங்காக திகழ்ந்தது மாத்திரவிளை ஆலயம்.

இம் மக்கள் திருப்பலி மற்றும் அனைத்து வழிபாட்டு நிகழ்வுகளுக்கும் நடைபயணமாக மாத்திரவிளை ஆலயத்திள்குத் தான் சென்று வரவேண்டியிருந்தது.

கிளைப்பங்கு:

மாத்திரவிளை ஆலயத்திற்கு சென்றுவருவதில் ஏற்பட்ட சிரமம் மற்றும் மழைக்காலங்களில் பாம்பூரி வாய்க்காலில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அப்போதைய ஆயர் மேதகு ஆஞ்ஞிசாமி அவர்கள், சகாயநகரில் ஒரு ஆலயம் அமைக்க ஆணை பிறப்பித்தார்கள்.

ஆயரின் அனுமதி கிடைத்ததும் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி தற்போதைய ஆலயம் இருக்கும் இடத்திற்கு தென் பகுதியில் ஓலையால் வேயப்பட்ட சிறு ஆலயம் எழுப்பினார்கள்.

இதற்கான நிலத்தை ஊர் மக்கள் இனாமாக கொடுத்தனர். 1964- ம் ஆண்டு அக்டோபர் 11 -ம் நாள் முதல் திருப்பலியை அன்றைய மாத்திரவிளை பங்குத்தந்தை அருட்தந்தை கிரகோரி அவர்கள் நிறைவேற்றினார். மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மக்களின் உற்சாகம் :

ஆரம்பத்தில் 8 சென்ட் நிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆலயத்தை உடனே மாற்றியமைக்க எண்ணி அதற்கான நிலத்தை அனைவரின் ஒத்துழைப்போடு வாங்கி 08-09-1965 அன்று மரியன்னையின் பிறந்தநாளில் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

அடுத்த வருடம் 1966 ம் ஆண்டு செப்டம்பர் 08- ம் தேதி ஆலயத்தை கட்டி முடித்து ஆயர் ஆஞ்ஞிசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

தனிப்பங்கு :

வேகமாக வளர்ந்து வந்த சகாயநகர் பங்கானது 1986 -ம் ஆண்டு மே 01- ம் நாள் தனிப்பங்காக உயர்த்தப் பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை டயனீஷியஸ் அவர்கள் பொறுப்பேற்றார்கள்.

தனிப்பங்காவற்கு வேண்டிய உதவிகள் அனைத்தையும் அப்போதைய மாத்திரவிளை பங்குத்தந்தை அருட்தந்தை ஜோசப் ராஜ் அவர்கள் முன்னின்று செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

புதிய ஆலயம் :

பழைய ஆலயத்தில் இடநெருக்கடி ஏற்பட்டதால், ஆலயத்தை விரிவு படுத்தி புதிய ஆலயம் கட்ட தீர்மானித்து, பங்குமக்களின் அயராத உழைப்பு, நன்கொடைகள் பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில் ஆறாயிரம் சதுர அடியில் புதுக் கோபுரத்துடன் கட்டப்பட்டு பொலிவு பெற்றது. 21-09-1999 ல் மேதகு ஆயர் லியோன் அ தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

மணலிக்குழிவிளை:

மும்மதக் கலையம்சங்களுடன் கூடியது மணலிக்குழிவிளை புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம். இந்த ஆலயம் அமைவதற்கு சகாயநகர் பங்கு மக்களின் அர்ப்பணிப்பு மிக அதிகமாக இருந்தது. அருட்தந்தை ஜெகத் கஸ்பார் அவர்களின் வழி நடத்துதலோடு இவ்வாலயம் உருவானது.

அந்தோணியார் திருத்தலம் :

படுவூர் காட்டுவிளையில் அமைக்கப்பட்ட புனித அந்தோணியார் குருசடி சகாயநகர் ஆலயத்துடன் இணைக்கப் பட்டது.

பங்கின் வளர்ச்சி :

தற்போது பங்குப் பணியாளர் இல்லம், அமைதி அரங்கம், பொதுக்குடிநீர்த் தொட்டி, சந்தைத்திடல், தூயகம், விற்பனை நிலையம், நூலகம், சுகாதார நிலையம், நியாயவிலைக் கடை, தபால் நிலையம் என பங்குத்தந்தையர்களின் வழி காட்டுதலில் பங்கு மக்களின் ஒத்துழைப்பும் இணைந்து செயல்பட்டு சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளது.

பங்கில் பணிபுரிந்த அருட்தந்தையர்கள்:

1. Fr டயனீஷியஸ் (1986-1987)
2. Fr அருள் ராஜ் (1987-1989)
3. Fr பிரான்சிஸ் வின்சென்ட் (1989-1991)
4. Fr ஆயர் இல்லம் (1991-1992)
5. Fr ஜெகத் கஸ்பார் (1992-1995)
6. Fr லூக்காஸ், ஸ்தனிஸ்லாஸ் (1995-1999)
7. Fr ஜோஸ் ராபின்சன் (1999-2001)
8. Fr யூஜின் (2001-2002)
9. Fr ஜோஸ் ராபின்சன் (2002)
10. Fr ஜோசப் ராஜ் (2002-2006)
11. Fr மைக்கேல் ராஜ் (2006-2007)
12. Fr ஜோசப் ராஜ் (2007-2011)
13. Fr மரிய அல்போன்ஸ் (2011-2015)
14. Fr டைட்டஸ் மோகன் (2015 முதல் தற்போது வரை..)

மண்ணின் இறை அழைத்தல்கள் :

அருட்பணியாளர்கள்:

1. ஆயர் ஜெறோம் தாஸ்
2. Fr டென்சிங்
3. Fr சூசை மரியான்
4. Fr பிரான்சிஸ் சேவியர்
5. Fr மரிய மார்ட்டின்

அருட்சகோதரிகள்:

1. Sis பர்சி மேரி
2. Sis ஹெர்மஸ் மேரி
3. Sis மேரி பியூலா காத்தரின்
4. Sis யூஜின் நிர்மலா
5. Sis கிளைட்டா மேரி
6. Sis யூஜின் அமலா
7. Sis ஜான்சி
8. Sis கொன்சீலியா மேரி
9. Sis இதழ் ரீத்தா மேரி

வழித்தடம் :

கருங்கல் - வெள்ளியாவிளை - பாலப்பள்ளம் மத்திகோடு - லிருந்து உட்புறமாக படுவூர் வழியாக சுமார் இரண்டு கி.மீ உள்ளே சென்றால் சகாயநகர் ஆலயத்தை அடையலாம்.