810 புனித மடுஜெபமாலை அன்னை ஆலயம், தாளமுத்துநகர்

     

புனித மடுஜெபமாலை அன்னை ஆலயம்

இடம்: தாளமுத்துநகர், தூத்துக்குடி

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: தூத்துக்குடி

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித அந்தோனியார் ஆலயம், சிலுவைப்பட்டி

2. புனித ஆரோக்கியநாதர் ஆலயம், ஆரோக்கியபுரம்

3. புனித பிலோமினாள் ஆலயம், இராஜபாளையம்

4. புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம், மாதாநகர்

சிற்றாலயங்கள்:

1. புனித வேளாங்கண்ணி மாதா சிற்றாலயம், காமராஜர்நகர் 

2. புனித ஆரோக்கிய மாதா சிற்றாலயம், இராம்தாஸ் நகர்

3. இயேசுவின் திருஇருதய சிற்றாலயம், தாய்நகர்

4. சுனாமிநகர்கள் 

பங்குப்பணியாளர்: அருட்திரு. மைக்கேல் நெல்சன் ராஜ்

உதவிப் பங்குப்பணியாளர்: அருட்திரு. வின்சென்ட், SAC

குடும்பங்கள்: 400 (கிளைப்பங்குகள் சேர்த்து 2540)

அன்பியங்கள்: 37 கிளைப்பங்குகள் சேர்த்து

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணி

நாள்தோறும் திருப்பலி காலை 06:00 மணி

மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 05:30 மணி திருச்செபமாலை, சப்பர பவனி, மாதாவின் மாமருந்து, நவநாள் திருப்பலி, குணமளிக்கும் வழிபாடு, திருஎண்ணெய் பூசுதல், அசனம்

மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை காலை ‌06:00 மணி புனித லூர்து மாதா கெபியில் திருப்பலி

மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை மாலை 06:00 மணி திருப்பலி, நற்செய்திக் கொண்டாட்டம், ஒப்புரவு, நற்கருணை ஆசீர்வாதம்

திருவிழா:  செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல், அக்டோபர் மாதம் 07ஆம் தேதி வரை.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. ஜோசப் ஸ்டாலின்

2. அருட்பணி. சகாய ஜஸ்டின்

3. அருட்பணி.‌ பிராகிரஸ்

4. அருட்பணி.‌ ஜாண்ரோஸ்

5. அருட்பணி. அந்தோனி விஜயன்

6. அருட்பணி.‌ சாலமோன் பொன்ராஜ்

7. அருட்பணி. பனிமயம்

8. அருட்பணி. நிலவன்

மற்றும் அருட்சகோதரிகள்

வரலாறு:

தூத்துக்குடி மறைமாவட்டத்தில், மன்னார் வளைகுடா மண்ணை முத்தமிடும் கரையிலே, ஆரோக்கியபுரம், சிலுவைப்பட்டி, மாதாநகர், இராஜபாளையம், தாய்நகர், காமராஜ்நகர், இராம்தாஸ்நகர், சுனாமிகாலனிகள் என கிளைப்பங்குகள் புடைசூழ தாய்ப்பங்காம் தாளமுத்து நகரிலே புனித மடுஜெபமாலை அன்னை ஆலயத்தில், மிடுக்கோடு வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார் அன்னை மரியாள்.

மாதாவின் வருகை:

கடலும் கடல் சார்ந்த தொழில்களும், பனைத்தொழில்களும் இடம் பெறும் நகரமே தாளமுத்துநகர். இலங்கையிலே மருதமடு என்னும் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்து, புனித ஜெபமாலை மாதா சுரூபம் திரு.  சூசை மிக்கேல் என்பவர் மூலம் 14.07.1981 அன்று படகில் தாளமுத்து நகருக்கு கொண்டு வரப்பட்டு, ஒரு குடிசை அமைத்து, அதில் இந்த மாதாவின் சுரூபத்தை வைத்து இப்பகுதி கத்தோலிக்க மக்கள் வழிபடத் தொடங்கினர்.   

உதவி ஆய்வாளரும், மாதாவும்:

1982 ஆம் ஆண்டு தாளமுத்துநகரின் உதவி ஆய்வாளர் திரு. சமீர்வியாஸ் என்பவர், புனித மடுஜெபமாலை அன்னையை உதாசீனப்படுத்தி குடிசைக் கோயிலை அகற்றினார். அகற்றிய எட்டாம் நாளில் அவர் ஒரு விபத்தில் சிக்கி சிகிச்சை பெறும் போது, மனமாற்றம் பெற்றார். அவர் நலம் பெற்றதும் முதல் வேலையாக புனித மடுஜெபமாலை அன்னைக்கு களிமண்சுவர் கொண்டு ஆலயம் எழுப்பி, மக்கள் வழிபட உதவி புரிந்தார். 

புதிய பங்காக உதயம்:

1983-ல் இன்னாசியார்புரம் பங்கின் கிளைப் பங்காகவே இப்பகுதிகள் விளங்கி வந்தன.  களிமண்ணால் ஆன இந்த ஆலயத்தில் இன்னாசியார்புரம் பங்குத்தந்தை அருட்பணி. ஜோசப் பென்சிகர் அவர்கள் 12.03.1983 அன்று முதன் முதலாக திருப்பலி நிறைவேற்றினார். 

14.06.1984 அன்று புனித மடுஜெபமாலை மாதா ஆலயத்தை மையமாகக் கொண்டு, தாளமுத்துநகர் பங்கு உதயமானது. அருட்திரு. திபூர்சியஸ் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று வழிநடத்தினார்.

அழகிய ஆலயம்:

1986 ஆம் ஆண்டு இரண்டாவது பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்பணி. அந்தோனி இராபர்ட் அவர்களின் பெரும் முயற்சியால் பெரிய ஆலயம் கட்டப்பட்டு, 07.10.1986 அன்று அர்ச்சிக்கப்பட்டது. 1993 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அருட்பணி. கமிலஸ் அடிகளார் ஆலயத்தினுள் சுருபங்கள், சன்னல், கதவுகள் வேலைகளை முடித்து நிறைவாக்கினார். மேலும் ஆலயத்தின் முன்புறம் கொடிமரம் அமைத்தார்.

தொடர்ந்து பணிபுரிந்த அருட்பணியாளர்களின் வழிகாட்டலில் பல்வேறு ஆன்மீகப் பணிகளும், ஆலயப் பணிகளும், சமூகப் பணிகளும் திறம்பட இப்பங்கில் நிறைவேற்றப் பட்டன.

தற்போது 2020 ஆம் ஆண்டிலிருந்து பங்குத்தந்தையாக பொறுப்பேற்று வழிநடத்தி வரும் அருட்பணி. மைக்கேல் நெல்சன் ராஜ் அவர்களின் வழிகாட்டலில், முதல் சனிக்கிழமை பக்தி முயற்சிகள், நற்செய்திப் பெருவிழாக்கள், தவக்கால சிறப்பு நிகழ்வுகள் என பல்வேறு பக்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இப்பங்கை திருத்தலமாக உயர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பங்கில் உள்ள பள்ளிக்கூடங்கள்:

1. ஆர்.சி. நடுநிலைப் பள்ளி, தாளமுத்துநகர்

2. ஆர்.சி. தொடக்கப்பள்ளி, சிலுவைப்பட்டி

3. புனித அந்தோனியார் உயர்நிலைப் பள்ளி, சிலுவைப்பட்டி

4. திருஇருதய மெட்ரிக் பள்ளி, இராஜபாளையம். திருஇருதய சபை அருட்சகோதரிகள் வழிநடத்தி வருகின்றனர்.

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. பாலர் சபை

2. நற்கருணை வீரர்கள் சபை

3. புனித அமலோற்பவ மாதா இளம்பெண்கள் சபை

4. திருக்குடும்ப சபை

5. புனித சூசையப்பர் சபை

6. புனித அன்னை தெரசா இளைஞர் சபை

7. புனித மடுஜெபமாலை அன்னை ஞாயிறு மறைக்கல்வி மன்றம்

8. மரியாயின் சேனை

9. புனித வின்சென்ட் தே பவுல் சபை

10. அன்பியங்கள்

11. வழிபாட்டுக் குழு

12. நற்செய்தி பணிக்குழு

13. பரிந்துரை ஜெபக்குழு

14. துயர் துடைக்கும் குழு

15. பீடச்சிறுவர்கள்

16. புனித செசிலியம்மாள் பாடகற்குழு

17. புனித ஆகத்தம்மாள் பாடகற்குழு

18. இளந்தளிர் இயக்கம்

பங்கில் பணிபுரிந்த பங்குத்தந்தையர் பட்டியல்:

1. அருட்திரு. திபூர்சியஸ் (1984-1986)

2. அருட்திரு. அந்தோனி இராபர்ட் (1986-1991)

3. அருட்திரு. ஜோசப் சேவியர் (1991)

4. அருட்திரு. ஜெரால்டு ரவி (1991-1992)

5. அருட்திரு. ஜெபநாதன் (1992-1993)

6. அருட்திரு. கமிலஸ் (1993-1998)

7. அருட்திரு. A. J. ரெக்ஸ் (1998-2003)

8. அருட்திரு. ஜெரால்டு குரூஸ் (2003-2008)

9. அருட்திரு. அகஸ்டின் (2008-2009)

10. அருட்திரு. ஜான்சன் ராஜ் (2009-2014)

11. அருட்திரு. அந்தோணி தாஸ் (2014)

12. அருட்திரு. தாமஸ் ரோஜர் (2014-2015)

13. அருட்திரு. இருதயராஜா (2015-2020)

14. அருட்திரு. A. மைக்கேல் நெல்சன் ராஜ் (2020 முதல்...)

வழித்தடம்:

தூத்துக்குடி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் இருந்து மினிபேருந்துகள் உள்ளன.

கிழக்கு கடற்கரை சாலையில், வேளாங்கண்ணி -ராம்நாடு வழித்தடத்தில்,  T.சவேரியார்புரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, தாளமுத்துநகர் வரவேண்டும்.

Location map: https://g.co/kgs/YbA4Nk

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்திரு. A. மைக்கேல் நெல்சன் ராஜ் அவர்கள்