120 தூய ஆரோபண அன்னை ஆலயம், பொன்மனை

      

தூய ஆரோபண அன்னை ஆலயம்

இடம்: தாளப்பிடாகை, பொன்மனை, பொன்மனை அஞ்சல்

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: குழித்துறை

மறைவட்டம்: திரித்துவபுரம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: தூய சகாய மாதா ஆலயம், ஈஞ்சக்கோடு

பங்குதந்தை அருள்பணி. சேவியர் ராஜ்

குடும்பங்கள்: 60

அன்பியங்கள்: 5

ஞாயிறு திருப்பலி காலை 09:30 மணி

திருவிழா: ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி

மண்ணின் இறையழைத்தல்:

அருட்சகோதரி. எழில் மலர், பிறரன்பு சபை

வழித்தடம்:

மார்த்தாண்டம் -குலசேகரம் -காவல் ஸ்தலம் -வலியாற்றுமுகம்  -பொன்மனை

Location map: 

https://g.co/kgs/Vkq4c9b

ஆலய வரலாறு:

ஊர் அறிமுகம்:

பொன்மனையில் கத்தோலிக்க குடும்பங்கள், C.S.I. குடும்பங்களும், பெந்தேக்கோஸ்து குடும்பங்களும், இந்து சமய குடும்பங்களுமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றர். இங்கு அனைவருமே கல்வியறிவில் பின்தங்கியவர்களாகவும், தினக்கூலி வேலைக்கு செல்பவர்களாகவும், விவசாயக் கூலிகளாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

ஆலயம் உருவான விதம்:

குலசேகரம் பங்குதந்தை அருட்தந்தை M. அந்தோணிமுத்து அவர்களால், திரு. சவரிமுத்து என்பவரிடமிருந்து 22.08.1957ல் 10 சென்ட் நிலம் வாங்கப்பட்டு, அந்த நிலத்தில் ஆலயம் கட்டப்பட்டு தூய அமல அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு அருட்தந்தை சில்வெஸ்டர் ஜாண் அவர்களால் இவ்வாலயமானது விரிவாக்கப்பட்டது. அப்பொழுது ஆலயத்தில் 60 குடும்பங்கள் இருந்தனர். திருப்பலியானது ஞாயிறு மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் நடைபெற்று வந்தது.

12.11.2009 அன்று ஈஞ்சக்கோடு பங்கான போது, பொன்மனை அதன் கிளை பங்காக மாற்றப்பட்டது.

2010-ம் ஆண்டு மறைமாவட்டத்தில் இவ்வாலயத்தின் பெயர் தூய ஆரோபண அன்னை ஆலயம் என பதிவு செய்யப்பட்டிருப்பதால், ஆலயத்தின் பெயர் தூய ஆரோபண அன்னை என மாற்றப்பட்டது. 

தற்போதைய புதிய ஆலயமானது அருட்பணி. மைக்கேல் ராஜ் பணிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு, அருட்பணி. சேவியர் ராஜ் பணிக்காலத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, 24.11.2021 அன்று கோட்டார் மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

குருசடி:

வேளாங்கண்ணி மாதா குருசடி 27.10.2004 அன்று, தூய ஆரோபண அன்னை ஆலய வளாகத்தில் பங்குமக்களின் நன்கொடையுடன் கட்டி முடிக்கப்பட்டது. இதில் அக்டோபர் மாதம் 27ம் தேதி ஒருநாள் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. பாலர் சபை 

2. சிறுவழி இயக்கம் 

3. இளம் கிறிஸ்தவ மாணாக்கர் இயக்கம்

4. இளைஞர் இயக்கம் 

5. மரியாயின் சேனை

6. கத்தோலிக்க சேவா சங்கம்  

7. அடித்தள முழு வளர்ச்சி சங்கம்

தகவல்கள்: பங்குதந்தை அருள்பணி. சேவியர் ராஜ் அவர்கள்.