புனித சகாய அன்னை ஆலயம்
இடம் : மலையடிப்பட்டி, இராஜபாளையம்
மாவட்டம்: விருதுநகர்
மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: திருவில்லிபுத்தூர்
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள் :
1. புனித செபஸ்தியார் ஆலயம், புதுப்பாளையம்
2. புனித அந்தோணியார் ஆலயம், மாலையாபுரம்
3. மரியாளின் மாசற்ற இருதய ஆலயம், ஜமீன் நத்தம்பட்டி
4. தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், மில்கிருஷ்ணாபுரம்
குடும்பங்கள்: 520
அன்பியங்கள்: 18
பங்குத்தந்தை: அருட்பணி. ஜோ. தாமஸ் எடிசன்
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி:
பங்கு ஆலயம்: காலை 08:30 மணி
புனித அந்தோணியார் ஆலயம் : காலை 06:30 மணி
புனித செபஸ்தியார் ஆலயம்: மாலை 07:00
வாரநாட்கள் திருப்பலி :
பங்கு ஆலயம் (திங்கள், செவ்வாய், சனி): மாலை 07:00 மணி
செவ்வாய் காலை 11:00 மணி மற்றும் வியாழன் மாலை 7:00 மணி: புனித அந்தோணியார் ஆலயம்
வெள்ளி மாலை 7:00 மணி: புனித செபஸ்தியார் ஆலயம்
சனி காலை 7:00 மணி: மரியாளின் மாசற்ற இருதய ஆலயம்
திருவிழா :
1. புனித சாகய அன்னை ஆலயம் பங்குத் திருவிழா: மே இறுதி வெள்ளி, சனி, ஞாயிறு
2. புனித செபஸ்தியார் ஆலயம், புதுப்பாளையம்: ஜனவரி இறுதி வெள்ளி, சனி, ஞாயிறு
3. புனித அந்தோணியார் ஆலயம், மாலையாபுரம் : ஜூன் 2-ம் வெள்ளி, சனி, ஞாயிறு
4. மரியாளின் மாசற்ற இருதய ஆலயம், ஜமீன் நத்தம்பட்டி: மே 31-ம் தேதி
5. தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், மில்கிருஷ்ணாபுரம்: செப்டம்பர் 08-ம் தேதி
மண்ணின் இறையழைத்தல்கள்:
அருட்தந்தையர்கள் :
1. அருட்பணி. கென்னடி
2. அருட்பணி. ஜார்ஜ், SJ
3. அருட்பணி. செல்வின், SJ
4. அருட்பணி. மிக்கேல்ராஜ், SJ
5. அருட்பணி. யேசு கருணா
6. அருட்பணி. ராஜன்
7. அருட்பணி. ஜெகன், MSFS
8. அருட்பணி. தங்கராஜ்
அருட்சகோதரிகள் :
1. அருட்சகோதரி. அமலஜோதி, ICM
2. அருட்சகோதரி. ஜெயமேரி, CIC
3. அருட்சகோதரி. செலின் பிரபா, CIC
4. அருட்சகோதரி. ரெஜினா ஜோஸ்பின், SCB
5. அருட்சகோதரி. ரோஸ்லின், SCB
6. அருட்சகோதரி. ஜோஸ்பின், CIC
7. அருட்சகோதரி. சாந்தி, HC
அருட்சகோதரர்கள் :
1. சகோ. வினோத் (நார்பர்ட்டைன் சபை)
2. சகோ. ஸ்டாலின் (கார்மேல் சபை)
வழித்தடம்:
மதுரை வழி -தென்காசி : இராஜபாளையம் (மலையடிப்பட்டி)
திருநெல்வேலி -சங்கரன்கோவில் -இராஜபாளையம்
Location map: https://g.co/kgs/N549ag
ஆலய வரலாறு :
திருவில்லிபுத்தூர் பங்கின் கிளைமையங்களில் ஒன்றாக விளங்கிய இராஜபாளையம், மலையடிப்பட்டியில் கி.பி 1978-79-ம் ஆண்டில் தூய சகாய அன்னைக்கு புதிய ஆலயம் கட்டப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது.
அதன் பின்னர் 1985, மே 11-ம் நாளில் புதிய பங்காக உயர்த்தப்பட்டது. பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. பிரான்சிஸ் பிரிட்டோ பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்து பணியாற்றிய பங்குத்தந்தையர்களும் காலத்தின் தேவைக்கேற்ப பல்வேறு ஆலய மற்றும் பங்கு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டனர்.
ஆலய வெள்ளிவிழா 2005-ம் ஆண்டில், ஆலய வெள்ளி விழாக் கொண்டாட்ட நினைவாக ஆலய பீடமும், உட்புற தரைதளம் புதுப்பிக்கப்பட்டது. மேலும் ஆலய வளாகத்தில் புனித அந்தோணியார் குருசடியும், தூய லூர்து அன்னை கெபியும் கட்டப்பட்டது.
பின் நாட்களில் மக்களின் தேவைக்கேற்ப அன்பியங்கள், பக்த சபைகள் மற்றும் இயக்கங்கள் உருவாக்கப்பட்டு தற்பொழுது பொன்விழா ஆண்டை (2029) நோக்கி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
கிளைப்பங்கு ஆலயங்களின் வரலாறு:
1997-ல் மாலையாபுரம் புனித அந்தோணியார் ஆலயம் கட்டப்பட்டு, 2006-ல் புதுபிக்கப்பட்டது.
2010-ம் ஆண்டில் புதுப்பாளைத்தில் அமைந்திருந்த புனித செபஸ்தியாருக்கான பழைய ஆலயத்திற்கு மாற்றாக புதிய ஆலயம் கட்டப்பட்டது.
2016-ம் ஆண்டில் நத்தம்பட்டி தூய மரியாளின் மாசற்ற இருதய ஆலயம் புதுக்கப்பட்டது.
2017-ம் ஆண்டில் மில்கிருஷ்ணாபுரத்தில் ஆரோக்கிய அன்னை ஆலயம் கட்டப்பட்டது.
கல்வி நிறுவனங்கள்:
ஆர்.சி. தொடக்கப்பள்ளி, புதுப்பாளையம்.
ஆர்.சி. தொடக்கப்பள்ளி, ஜமீன் நத்தம்பட்டி.
இயக்கங்கள், பக்தசபைகள் :
1. திருவழிபாட்டுக்குழு
2. பாடற்குழு
3. வின்சென்ட் தே பவுல் சபை
4. மரியாயின் சேனை
5. இளைஞர், இளம்பெண்கள் அமைப்புகள்
6. நற்செய்தி பணியாளர்கள் குழு
7. கோல்பிங் மகளிர் இயக்கம்
8. நன்மரணசபை
9. பீடப்பணியாளர்கள்
10. மறைக்கல்வி சிறுவர், சிறுமியர்
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :
1. அருட்பணி. பிரான்சிஸ் பிரிட்டோ (1985 - 88)
2. அருட்பணி. அந்தோணி ஈட்டிகல் (1988- 90)
3. அருட்பணி. ஜேக்கப் மணலா (1990- 95)
4. அருட்பணி. சேவியர் (1995 - 2001)
5. அருட்பணி. ஜான் செல்வராஜ் (2001 -05)
6. அருட்பணி. மரிவளன், SJ. (2005 -06)
7. அருட்பணி. சகாய அம்புரோஸ் (2006-08)
8. அருட்பணி. பால் M. (2008 -10)
9. அருட்பணி. சூசை P. V. (2010-14)
10. அருட்பணி. அமலன் (2014-15)
11. அருட்பணி. பாப்புராஜ் (2015-17)
12. அருட்பணி. தாமஸ் எடிசன் (2017 - )
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. தாமஸ் எடிசன்