புனித லூர்து அன்னை ஆலயம்
இடம் : கணக்கன்குப்பம்
மாவட்டம் : விழுப்புரம்
மறைமாவட்டம் : புதுவை கடலூர் உயர் மறைமாவட்டம்
மறைவட்டம் : செஞ்சி
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள் :
1. புனித சவேரியார் ஆலயம், தாண்டவசமுத்திரம்
2. திருஇருதய ஆண்டவர் ஆலயம், பாடிபள்ளம்
3. புனித அந்தோனியார் ஆலயம், மூல நெல்லிமலை
4. திருகுடும்பத்தின் தலைவரான புனித சூசையப்பர் ஆலயம், போத்துவாய்
5. புனித செபஸ்தியார் ஆலயம், தேவதானம் பேட்டை
6. தொழிலாளர்களின் பாதுகாவலர் புனித சூசையப்பர் ஆலயம் , நடு நெல்லிமலை
குடும்பங்கள் : 455
அன்பியங்கள் : 6
பங்குத்தந்தை : அருள்தந்தை. A. ஆரோக்கிய தாஸ்
ஞாயிறு திருப்பலி : காலை 07:30 மணி
வார நாட்களில் திருப்பலி : காலை 05:30 மணி
திருவிழா: கொடியேற்றம்- பிப்ரவரி 2
திருவிழா -பிப்ரவரி 11
கணக்கன்குப்பம் மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. ரெமிஜியுஸ், CMF
2. அருட்பணி. P. ஆரோக்கியநாதன், Pondicherry
3. அருட்பணி. Z. M. தேவசகாய ராஜ், Pondicherry
4. அருட்பணி. F. ஆண்ட்ரூ, SJ
5. அருட்பணி. M. S. ஜான் போஸ்கோ, Pondicherry
6. அருட்பணி. F. இம்மானுவேல், MSFS
7. அருட்பணி. பெர்னாடு துரை, SJ
8. அருட்பணி. ஜான் பிரிட்டோ, MSFS
9. அருட்பணி. லூர்து ஜெரோம், CMF
10. அருட்பணி. பாஸ்கரன் லீனஸ், MSC
11. அருட்பணி. C. ஜான், MSC
12. அருட்பணி. A. டேனியல், CPPS
13. அருட்பணி. ஆனந்தராஜ், SDB
14. அருட்பணி. ஜார்ஜ் வில்சன், Pondicherry
15. அருட்பணி. S. விக்டர் இம்மானுவேல், Pondicherry
16. அருட்பணி. S. சார்லஸ் எடிசன், Pondicherry
17. அருட்பணி. P. லூர்து ஜெயராஜ், Pondicherry
18. அருட்பணி. A. ஜான் செல்வம், SDB
19. அருட்பணி. ஜெயசீலன், HGN
20. அருட்பணி. P. மரிய சகாயராஜ், SDB
21. அருட்பணி. அந்தோனி தாஸ், HGN
22. அருட்பணி. பெர்க்மான்ஸ், Diocese of Georgetown Guyana, South America
23. அருட்பணி. ஜான் மரிய வியானி, Chandigarh
24. அருட்பணி. A. அந்தோனி சுரேஷ், SJ
25. அருட்பணி. F. ஜோசப், Pondicherry (late)
26. அருட்பணி. பிரடெரிக் ஆரோக்கியம், CPPS (late)
27. அருட்பணி. தமசின் அருளப்பன், SJ
28. அருட்பணி. ஜான், SJ
29. அருட்பணி. ஜான்பால், Pondichery
30. அருட்பணி. S. பாஸ்கர் ராஜ், MSC
31. அருட்பணி. வரப்பிர ஜோதி, CPPS
32. அருட்பணி. அருள் ஒளி, SJ
33. அருட்பணி. இராஜரத்தினம், Arunachal Pradesh
34. திருத்தொண்டர். ஜான் பிரிட்டோ, SFX (late)
35. அருட்சகோதரர். A. ஜான் டேவிட், SG (Montfort)
36. அருட்சகோதரர். A கிறிஸ்து ராஜா, SG
37. அருட்சகோதரர். மரிய ஜோசப், SG
38. அருட்சகோதரர். ஜான் பெனடிக்ட், SG
39. அருட்சகோதரர். M. S. டேவிட், SG
40. திருத்தொண்டர். வில்லியம் கவாஸ்கர், JDH
41. திருத்தொண்டர். யூஜின் எர்னஸ்ட் ராஜ், MSFS
42. திருத்தொண்டர். சதீஷ் இம்மானுவேல், MSFS
அருள்சகோதரிகள்:
1. Sr. ஆக்னஸ் மேரி
2. Sr. S. ஜோனா மரிய செல்வி, FSAG
3. Sr. எஸ்தர் பிலோமினாள்
4. Sr. ஜோஸ்பின் மேரி
5. Sr. ஸ்டெல்லா
6. Sr. P. சகாய செல்வி, FMA
7. Sr. ஹெலன் கேத்ரின்
8. Sr. பாஸ்கல்
9. Sr. தோம்னிக் மரி
10. Sr. பாஸ்கா மேரி
11. Sr. அருள்ரோஸ்
12. Sr. சாந்தூஸ்
13. Sr. ரிக்ஸ் கேத்ரின்
14. Sr. இருதயமேரி
15. Sr. சகாயம்
16. Sr. மேரி ஸ்டெல்லா
17. Sr. C. மேரி சோபியா, FHIC
18. Sr. சூசைமேரி
19. Sr. மரியா
20. Sr. பெனிட்டோ
21. Sr. ரெபேக்காள்
22. Sr. அகஸ்டின் சகாயம்
வழித்தடம் :
செஞ்சி - திருக்கோவிலூர் வழி
Location map: https://g.co/kgs/TUyD3Z
வலாறு:
கருணை மழையே..! கனிவின் உருவே..!
அரும்பும் மலரின் அழகே..! திருவே..!
உருகி அழைத்தேன்..!
உயிராய் உன்னையே..! லூர்து அன்னைத் தாயே..!
ஞான வடிவே..!
நலமருள் ராணியே..!
வான ஒளியே..! வருவாயே..! கணக்கன்குப்பத்தை காத்திடவே..!
குன்றளவு கொடுத்தாலும் குறையாத செல்வமாய் இன்றளவும், கணக்கன்குப்பம் என்னும் பெயரை நிலை நிறுத்தியுள்ள ஊர்ப்பெயரின் வரலாறு...
முற்காலத்தில் கணக்கப்பிள்ளை ஒருவர் தன் கணக்கில் வைத்திருந்த ஊராக இந்த ஊர் இருந்தது. தான் திருத்திய நிலத்தையும் ஊரையும் கணக்கில் காட்டாமல் வெறும் காட்டுப்பகுதியாகவே கணக்கில் காட்டி வந்துள்ளார். அவ்வாறு இவ்வூருக்கு கணக்கன்குப்பம் எனப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
தரிசை சரி செய்து.. தக்கபடி ஏர் நடத்தி... ஆண்டு வந்தார் தாண்டவயராயன் எனும் குறுநில மன்னர். இதனால் தான் தாண்டவசமுத்திரம் உருவாகியது என்பது வரலாறு. தற்போது தாண்டவசமுத்திரத்தில் உள்ள ஏரியின் கோடியிறங்கும் வழியின் மறுப்பக்கத்தில் உள்ள புஞ்சை நிலங்கள் சாட்சியாக உள்ளன. அங்குள்ள கரடுமுரடான காடுகளைத் திருத்தி, நிலங்களாக மாற்றியதும், கூடி வாழ்ந்ததற்கு அடையாளமாக முதியோர்களை அடக்கம் செய்வதற்குப் பயன்படுத்திய பெரும் பானைகளும் அகழாய்வில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. மேலும் லூர்து அன்னை மேல்நிலைப் பள்ளிக்கு பின்புறம் நீண்ட குகை ஒன்று இன்றளவும் உள்ளதும் ஊரின் பெருமைக்கு நற்சான்றுகளாக உள்ளன.
கிறிஸ்தவ குடும்பம் கணக்கன்குப்பத்தில் முதலில் தலையாரி குடும்பம் என ஆரம்பித்து.... பெருந்தல்பட்டான், நக்காதூரான், கல்லாலிபட்டான், கல்பட்டான், கீழ்மலயான், கக்கனூரான், திருவாப்படியான், ஒதியத்தூரான், ஆயந்தூரான், மடவலத்தான், முதலூரான், பாஞ்சாலத்தான், பாலூரான், பவித்திரத்தான், ஆற்காட்டான் என நீண்ட பட்டியலைக் கொடுக்கிறது...
ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திர காற்றை சுவாசிக்கும் முன்பே கணக்கன்குப்பம் சுதந்திரம் பெற்றுள்ளது. 1846 ஆம் ஆண்டில் கிளைப்பங்காக தெத்து (கணக்கன்குப்பம்) என்னும் பெயரில் அத்திப்பாக்கம் பங்கின் கீழ் இருந்துள்ளது. அருட்பணி. ரோஷேர் (1841-1847) அவர்கள் ஆண்டுதோறும் மாதத்தின் சில நாட்கள் தெத்து ஊரில் தங்கியிருந்து பணியாற்றியுள்ளார்.
தொடர்ந்து அருட்பணி. போலார்ட் (1841-1859) பணியாற்றினார்.
அருட்பணி. விஜியோன் (1859-1966) பணிக்காலத்தில் அத்திப்பாக்கத்திலிருந்து முகையூர், நங்காத்தூர் ஆலயங்களை தனிப்பங்காக மாற்றிட முயற்சிகள் மேற்கொண்டார். 1866 ஆம் ஆண்டு நங்காத்தூர் தனிப்பங்கான போது தெத்து (கணக்கன்குப்பம்), நங்காத்தூரின் கிளைப்பங்காக ஆனது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. அருள் மரியநாதர் (1866-1876) அவர்கள் வழிநடத்தி வந்துள்ளார்.
1868 ஆம் ஆண்டு அருட்பணி. அருள்மரியநாதர் பணிக்காலத்தில் தெத்து புனித லூர்து அன்னை குடிசைக்கோயில் கட்டப்பட்டது.
அருட்பணி. ஆரோக்கியநாதர் (1876-1897) பணிக்காலத்தில் அப்போது 59 குடும்பங்கள் மட்டுமே இங்கே இருந்துள்ளன. வரலாறு காணாத பிண்ணாக்கு பஞ்சம் ஏற்பட்ட வேளையில் இவர் மக்களை பாதுகாத்து வழிநடத்தினார்.
அதற்குப்பின் 1897 முதல் 1902 வரை அருட்பணி. இராஜேந்திரநாதர் பணியாற்றினார்.
1903 முதல் 1908 வரை பணியாற்றி கணக்கன்குப்பம் தூய லூர்து அன்னை ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டி, ஆலய கட்டுமானத்திற்காக 1,50,000 செங்கற்களை சூளை போட்டவர் அருட்பணி. அல்போன்ஸ்நாதர் ஆவார்.
அருட்பணி. மரியபிரகாசநாதர் (1908-1925):
15.02.1911 அன்று தெத்து (கணக்கன்குப்பம்) ஆலயத்திற்கு அடித்தளம் போடப்பட்டதுடன், 1912 ஆம் ஆண்டு கல்விக்கண் திறந்து 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஓராசிரியர் பள்ளியை அங்கீகாரம் பெற்று வழிநடத்தியுள்ளார். 1920 ஆம் ஆண்டில் ஆலயத்தை கட்டத் தொடங்கினார்.
1922 ஆம் ஆண்டு நடுக்கோபுரம் நீங்கலாக அழகிய புனித லூர்து அன்னை ஆலயத்தை, அருட்பணி. மரிய பிரகாசநாதர் அவர்கள் கட்டிமுடித்தார்.
அருட்பணி. கல்தோம் (1925-1926) பணிக்காலத்தில் ஆலய கோபுரத்தை கட்டத் தொடங்கினார்.
அருட்பணி. மிசான் அடிகள் (1926-1930) தாண்டவசமுத்திரத்தில் ஆலயம் கட்ட நிலம் வாங்கினார். 1928 ஆம் ஆண்டில் தெத்து ஆலய கோபுரத்தை கட்டிமுடித்தார்.
அருட்பணி. லூர்துசாமி (1930-1935) அவர்கள் 1931 ஆம் ஆண்டு தாண்டவசமுத்திரத்தில் உள்ள பழைய ஆலயம் கட்டினார்.
அருட்பணி. மசோ (1935-1941) பாடிப்பள்ளம், உரோமாபுரி ஊரில் ஆலயம் கட்டினார்.
இதுவரை பணிபுரிந்த பங்குத்தந்தையர்களின் முயற்சியினால் ஆலயமும், தீண்டாமை ஒழிப்பும், சமூகமும் ஒருசேர வளர்ச்சி பெற்றன. சாதியம் தலைத்தூக்கிய போது துணிவுடன் எதிர்த்து நின்று சரித்திரம் படைத்தனர்.
பங்குத்தந்தையர்களும், பங்கின் வளர்ச்சியும்:
21.12.1946 அன்று தெத்து (கணக்கன்குப்பம்) தனிப்பங்காக மாற்றப்பட்டு. அருட்பணி. S. சூசை அடிகள் முதல் பங்குத்தந்தையாக பணிப் பொறுப்பேற்றார். இவரின் அளப்பரிய பணியால் இந்திய இராணுவத்தில் கணக்கன்குப்பத்தில் இருந்து ஏராளமானவர்கள் சேர்க்கப்பட்டனர்.
அருட்பணி. V. S. அந்தோணி சாமி (1951-1953): 01.06.1951 அன்று கிறிஸ்டினாள் தொடக்கப்பள்ளியானது, நடுநிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டது. இவரின் முயற்சியால் கல்லேரி- யை சேர்ந்த D. S. சைமன் லூர்துசாமி கர்தினால் அவர்கள் வத்திக்கான் மறைப்பரப்பு பணி உதவி செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் திவ்யநற்கருணை பக்தியை இறைமக்கள் மத்தில் ஆழமாக வேருன்றச் செய்தார்.
அருட்பணி. இம்மானுவேல் மேல்வட்டம் (1953-1964): தேவதானம்பேட்டை, நெல்லிமலை ஊர்களை கிளைப்பங்குகளாக உயர்தினார். திருப்பலியுடன், திருஇருதய பக்தியையும் வளர்த்தெடுத்தார். பங்கில் பல ஆசிரியர்கள் உருவாகிட உழைத்தவர்.
அருட்பணி. ஜோசப் காந்தி (1964-1970): இவரது பணிக்காலத்தில் தெத்து என்னும் பங்குப்பெயர் கணக்கன்குப்பம் என செயல்வடிவம் பெற்றது. புதிய கிளைப்பங்காக போத்துவாய் உருவானது.
அருட்பணி. மரியசூசை (1970-1977):
ஆலயத்திற்கு பலிபீடத்தையும், அறைவீட்டிற்கு அடித்தளத்தையும் அமைத்து, மின்இணைப்பு பெற்றுத்தந்தவர். பங்கு பாதுகாவலிக்கு விழா எடுத்து கொண்டாடுவதற்கு முழுமுயற்சி செய்து செயல்படுத்தினார்.
அருட்பணி. எலியாஸ் (1977-1980): பணிக்காலத்தில் லூர்து அன்னை கெபி கட்டப்பட்டு 29.06.1978 அன்று அர்ச்சிக்கப்பட்டது. ஆலயத்தின் கோபுரம் உயரத்தப்பட்டு, ஆலயத்தையும் பூச்சு வேலை செய்து புனரமைத்து 25.10.1980 அன்று மந்திரிக்கப்பட்டது.
அருட்பணி. மாசிலாமணி (1980-1985): இவரது பணிக்காலத்தில் கர்தினால் D. S. சைமன் லூர்து சாமி ஆண்டகையால் ஆலயம் மந்திரிக்கப்பட்டது. பள்ளிக்கூடத்திற்கு வகுப்பறைகள் கட்டப்பட்டன. வேலூர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த வேட்டவலம் பங்கிலிருந்து, போத்துவாய் கிளைப்பங்கை பிரித்துக் கொண்டு வந்தார்.
அருட்பணி. V. அந்தோணிசாமி (1985-1989) : மலைக்கோவில் கட்டினார்.
அருட்பணி. S. ஜான்போஸ்கோ:
பள்ளிக்கூடத்திற்கு ஏற்பட்ட பிரச்சனைகளை சுமூகமாக்கினார்.
அருட்பணி. P. ரொசாரியோ:
குருக்கள் இல்லத்தை கல் கட்டிடமாக மாற்றினார்.
அருட்பணி. C. சகாயராஜ்:
கலையரங்க மேடை அமைத்தார். மலைக்கோவிலுக்கு படிக்கட்டுகளை அமைத்தார். ஆலயத்தில் இடநெருக்கடியை போக்கிட கிழக்குப்புற சாலையின் மண்டபத்தை விரிவாக்கம் செய்தார்.
அருட்பணி. L. ஜோசப்ராஜ்: மலைக்கோவிலின் கோபுரத்தையும், திருப்பலி நிறைவேற்றும் பகுதியையும் விரிவாக்கம் செய்தார்.
அருட்பணி. A. ஆரோக்கிய சகாய செல்வம்: ஆலயத்திற்கு வண்ணம் தீட்டினார். ஆலயத்தை சுற்றி சிமென்ட் தரை அமைத்து, இயேசுவின் சிலுவைப்பாடுகளின் 14 நிலைகளையும் அமைத்தார். புதிய கலையரங்கம் அமைத்தார்.
அருட்பணி. A. ஆரோக்கியதாஸ்: கணக்கன்குப்பம் தனிப்பங்கானதன் 75 -வது ஆண்டு நினைவாக ஆலய புனரமைப்பு பணியைச் செய்து, 2021 ஆம் ஆண்டில் பவளவிழா கொண்டாடப்பட்டது.
சிறப்புகள்:
மக்கள் முதன்முதலாக குடியேறிய தாண்டவசமுத்திரத்தில் மிகவும் பழையான கல்தூண் இன்றளவும் உள்ளது.
ஆலயம் கட்டப்பட்டு 100 ஆண்டுகளைக் கடந்ததின் நினைவாக 2022 பிப்ரவரி 11 ம் நாள் நூற்றாண்டு விழாவை கொண்டாட இருக்கிறார்கள். இந்த ஆலயம் கட்டுவதற்கு பெரும் உதவியாக இருந்த சுண்ணாம்பு அரைக்கும் பெரிய வட்டமான இயந்திர கல் ஆலய வளாகத்தில் நினைவு சின்னமாக இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஊரில் அமைந்துள்ள லூர்து அன்னை மலைக்கோயில் மிகவும் அதிசயம் நிறைந்ததும், மிகுந்த புகழ் பெற்றதும் ஆகும். பல்வேறு பெண்களுக்கு குழந்தை பாக்கியம் அளித்த அதிசய அன்னை கோயிலாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி 9ம் தேதி மலைக்கோயில் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆலயத்தின் கீழே பெரிய தாமரை குளமும் அமைந்து மிகவும் அழகாக காட்சி தருகின்றாள் தூய லூர்து அன்னை.
புனித கிறிஸ்டினாள் R.C ஆரம்பப்பள்ளியானது, நூற்றாண்டைக் கடந்து மாணவர்களுக்கு கல்விப் பணியை வழங்கி வருவது கூடுதல் சிறப்பு.
பங்கில் உள்ள சபைகள் இயக்கங்கள்:
1. புனித இக்னேசியஸ் இளையோர் இயக்கம்
2. சாவியோ சங்கம்
3. மரியாயின் சேனை
4. புனித தோம்னிக் சாவியோ பீட சிறுவர்கள்
5. புனித வின்சன்ட் தே பவுல் சபை
6. புனித செசிலியம்மாள் பாடற் குழுவினர்
7. புனித ஜான்மரிய வியான்னி அலங்கார குழு
பங்கில் உள்ள நிறுவனங்கள்
1. புனித கிறிஸ்டினாள் RC ஆரம்பப்பள்ளி
2. புனித லூர்து அன்னை மேல்நிலை பள்ளி ( Montfort brothers)
3. RC ஆரம்பப்பள்ளி, தாண்டவசமுத்திரம்
4. RC ஆரம்பப்பள்ளி, போத்துவாய்
பங்கில் உள்ள குருசடி, கெபி, சிற்றாலயங்கள்:
1. புனித லூர்து அன்னை மலைக்கோயில், கணக்கன்குப்பம்
2. புனித அந்தோனியார் கெபி (தெற்குத்தெரு, லூர்து நகர் மற்றும் புனித லூர்து அன்னை மேல்நிலைப் பள்ளி தெரு)
பங்கில் இதுவரை பணி செய்த பங்குத்தந்தையர்கள்:
1. Fr. S. சூசை
2. Fr. R. சூசைநாதர்
3. Fr. V.S. அந்தோணி சாமி
4. Fr. M.J. இம்மானுவேல்
5. Fr. S.J. காந்தி
6. Fr. M. மரியா சூசை நாதர்
7. Fr. R. எலியாஸ்
8. Fr. L. மாசில்லாமணி
9. Fr. P. அந்தோணி சாமி
10. Fr. S. ஜான் போஸ்கோ
11. Fr. P. ரொசாரியோ
12. Fr. C. சகாயராஜ்
13. Fr. L. ஜோசப் ராஜ்
14. Fr. A. ஆரோக்கிய சகாய செல்வம்
15. Fr. A. ஆரோக்கிய தாஸ் (தற்போதைய பங்குத்தந்தை)
அதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த கணக்கன்குப்பம் தூய லூர்து அன்னை ஆலயம் வாருங்கள்... இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்...
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை. அருட்பணி A. ஆரோக்கிய தாஸ் மற்றும் ஆலய உறுப்பினர்
தகவல்கள் உதவி: கணக்கன்குப்பம் மண்ணின் மைந்தர்கள் அருட்பணி. Z. M. தேவசகாய ராஜ் மற்றும் அருட்பணி. பாஸ்கரன் லீனஸ், MSC