மதுரை உயர்மறைமாவட்டம்

மதுரை உயர்மறைமாவட்டம் (இலத்தீன்: Madhuraien(sis)) என்பது மதுரை புனித மரியன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் உயர்மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது

மக்கள் தொகை கத்தோலிக்கர் - 170,000 (2004)

கதீட்ரல் புனித மரியன்னை பீடாலயம்


வரலாறு

ஜனவரி 8, 1938: திருச்சினோபொலி மறைமாவட்டத்தில் இருந்து மதுரா மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டது.

அக்டோபர் 21, 1950: மதுரை மறைமாவட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

செப்டம்பர் 19, 1953: மாநகர மதுரை உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது.

தலைமை ஆயர்கள்

மதுரை உயர்மறைமாவட்டத்தின் பேராயர்கள் (ரோமன் ரீதி)


பேராயர் அந்தோணி பாப்புசாமி (ஜூலை 26, 2014 - முதல்)

பேராயர் பீட்டர் பெர்னான்டோ (மார்ச் 22, 2003 – ஜூலை 26, 2014)

பேராயர் மரியானுஸ் ஆரோக்கியசாமி (ஜூலை 3, 1987 – மார்ச் 22, 2003)

பேராயர் கசிமீர் ஞானாதிக்கம், S.J. (டிசம்பர் 3, 1984 – ஜனவரி 26, 1987)

பேராயர் ஜஸ்டி திரவியம் (ஏப்ரல் 13, 1967 – டிசம்பர் 3, 1984)

பேராயர் ஜான் பீட்டர் லியோனார்ட், S.J. (செப்டம்பர் 19, 1953 – ஏப்ரல் 13, 1967)

மதுரை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (ரோமன் ரீதி)

ஆயர் ஜான் பீட்டர் லியோனார்ட், S.J. (ஜனவரி 8, 1938 – செப்டம்பர் 19, 1953)

கீழுள்ள மறைமாவட்டங்கள்

திண்டுக்கல் மறைமாவட்டம்

கோட்டாறு மறைமாவட்டம்

பாளையங்கோட்டை மறைமாவட்டம்

சிவகங்கை மறைமாவட்டம்

திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம்

தூத்துக்குடி மறைமாவட்டம்

நன்றி: விக்கிபீடியா