539 புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், மணியனூர்

   

புனித திருமுழுக்கு யோவான் ஆலயம்

இடம் : மணியனூர், மணியனூர் அஞ்சல், பரமத்திவேலூர் தாலுகா, 637201.

மாவட்டம் : நாமக்கல்

மறைமாவட்டம் : சேலம்

மறைவட்டம் : திருச்செங்கோடு

நிலை : கிளைப்பங்கு

பங்கு : புனித லூர்து அன்னை ஆலயம், பெருங்குறிச்சி

பங்குத்தந்தை : அருட்பணி. இராபர்ட் தேவதாஸ், C.PP.S

குடும்பங்கள் : 33

அன்பியம் : 1

ஞாயிறு : காலை 10.30 மணிக்கு திருப்பலி.

திருவிழா : டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் அன்று புனித திருமுழுக்கு யோவான் ஆலய திருவிழா நடைபெறும்.

வழித்தடம் :

பெருங்குறிச்சியிலிருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் 7கி.மீ தொலைவில் மணியனூர் உள்ளது. 


வரலாறு :

அழகிய சிறு கிராமமான மணியனூரில் வாழ்ந்த கிறிஸ்தவ மக்களுக்காக, மணியனூரில் இருந்த பெருங்குறிச்சி பங்கைச் சார்ந்த பள்ளிக்கூடத்தில் உள்ள ஒரு வகுப்பறையில் அருட்தந்தை அவர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.

அதன்பிறகு, பெருங்குறிச்சி பங்கில் பணியாற்றிய அருட்பணி. மரிய ரொடீசினி (1995-2004) அவர்கள், பெருங்குறிச்சி பங்கைச் சார்ந்த 9 ஊர்களை தேர்ந்தெடுத்து அங்கு ஆலயம் எழுப்ப திட்டமிட்டார். அந்த 9 ஊர்களில் ஒன்று தான் மணியனூர் கிராமம்.

அருட்பணி. மரிய ரொடீசினி அவர்களின் உதவியுடன், அன்றைய பெருங்குறிச்சி பங்குத்தந்தை அருட்பணி. M. S. மார்ட்டின் (2004-2006) அவர்களின் முயற்சியால் ஆலயம் கட்டப்பட்டு, திருமுழுக்கு யோவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, 08.02.2005 அன்று அர்ச்சிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை பெருங்குறிச்சி பங்கின் கிளைப்பங்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நன்கொடையாளர்களின் உதவியால் 25.12.2017 அன்று அழகிய லூர்து மாதா கெபி கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. இராபர்ட் தேவதாஸ் C.PP.S

புகைப்படங்கள் : ஆலய உறுப்பினர்.