774 குழந்தை இயேசு ஆலயம் பச்சைபெருமாள்புரம்


குழந்தை இயேசு ஆலயம்

இடம்: பச்சைபெருமாள் புரம்

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: குறுக்குச்சாலை

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கொம்பாடி

பங்குத்தந்தை: அருட்பணி. லாசர்

குடும்பங்கள்: 12

ஞாயிறு திருப்பலி மாலை 07:00 மணி

திருவிழா: மே மாதம் 23-ம் தேதி

வழித்தடம்: புளியம்பட்டி-கொம்பாடி. இங்கிருந்து கிழக்கு நோக்கி 4கி.மீ தொலைவில் பச்சைபெருமாள்புரம் அமைந்துள்ளது.

Location map: Pachaiperumalpuram

https://maps.app.goo.gl/nBjHmudtwLBFxcX98

வரலாறு:

பச்சைபெருமாள் புரத்தில் சுமார் 1800 ஆம் ஆண்டு காலகட்டத்திலிருந்தே கத்தோலிக்க கிறித்தவ மக்கள் வாழ்ந்து வந்தனர். தொடக்க காலத்தில் இவர்கள் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்திற்கு சென்று இறைவனை வழிபட்டு வந்தனர்.

தொடர்ந்து வந்த காலங்களில் கொம்பாடி ஆலயத்திற்கு சென்று வந்தனர். இங்கிருந்து ஆலயம் செல்ல மிகத் தொலைவாக இருந்ததால் பச்சைபெருமாள்புரத்தில் ஒரு ஆலயம் ஒன்று கட்ட வேண்டும் என்று மக்கள் விருப்பம் தெரிவித்தனர்.

ஆகவே கொம்பாடி பங்குத்தந்தை அருட்பணி. பிரான்சிஸ் அவர்களின் பணிக்காலத்தில் மக்களின் ஒத்துழைப்புடன் ஆலயம் கட்டப்பட்டு, 23.05.2004 அன்று தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைக் குரு பேரருட்பணி. ஆஸ்வால்ட் அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குப்பணியாளர் அருட்பணி. லாசர் அவர்கள்