623 புனித விண்ணரசி மாதா ஆலயம், கொத்தமங்கலம்

    

புனித விண்ணரசி மாதா ஆலயம்

இடம் : கொத்தமங்கலம்

மாவட்டம் : நாமக்கல்

மறைமாவட்டம் : சேலம்

மறைவட்டம் : திருச்செங்கோடு

நிலை : கிளைப்பங்கு

பங்கு : புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், சோழசிராமணி

பங்குத்தந்தை : அருட்பணி. K. பிரசன்னா

குடும்பங்கள் : 30

அன்பியங்கள் : 4

சனிக்கிழமை மாலை 07.00 மணிக்கு திருப்பலி 

திருவிழா : ஆகஸ்ட் 15 ம் தேதி. 

வழித்தடம் : சோழசிராமணியில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் 9கி.மீ தொலைவில் கொத்தமங்கலம் உள்ளது.

Location map : https://maps.app.goo.gl/S7MPKAkqzddVf19b9

வரலாறு : 

நாமக்கல் மாவட்டத்தில் காவேரிக்கரையில் அமைந்துள்ள ஓர் அழகிய ஊர் கொத்தமங்கலம்.

கொத்தமங்கலத்தில் புதிதாக மனம் மாறிய கிறிஸ்தவர்களை அருட்தந்தை. மத்தேயு தெக்கடம் அவர்கள் வழிநடத்தி வந்தார்கள். 

1946ம் ஆண்டு முதல் பெருங்குறிச்சி தனிப்பங்காக உயர்த்தப்படவே, இப்பங்கின்கீழ் கொத்தமங்கலம் பகுதி கிளைகிராமமாக செயல்பட்டு வந்தது. 

கொத்தமங்கலத்தில் புதிய ஆலயம் அருட்பணி. மரியோ ரொடேசினி அவர்களின் முயற்சியால் கட்டப்பட்டு புனித விண்ணரசி அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டு, 2002 ம் ஆண்டு ஜனவரி மாதம் அர்ச்சிக்கப்பட்டு, பெருங்குறிச்சி பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்தது.

பிறகு, பெருங்குறிச்சி பங்கிலிருந்து சோழசிராமணி ஆலயமானது 2005 -ம் ஆண்டு தனிப்பங்காக உயர்த்தப்படவே, இதன் கிளைப்பங்காக கொத்தமங்கலம் மாறியது.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. K. பிரசன்னா.