512 புனித யூதா ததேயு ஆலயம், இரும்பாலை, சேலம்


புனித யூதா ததேயு ஆலயம்

இடம் : இரும்பாலை, சேலம்.

மாவட்டம் : சேலம்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : சேலம்

நிலை : பங்குத்தளம்

பங்குத்தந்தை : அருட்பணி. ஜார்ஜ் எட்வின், SAC

குடும்பங்கள் : 120
அன்பியங்கள் : 6

திருப்பலி நேரங்கள் :

ஞாயிறு : காலை 08.00 மணிக்கு திருப்பலி

திங்கள், செவ்வாய், வியாழன் : காலை 06.15 மணிக்கு திருப்பலி

புதன் : மாலை 06.30 மணிக்கு புனித யூதா ததேயு நவநாள் திருப்பலி

வெள்ளி, சனி : மாலை 06.30 மணிக்கு திருப்பலி

மாதத்தில் முதல் புதன் : மாலை 06.30 மணிக்கு திருப்பலி, குணமளிக்கும் செபவழிபாடு.

மாதத்தின் முதல் வெள்ளி : மாலை 06.30 மணிக்கு திருப்பலி, நற்கருணை ஆசீர்.

மாதத்தின் முதல் சனி : மாலை 06.30 மணிக்கு செபமாலை தோட்டத்தில் திருப்பலி.

திருவிழா : அக்டோபர் மாதம் 28-ம் தேதி.

வழித்தடம் : சேலத்திலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் இரும்பாலை உள்ளது.

வரலாறு

கி.பி 1971 -ஆம் ஆண்டில் அன்றைய இந்திய பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட சேலம் உருக்கு ஆலைக்கு 1979 -இல் பணியாளர் சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டது. 4000 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கிய உருக்காலையில் 1982 ல் நகரியம் உருவாக்கப்பட்டது.

இங்கு தங்கி உருக்காலையில் பணிபுரிந்த அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவரும் திருப்பலிக்காக 10கி.மீ தொலைவில் உள்ள சூரமங்கலம் பங்கிற்கு வந்து கொண்டிருந்தனர். அவ்வப்பொழுது அன்றைய சூரமங்கலத்தின் பங்குத்தந்தை அருட்பணி. செபாஸ்டின் அவர்கள், இவர்களின் இல்லங்களில் திருப்பலி நிறைவேற்றி வந்தார். 29.04.1986 அன்று இவர்கள் அனைவரும் இணைந்து மோகன் நகர் கத்தோலிக்கப் பேரவை என்னும் அமைப்பை உருவாக்கினர். இப்பேரவையின் கடின முயற்சியால் ஆலயம் எழுப்ப, 1987ல் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரிக்கு அருகாமையில், ஏற்கனவே வாங்கியிருந்த இடத்தில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

15.10.1989 அன்று திருப்பொருளறை கட்டிமுடிக்கப்பட்டு, ஆலயம் கட்டிமுடிக்கும் வரை அங்கேயே திருப்பலி நிறைவேற்றப்பட்டது. 28.10.1990 அன்று ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டு, புனித யூதா ததேயுவைப் பாதுகாவலராகக் கொண்டு சூரமங்கலத்தின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்தது.

27.01.1993 அன்று தனிப்பங்காக ஆயர் மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்களால் அறிவிக்கப்பட்டு, கத்தோலிக்க அப்போஸ்தலத்துவ சபை SAC (வின்சென்ட் பல்லோட்டின் சபை) குருக்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. அருட்பணி. சில்வெஸ்டர் ஜான் SAC அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். பங்குத்தந்தைக்கென புதிய இல்லம் 20.10.1995 அன்று கட்டிமுடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

1998 -இல் புனித யூதா ததேயு குருசடி கட்டப்பட்டு, ஒவ்வொரு புதன்கிழமையும் பல ஊர்களிலிருந்து மக்கள் வந்து நவநாள் சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டு, புனித யூதா ததேயுவின் வழியாக ஆண்டவர் பல புதுமைகளை மக்களுக்கு செய்து வருவதை உணர்ந்து வருகின்றனர். குறிப்பாக குழந்தை பாக்கியம், இரத்தப் புற்றுநோய் குணம் பெறல் போன்ற புதுமைகள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. 2007ல் ஆலயத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்ட அன்னை வேளாங்கண்ணி குருசடி, அனைத்து மக்களின் இறைப்பற்றையும் அதிகரித்து வருகின்றது.

இரும்பாலை புனித யூதா ததேயு ஆலய வெள்ளிவிழா (1993-2018) நினைவாக பங்குத்தந்தை அருட்பணி. தேவகுமார், SAC அவர்களின் முயற்சியாலும், பங்குமக்களின் நன்கொடைகளாலும் அழகிய செபமாலை தோட்டமும், சிலுவைப்பாதை நிலைகளும் கட்டப்பட்டு 30.03.2018, புனித வெள்ளியன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

பங்கில் உள்ள இல்லங்கள் :
1. Pallottine Social Welfare Centre.(Pallottines Fathers)
2. St. Joseph Convent(sisters of Aloysius Gonzaga).
3. St. Joseph Community (old Teacher training centre Sisters of Gonzaga).
4. Bon Secours Convent (Bon Secours Sisters).
5. San Jose Nivas (St. Joseph of Cluny Provincialate).

பங்கில் உள்ள பக்தசபைகள் :
1. பங்குப்பேரவை
2. வின்சென்ட் தே பவுல் சபை
3. மரியாயின் சேனை
4. இளையோர் இயக்கம்
5. மறைக்கல்வி மன்றம்
6. பாடகற்குழு
7. பீடச்சிறுவர்கள்

கல்விக்கூடங்கள்:
1. St.Vincent Pallotti Matriculation Higher Secondary School
2. St. Joseph Higher Secondary School

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருட்பணி. சில்வெஸ்டர், SAC (1993-1994)
2. அருட்பணி. S. சூசையன், SAC (1994-1998)
3. அருட்பணி. S. ஜோசப், SAC (1998-2002)
4. அருட்பணி. கிறிஸ்டோபர், SAC (2002-2004)
5. அருட்பணி. ஜான் பால்ராஜ், SAC (2004-2006)
6. அருட்பணி. மனுவேல்ராஜ், SAC (2006-2011)
7. அருட்பணி. சூசையன், SAC (2011-2014)
8. அருட்பணி. தேவகுமார், SAC (2014-2018)
9. அருட்பணி. ஜார்ஜ் எட்வின், SAC (2018 முதல் தற்போது வரை..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. ஜார்ஜ் எட்வின் SAC அவர்கள்.