525 புனித கார்மேல் மலை மாதா திருத்தலம், இளையாங்கண்ணி


புனித கார்மேல் மலை மாதா திருத்தலம்
இடம்: இளையாங்கண்ணி

மாவட்டம் : திருவண்ணாமலை
மறைமாவட்டம் : வேலூர்
மறை வட்டம் : திருவண்ணாமலை

நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்கு : புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், நாவக்கொல்லை

பங்குத்தந்தை : அருட்பணி. சார்லஸ் யேசுதாஸ்

பள்ளி தாளாளர்: அருட்பணி. பால் வேளாங்கண்ணி

குடும்பங்கள் : 1800
அன்பியங்கள் : 32

திருப்பலி நேரங்கள்:

ஞாயிறு
முதல் திருப்பலி : காலை 04.45 மணி
இரண்டாம் திருப்பலி : காலை 08.00 மணி

நாவக்கொல்லை : காலை 07.00 மணி

வார நாட்கள்
முதல் திருப்பலி : காலை 04.45 மணி
இரண்டாம் திருப்பலி : காலை 06.00 மணி

வார இறுதி நாட்கள்
சனிக்கிழமை
முதல் திருப்பலி : காலை 04.45 மணி
இரண்டாம் திருப்பலி : காலை 07.30 மணி
(மலைக்கோவிலில்)

சிறப்பு திருப்பலிகள்:
முதல் செவ்வாய் – அந்தோணியார் கெபி
முதல் வியாழன் – குழந்தை இயேசு கெபி

முதல் வெள்ளி – நற்கருணை ஆராதனை, திருப்பலி

இரண்டாம் சனி – ஆரோக்கியமாதா கெபி
மூன்றாம் சனி – சலேத் மாதா ஆலயம்
நான்காம் சனி – சகாய மாதா கெபி

அனைத்து கெபி திருப்பலிகளும் மாலை 06.30 மணிக்கு.

திங்கள்-ஞாயிறு – பேராலயத்தை சுற்றி அன்னையின் திருச்செபமாலை.

சிறப்பு வழிபாடுகள்:
ஒவ்வொரு பௌர்ணமியும் மாலை 06.00 மணிக்கு புனித கார்மேல் மலை மாதா திருத்தலத்தில் குணமளிக்கும் ஆசீர்வாத கூட்டமும், அதைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் மலைமேல் நடைபெறும்.

மண்ணின் இறையழைத்தல்கள்:

மண்ணின் அருட்பணியாளர்கள்
01. Fr.A.C.Savarimuthu, Vellore
02. Fr.R.Anthony, Tezpur, Assam
03. Fr.A. Abraham (Died), Shimla-Chandigarh
04. Fr.Y. Arockiasamy, Vellore
05. Fr.P.Susai, Bhopal, MP
06. Fr.D.Stanislaus (Died), Vellore
07. Fr.L.C.Belevendiran, Ooty
08. Fr.S. Ratchaganathan, Austin, Texas
09. Fr.S.Joseph Raja, Vellore
10. Fr.A.Motchanathan, Vellore
11. Fr.S.Albert Vincent, OSM (Servites)
12. Fr.S.Arockiasamy, OCD
13. Fr.C.Mathew, Vellore
14. Fr.M.Irudayasamy, Vellore
15. Fr.G.Andrew, SDM
16. Fr.D.Francis, CRS (Somascan)
17. Fr.A.Arul Francis, MSFS
18. Fr.A.Joseph, Vellore
19. Fr.A.Paulraj, OFM Cap
20. Fr.S.John Peter, Vellore
21. Fr.M.Peter Raj, Vellore
22. Fr.D.Felix Raj, Varanasi, UP
23. Fr.S.Arockiaraj, Vellore
24. Fr.G.Peter Raj, Vellore
25. Fr.P.Arulappan, Trichy
26. Fr.A. Anthonysamy, Varanasi, UP
27. Fr.D.Arockiasamy, Vellore
28. Fr.M.Chinnappan, Bareilly, UP
29. Fr.K. Arockiaraj, Vellore
30. Fr.G.Joseph Raj, OCD
31. Fr.S.Parthiban Raj, SDB
32. Fr.A.John Britto, Varanasi, UP
33. Fr.M. Yesudoss, Vellore
34. Fr.S.Philip Dhayananth, CMF (Claretians)
35. Fr.C.Arockiasamy, OSM(Servites)
36. Fr.A.Sebastine Arputharaj, OFM Cap
37. Fr.G.Charles, SDB
38. Fr.A.Carmel Alexander, Bhopal, MP
39. Fr.S.Paul Arockiadoss, SDM
40. Fr.G.Roche Nirmal Raj, OFM Cap
41. Fr.A. Arockia Paul Raj, CMF (Claretians)
42. Fr.G.Gabriel, SDC (Guanellians)
43. Fr.A. Kulandesu, Vellore
44. Fr.P.Paulraj , Bhopal, MP
45. Fr.A. Bosco Anthony, ISCH
46. Fr.M. Arockiadoss, SDB
47. Fr.M.Xavier, MSFS
48. Fr.M.Carmel Raj, Bongaigaon, Assam

மண்ணின் அருட்சகோதரிகள்:
01. Sr.Stella, SJC
02. Sr.Cyril, SJC
03. Sr.Olive, SJC
04. Sr.Rajareegam, SJC
05. Sr.Rosine, SJC
06. Sr.Antonine, MC
07. Sr.Thejus Maria, DM
08. Sr.Rose, FSAG
09. Sr.Lourdumary, FMA
10. Sr. Kulandai Theresa, SJT
11. Sr.Rani Xavier, DM
12. Sr.Francisca, MSI
13. Sr.Mary Anand, DM
14. Sr. Elizabeth, MC
15. Sr.Christina Mary, CSC
16. Sr.Santhi Xavier, DM
17. Sr.Pushparani, SSHJM
18. Sr.Anthoniammal, FSJ
19. Sr.Sabeena Jose, SCB
20. Sr.Jeya Mary, SSG
21. Sr.Clara, DM
22. Sr.Jesintha Mary, FMA
23. Sr.Juliet, FSAG
24. Sr.Vimala Mary, SAT
25. Sr.Vimal Tom, DM
26. Sr.Vimala, USS
27. Sr.Navome, DM
28. Sr.Celine, DM
29. Sr.Chinnammal, ASC
30. Sr.Arockiammal, ASC
31. Sr.Sheela, FSAG
32. Sr.Vasanthi, FSAG
33. Sr. Jebamalai Mary, JMJ
34. Sr.Santanamary, SAT
35. Sr.Jerlin Paul, DM
36. Sr. Sabeena Jose, DM
37. Sr.Arockia Christu Rani, DM
38. Sr. Arockia Mary, CSC
39. Sr. Magdeline Mary, DM.

திருவிழா : ஜூலை மாதம் 16 ஆம் தேதி.

வழித்தடம்:
திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி சாலையில் இளையாங்கண்ணி கூட்டு சாலையில் இருந்து 3 கி.மீ.

முகவரி:
பங்குத்தந்தை
புனித கார்மேல் அன்னை ஆலயம்
இளையாங்கண்ணி அஞ்சல்
தண்டராம்பட்டு தாலுக்கா
திருவண்ணாமலை மாவட்டம் - 606 753.

Location map : https://maps.app.goo.gl/jK48tegBhh1mQYTZ6

வரலாறு :

கி.பி. 1905 - ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் மையனூர் என்ற கிராமத்தில் இருந்து மொன்னான் குடும்பத்தைச் சார்ந்த தாவீது என்பவர், தற்போது உள்ள இளையாங்கண்ணி பகுதிக்கு வந்து குறவர்களோடு தங்கி விவசாயம் செய்து வந்தார். அதன் பிறகு எறையூர், விரியூர், மேமலூர் போன்ற ஊர்களிலிருந்து சில பேர் இங்கு வந்து விவசாய பணிகளை செய்து நிரந்தரமாக குடியேறினர்.

வந்தவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் என்பதால் தாங்கள் வழிபாடு நடத்த கூரையில் ஒரு கோவிலை கட்டி வழிபட்டனர். நாளடைவில் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருதயம்பட்டு பங்கின் கிளைப்பங்காக இளையாங்கண்ணி செயல்பட்டது.

1911- இல் சிறு ஆலயம் கட்டப்பட்டு 1938 - இல் அருட்பணி. P.J. ஜேக்கப் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது.

1953 - இல் அருட்பணி. J.C. ராயன் பொறுப்பில் இளையாங்கண்ணி தனிப் பங்காக உருவானது. மைக்கேல்புரம், தானிப்பாடி போன்ற கிராமங்களின் பொறுப்பையும் அருட்தந்தை கவனித்து வந்தார்.

அதன் பிறகு அருட்பணி. கரோப் அவர்கள் இளையாங்கண்ணியில் மூன்று நாட்களும், மைக்கேல்புரத்தில் மூன்று நாட்களும் தங்கி இறை பணி செய்து வந்தார். 1970 - இல் வேலூர் மறைமாவட்டத்துடன் இளையாங்கண்ணி இணைந்தது.

16-03 -1970 பங்கின் பொறுப்பை அருட்பணி. குரியன் அடிகள் ஏற்றார். அருட்தந்தை அவர்களின் முயற்சியால் மேரியின் மகள்கள் (D.M) சபை கன்னியர்கள் தங்கள் இறைப்பணியை தொடங்கினர்.

மக்களின் வசதிக்காக மருத்துவமனை தொடங்கப்பட்டது. அருட்சகோதரிகள் கல்விப்பணி, ஆலய பணி, மருத்துவப் பணி, சமுதாயப் பணி ஆகியவற்றை இன்றளவும் செய்து வருகின்றனர்.

1982 - இல் அருட்தந்தை பிலோமின் ராஜ் பங்கு பொறுப்பை ஏற்ற பிறகு பங்கின் வளர்ச்சி அதிகமாக இருந்தது. மலையின் மேல் கார்மேல் அன்னைக்கு அழகான சிற்றாலயமும், மக்கள் சென்றுவர வசதியான படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டன.

தற்போது உள்ள மிகபெரிய அழகான பங்கு ஆலயம், அருட்பணி. பிலோமின் ராஜ் அவர்களின் முயற்சியாலும், பங்கு மக்களின் ஒத்துழைப்புடனும், அருகில் வாழும் பிறசமய அன்பர்களின் உதவியுடனும் கட்டப்பட்டு, 12.12.1990 அன்று அர்ச்சிக்கப் பட்டது.

மலையடிவாரத்தில் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இவர் காலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மலைமேல் உள்ள ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. சுற்றிலும் உள்ள கிராமங்களிலிருந்து மத வேறுபாடுகளை களைந்து அனைத்து தரப்பு மக்களும் வந்து அன்னையின் அருளை பெற்று செல்கின்றனர். இன்றளவும் இது தொடர்கிறது. ஏற்கனவே நடந்து கொண்டிருந்த பாஸ்கா ஒலி ஒளி காட்சியானது இவர் காலத்தில் மலைக்கோயில் தொடங்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் மக்கள் காணும் வகையில் தொடர்ந்து நடந்து வருகிறது.

தொடர்ந்து பணிபுரிந்த அருட்தந்தையர்கள் பங்கின் வளர்ச்சிக்காக மிகச்சிறப்பாக உழைத்தனர்.

அருட்தந்தை. அமிர்தநாதன் அவர்கள் ஆலய மேற்கோபுரம் திருத்தி அமைத்தார், கல்லறைகள் வரிசையாக அமைத்து ஒழுங்கு செய்தார். அருட்தந்தை வனத்தையன் காலத்தில் 1995ல் உயர்நிலைப்பள்ளி உருவானது. 21.04.1995ல் கிளைப் பங்கான நாவக்கொல்லை புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது. அருட்தந்தை. பங்கிராஸ் அவர்கள் ஆலயத்திற்கு மின்விசிறிகள் அமைத்தார்.

1997 - இல் அருட்தந்தை சூசைநாதன் பணியேற்றபின் பங்கில் கல்வி வளர்ச்சி அதிகமாக இருந்தது. மாணவர்கள் அதிகமாக மேற்படிப்புக்கு சென்றனர். மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு மிகப் பெரிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டன. மாணவர் இல்லமும் தொடங்கப்பட்டது.

அருட்பணி. ஜான் போஸ்கோ காலத்தில் மலைக்கோவிலுக்கு சாலை வசதி அமைக்கப்பட்டது. வெளியூர்களிலிருந்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மக்கள் திரளாக வர ஆரம்பித்தனர்.

அருட்தந்தை. ஜெயசீலன் காலத்தில் குருவகம் புதுப்பிக்கப்பட்டது. பங்கு ஆலயம் புதுபிக்கப்பட்டது. 2015 ஆம் கல்வி ஆண்டிலிருந்து அருட்தந்தை. பால் வேளாங்கண்ணி தாளாளராக சிறப்பாக பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்.

தற்போது 2019 முதல் அருட்பணி சார்லஸ் இயேசுதாஸ் அவர்கள் பங்கு தந்தையாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பங்கு மக்களின் உதவியுடன் சிலுவைப்பாதை நிலைகள் மலையில் அமைக்கப்பட்டு 2018 ஜூலை 16, அன்று அர்ச்சிக்கப்பட்டது. பங்கு ஆலயத்திற்கு முன்பு கொடிமரம் அமைக்கப்பட்டது. இறைமக்கள் கூடி திருப்பலியில் பங்கெடுக்க மலைகோயில் முன்பு கூடாரம் அமைக்கப்பட்டது. பங்கு ஆலயத்தில் ஒலி அமைப்பு (Sound System) புதுப்பிக்கப்பட்டது.

சிறப்புக்கள்:

1. வேலூர் மறை மாவட்டத்தில் அதிகமான கிறிஸ்தவ குடும்பங்கள் வசிக்கும் பெரிய பங்கு இளையாங்கண்ணி.

2. பாஸ்கா ஒலி-ஒளி காட்சி 36 ஆண்டுகளாக உயிர்ப்பு பெருவிழா ஞாயிறுக்கு அடுத்து வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. 25 மேடைகளில் சுமார் 250 -க்கும் மேற்பட்ட கலைஞர்களால் இயேசுவின் வாழ்க்கை வரலாறு நடித்து காண்பிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பல ஊர்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இரவு முழுவதும் இருந்து இந்நிகழ்ச்சியை காண்கின்றனர். இந்நிகழ்ச்சி பங்கின் பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

3. ஒவ்வொரு ஆண்டும் பெரிய வெள்ளி அன்று இயேசுவின் பாடுகளை நினைவு கூறும் பொருட்டு பெரிய சிலுவைப்பாதை நடத்தப்படுகிறது. மலையடிவாரத்தில் முதல்நிலை தொடங்கி மேல்பகுதியில் கல்வாரி மலையில் இயேசுவை சிலுவையில் அறைந்தது போன்று மிகவும் தத்ரூபமாக நடித்து காண்பிக்கப்படுகிறது. இந்நிகழ்விலும் ஆயிரக்கணக்கான மக்கள் பக்தியுடன் பங்கேற்கின்றனர். 2020 ஆம் ஆண்டிலிருந்து தவக்கால சிலுவைப்பாதைகள் மலையில் அமைக்கப்பட்டிருக்கிற சிலுவைப்பாதை நிலைகளில் நடத்தப்படுகிறது. இதில் ஏராளமான மக்கள் பங்கெடுத்து வருகின்றனர்.

4. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16 ஆம் நாள் பங்கின் பாதுகாவலியான கார்மேல் அன்னை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது இரண்டு திருவிழாவிலும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தேர்கள் ஊர் முழுவதும் வலம் வரும்.

5. ஆழமான கிறிஸ்தவ விசுவாசத்தில் பங்கு மக்கள் வாழ்வதால் பங்கிலிருந்து 48 குருக்களும் 39 அருட்சகோதரிகளும் உருவாகியுள்ளனர்.

6. இயற்கை எழில்மிக்க மலையின் மேல் அன்னையின் ஆலயம் அமைந்துள்ளதால் செபிப்பதற்கு ஏற்ற இடமாக அமைந்து இருக்கிறது. இங்கு வீற்றிருக்கும், அன்னையின் பரிந்துரையில் ஏராளமான புதுமைகள் அன்றாடம் நடந்து வருகிறது.

பங்கில் உள்ள நிறுவனங்கள் :

1. RCM துவக்கப் பள்ளி
2. கார்மேல் மேல்நிலைப் பள்ளி
3. DM கன்னியர் இல்லம்
4. கார்மேல் மாதா மருத்துவ மனை.

பங்கில் செயல்படும் அமைப்புகள்:

1. கத்தோலிக்க மாதர் சங்கம்
2. கோல்பிங் இயக்கம்
3. கத்தோலிக்க விவசாய சங்கம்
4. கல்விக் குழு
5. கார்மேல் அன்னை கலைக்குழு
6. கார்மேல் அன்னை பாடகற்குழு
7. பீடச் சிறுவர்கள் குழு
8. இளைஞர் இயக்கம்
9. சிறியோர் மறைப்பரப்பு பணியாளர்கள் இயக்கம்.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. Fr. Carof
2. Fr. Vallabanathar
3. Fr.J.C. Rayan
4. Fr.K.P. Kurian (1970-03-16 1982-07-07)
5. Fr.A. Philomin Raj (1982-07-08 1991-07-28)
6. Fr.A. Amirthanathan (1991-07-29 1993-08-13)
7. Fr.A.Paul Rajareegam (1993-08-14 1994-06-19)
8. Fr.P. Vanathaian (1994-06-20 1995-07-20)
9. Fr.S. Pancras (1995-07-21 1997-08-20)
10. Fr.L. Susainathan (1997-08-21 2004-06-14)
11. Fr.I.Arokiasamy (2004-06-15 2005-05-21)
12. Fr.R. Maria dossan (2005-05-22 2008-05-25)
13. Fr.P. John Bosco (2008-05-22 2015-06-07)
14. Fr.S. JayaSeelan (08-06-2015 2019-06-08)
15. Fr. Charles Yesudas (08-06-2019 till today)

புனித கார்மேல் அன்னையின் ஆலயம் வாருங்கள்.. ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்லுங்கள்..

தகவல்கள் : பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடன் பங்கு உறுப்பினர்.