145 புனித பத்தாம் பத்திநாதர் ஆலயம், படர்நிலம்


புனித பத்தாம் பத்திநாதர் ஆலயம்

இடம் : படர்நிலம், மணவாளக்குறிச்சி.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்பணி மரிய அன்றோ ஹால்வின்.

நிலை : பங்குதளம்
கிளை : புனித அடைக்கல அன்னை ஆலயம், தட்டான்விளை.

குடும்பங்கள் : 240
அன்பியங்கள் : 9

ஞாயிறு திருப்பலி : காலை 07.30 மணிக்கு

திருவிழா : ஆகஸ்ட் மாதம் 21 ம் தேதியை மையமாகக் கொண்ட பத்து நாட்கள்.

படர்நிலம் தலத்திருச்சபை வரலாறு :

கொல்லம் மறை மாவட்ட ஆயர் மேதகு அலாய்சியஸ் மரிய பென்சிகர் அவர்களால் மாங்குழி பங்கு உருவாக்கப்பட்டு கோட்டார் மறை வட்டத்தின் கீழ் இணைக்கப் பட்டது. 1906 ம் ஆண்டு மாங்குழி பங்காக உருவானது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி ஜான் D குருஸ் OCD அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். 1906 ம் ஆண்டில் மணவாளக்குறிச்சி புனித அந்தோணியார் குருசடி, மணவாளக்குறிச்சி பகுதிக்கான மறைபரப்பு தளமாக செயல்பட்டு வந்தது.

19-07-1906 ல் திரு தொம்மா -திருமதி பிரகாசி ஆகியோரது குழந்தை மரியாயிக்கு அருட்பணி ஜான் D குரூஸ் OCD அவர்களால் முதல் திருமுழுக்கு வழங்கப்பட்டது. மணவாளக்குறிச்சி புனித அந்தோணியார் குருசடியில், இறைமக்களுக்கு மாங்குழி புனித அன்னாள் சபை அருட்சகோதரிகளால் மறைக்கல்வி போதிக்கப் பட்டதுடன், ஒரு முழு நேர உபதேசியார் நியமிக்கப்பட்டு மாலை நேரங்களில் வீடுகளில் செபம் செய்வதுடன் மறைக்கல்வியும் போதிக்க்கப்பட்டு வந்தது.

மருதிவிளை பகுதியிலுள்ள மக்களின் இறை நம்பிக்கையை வளர்க்கும் விதமாக 24-12-1944 ல் புனித அந்தோணியார் குருசடி அருட்பணி சூசை மிக்கேல் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

கொல்லம் மறை மாவட்டத்திலிருந்து கோட்டார் மறை வட்டம் 1930 ம் ஆண்டு கோட்டார் மறை மாவட்டமாக உயர்த்தப் பட்டது. இந்நிலையில் மணவாளக்குறிச்சி, பம்மந்துமூலை, கீழத்தெரு, படநிலம், பரப்பற்று, கூட்டுமங்கலம், மருதிவிளை ஆகிய பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள் திரு ஏ. அந்தோணிமுத்து நாடார் அவர்கள் தலைமையில் அனைத்து பகுதிகளிலும் வாழும் கிறிஸ்தவ மக்களின் விசுவாசத்தை வளர்க்கின்ற விதத்திலும், மறைபரப்பை தூண்டுகின்ற விதத்திலும் அன்றைய கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு T. R ஆஞ்ஞிசுவாமி அவர்களை அணுகி, எல்லா பகுதிக்கும் மையப்பகுதியாக விளங்கும் படநிலம் (தற்போதைய படர்நிலம்) (சேர மன்னர்களின் படைநிலம்) பகுதியில் நிலம் வாங்க அனுமதி பெறப் பட்டது.

03-06-1951 ல் இப் பங்கின் பாதுகாவலரான புனித பத்தாம் பத்திநாதருக்கு முக்திபேறு பட்டமும், அதனைத் தொடர்ந்து 02-05-1954 ல் புனிதர் பட்டமும் வழங்கப்பட்டது. மக்களின் அயராத முயற்சியால் அன்றைய பங்குத்தந்தையின் ஆசியுடன் தற்போதைய புதிய மிக்கேல் அதிதூதர் குருசடியின் பின்பக்கம் மணல்சுவர் எழுப்பி ஓலைக்கூரை வேய்ந்த சிறிய ஆலயம் எழுப்பப்பட்டு 22-08-1956 ல் புனித பத்தாம் பத்திநாதரை பாதுகாவலாகக் கொண்டு அர்ச்சிக்கப் பட்டது. 1964 ம் ஆண்டு மாங்குழி பங்கின் கிளைப் பங்காக உயர்த்தப் பட்டது. தற்போதைய ஆலயம் 1968 ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.

அருட்பணி சேகர் மைக்கிள் அவர்களின் அரிய முயற்சியால் 05-05-1999 அன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு லியோன் அ. தர்மராஜ் அவர்களால் தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. பிலாவிளை, வசந்தபுரம், தட்டான்விளை ஆலயங்கள் இதன் கிளைப் பங்குகளாக இணைக்கப் பட்டது. தற்போது தட்டான்விளை புனித அடைக்கல அன்னை ஆலயம் மட்டும் படர்நிலம் பங்கின் கிளைப் பங்காக உள்ளது.

அருட்பணி ம. தனிஸ்லாஸ் அவர்கள் பணிக்காலத்தில் 1970 ம் ஆண்டு புனித மிக்கேல் அதிதூதர் குருசடி கட்டப்பட்டது.

அருட்பணி S. M. மரியதாஸ் பணிக்காலத்தில் (1971-1975) புனித யூதா ததேயூஸ் நவநாள் துவங்கப் பட்டது.

அருட்பணி J. அகஸ்டின் பணிக்காலத்தில் 27-08-1988 ல் ஆலய முன்மண்டபம் அமைக்கப் பட்டது.

அருட்பணி S. ஆன்றனி ஜெயா பணிக்காலத்தில் 18-11-2015 ல் இறை இரக்கத்தின் நவநாள் துவங்கப்பட்டது.

அருட்பணி கிளாட்சன் பணிக்காலத்தில் 2012 ம் ஆண்டு சமூக நலக்கூடம் கட்டப்பட்டது.

புனித அன்னை தெரசாள் தையல் பயிற்சியகம் 2001 ம் ஆண்டு உருவாக்கப் பட்டது.

புனித பத்தாம் பத்திநாதர் மழலையர் பள்ளி 2002 ம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்டது.

தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி மரிய ஆன்றோ ஹால்வின் அவர்கள் இப்பங்குதளத்தை சிறப்பாக வழி நடத்தி, வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி கொண்டு செல்கிறார்.

படர்நிலம் தலத்திருச்சபையின் இறையழைத்தல்கள்:

Fr Y. மரிய டேவிட் OCD
Sis பிதலிஸ்
Sis லீமா
Sis Y. மரிய பிதலிஸ்
Sis S. செலின்
Sis A. ஜெயதீபா
Sis A. மேரி ஜான்சி ஆலன் ரோஸ்.