புனித மாற்கு ஆலயம்
இடம் : பிருந்தாவன் நகர், ஆதம்பாக்கம், சென்னை.
மாவட்டம் : சென்னை
சென்னை -மயிலை உயர் மறைமாவட்டம்.
நிலை : பங்கு தளம்
கிளைகள் : இல்லை
குடும்பங்கள் : 500
அன்பியங்கள் : 18
ஞாயிறு திருப்பலி : காலை 06.30, காலை 08.30 மற்றும் ஆங்கிலத்தில் மாலை 05.30 மணிக்கு.
பங்குத்தந்தை : அருட்பணி அம்புறோஸ்.
திருவிழா : ஏப்ரல் 25 ம் தேதி புனித மாற்கு தினத்தை உள்ளடக்கிய ஒன்பது நாட்கள்.
சிறு குறிப்பு :
சுமார் 43 ஆண்டுகள் பழமையான இவ்வாலயம் ஆரம்பத்தில் ஓலைக்குடிலாக இருந்தது. அவை மாற்றப் பட்டு தற்போது அழகிய ஆலயம் கட்டப்பட்டு உள்ளது.
இங்கு ஜூனியர் மரியாயின் சேனை உருவாக்கப் பட்டு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பது இப்பங்கின் தனிச்சிறப்பு. மேலும் பாடல்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப் பட்டு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு தனியாக சிறப்பு பாடல் பயிற்சியும் அவர்களுக்கான திருப்பலி ஞாயிறு காலை 10.00 மணிக்கு நடத்தப்பட்டு அவர்களே பாடல்கள் பாடி சிறப்பிப்பதும் சிறப்பான நிகழ்வாகும். மேலும் ஞாயிறு மறைக்கல்வி வகுப்புகள் முடிந்தவுடன் சிற்றுண்டி கொடுப்பதும் டிசம்பர் 27 ம் தேதி மாசில்லா குழந்தைகள் திருநாளை முழுவதும் குழந்தைகளுக்காக அர்ப்பணித்து, அன்று குழந்தைகளை மூன்று அரசர்களாக வேடமணியச் செய்து சிறப்பாக கொண்டாடுகின்றர்.