847 புனித ஜெபமாலை அன்னை ஆலயம், எறையூர்

                 

புனித ஜெபமாலை அன்னை ஆலயம்

இடம்: எறையூர், உளுந்தூர்பேட்டை தாலுகா, 607201

மாவட்டம்: கள்ளக்குறிச்சி

மறைமாவட்டம்: புதுவை -கடலூர் உயர்மறைமாவட்டம்

மறைவட்டம்: திருக்கோவிலூர்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித அந்தோனியார் ஆலயம், வடகுரும்பூர்

2. கிறிஸ்து அரசர் ஆலயம், பிள்ளையார்பாளையம்

3. புனித தானசாமி ஆலயம் (St Donatius), தானம்

4. புனித அருளானந்தர் ஆலயம், பில்ராம்பட்டு

5. பின்னல்வாடி

6. எலவனாசூர்கோட்டை

7. பல்லவாடி

8. எல்லைகிராமம்

9. அதையூர்

10. குஞ்சரம்

11. புகைப்பட்டி

பங்குத்தந்தை அருட்பணி. S. ஆல்பர்ட்

உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. பார்ட் அகஸ்டின் 

குடும்பங்கள்: 2500

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி அதிகாலை 04:30 மணி காலை 06:00 மணி, காலை 08:00 மணி, மாலை 06:00 மணி

நாள்தோறும் திருப்பலி அதிகாலை 04:30 மணி மற்றும் காலை 06:00 மணி

சனிக்கிழமை மாலை 06:00 மணி ஜெபமாலை, சகாய மாதா நவநாள், திவ்யநற்கருணை ஆசீர்

மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 06:00 மணி ஆலயத்தைச் சுற்றி ஜெபமாலை தேர்பவனி, நவநாள் திருப்பலி (தூய லூர்து மாதா கெபியில்)

செவ்வாய் மாலை 06:00 மணி திருப்பலி (புனித அந்தோனியார் திருத்தலம், காட்டுக்கோயில் -எறையூர்)

சனிக்கிழமை மாலை 06:00 மணி திருப்பலி புனித சகாய மாதா அருட்தலம், எறையூர் 

திருவிழா: மே மாதம் 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை.

தூய ஜெபமாலை மாதா திருவிழா: அக்டோபர் மாதம் 5,6,7 ஆகிய தேதிகளில்

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. R. சூசைநாதர், புதுவை -கடலூர்

2. அருட்பணி.‌ A. மரியதாஸ், புதுவை -கடலூர்

3. அருட்பணி.‌ R.  அல்போன்ஸ், புதுவை -கடலூர்

4. அருட்பணி. V. S. அந்தோனிசாமி, புதுவை -கடலூர்

5. அருட்பணி.‌ M. P. சுவக்கீன், புதுவை -கடலூர்

6. அருட்பணி.‌ S. மத்தேயு, சென்னை -மயிலை

7. அருட்பணி. L. மாசில்லாமணி, புதுவை -கடலூர்

8. அருட்பணி.‌ வெ. சா. லூர்துசாமி, புதுவை -கடலூர்

9. அருட்பணி.‌ S. ஞானாதிக்கம், புதுவை -கடலூர்

10. அருட்பணி.‌ S. அப்போலின், புதுவை -கடலூர்

11. அருட்பணி. M. A. ஞானப்பிரகாசம், புதுவை -கடலூர்

12. அருட்பணி. K. G. இருதயராஜ், புதுவை -கடலூர்

13. அருட்பணி.‌ K. S. பயஸ், சேலம் மறைமாவட்டம்

14. அருட்பணி.‌ அல்போன்ஸ் சந்தனம், புதுவை -கடலூர்

15. அருட்பணி.‌ K. S. ஞானஜோதி, வேலூர் மறைமாவட்டம்

16. அருட்பணி.‌ A. C. இருதயநாதன், புதுவை -கடலூர்

17. அருட்பணி.‌ S. ஜான் பீட்டர், பெல்லாரி மறைமாவட்டம்

18. அருட்பணி. M. A. பத்திநாதன், OMI

19. அருட்பணி.‌ V. ஆண்டனி இருதயராஜ், உதகை மறைமாவட்டம்

20. அருட்பணி.‌ மைக்கேல் ஜான், புதுவை -கடலூர்

21. அருட்பணி.‌ C. மார்க், OCD

22. அருட்பணி. C. அலெக்சாண்டர், SJ

23. அருட்பணி.‌ S. பெரியநாயகம், உதகை மறைமாவட்டம்

24. அருட்பணி.‌ A. ஆன்டனி பங்ராஸ், சென்னை -மயிலை

25. அருட்பணி.‌ S. ஜோசப் சகாயராஜ், புதுவை -கடலூர்

26. அருட்பணி.‌ C. சகாயராஜ், புதுவை -கடலூர்

27. அருட்பணி.‌ V. G. சார்லஸ், புதுவை -கடலூர்

28. அருட்பணி.‌ A. ஜான் பீட்டர், MSC

29. அருட்பணி. S. ஜேம்ஸ், HGN

30. அருட்பணி.‌ J. ஆரோக்கிய ராஜ், புதுவை -கடலூர்

31. அருட்பணி.‌ விமலன் ஜான் போஸ்கோ, OCD

32. அருட்பணி.‌ A. ஆரோக்கியராஜ், புதுவை -கடலூர்

33. அருட்பணி. K. டேவிட், MMI

34. அருட்பணி. A. செபஸ்தியான், MSFS

35. அருட்பணி. லூர்து இன்பராஜ், HGN

36. அருட்பணி. A. ஆண்ட்ரூஸ் மஜ்ஜல்லா, புதுவை -கடலூர்

37. அருட்பணி.‌ கஸ்பார், புதுவை -கடலூர்

38. அருட்பணி.‌ A. லூர்துசாமி, புதுவை -கடலூர்

39. அருட்பணி.‌ ஞானப்பிரகாசம், அருணாசலபிரதேசம் மறைமாவட்டம்

40. அருட்பணி.‌ T. மைக்கேல் துரைராஜ், புதுவை -கடலூர்

41. அருட்பணி.‌ P.  அந்தோனி சகாயராஜ், MMI

42. அருட்பணி.‌ மரியசூசை, புதுவை -கடலூர்

43. அருட்பணி.‌ R.  குழந்தைராஜ், CSJ

44. அருட்பணி. A. ஜேம்ஸ், SJ

45. அருட்பணி. A. இம்மானுவேல், SDB

46. அருட்பணி. C. ஜெரோம், குவாலியர் மறைமாவட்டம்

47. அருட்பணி.‌ வில்லியம் ஜான்சன் அந்தோனிராஜ், புதுவை -கடலூர்

48. அருட்பணி.‌ D. அகஸ்டின் பெர்னார்ட், OMI

49. அருட்பணி. ஜெபமாலை ராஜ், மியாவோ மறைமாவட்டம்

50. அருட்பணி. ஆன்ட்டோ மரியசூசை, புதுவை -கடலூர்

51. அருட்பணி. A. மரிய ஜோசப், OCD

52. அருட்பணி. P. சின்னப்பன்

53. அருட்பணி.‌ A. மகிமை ஆரோக்கியராஜ், MSFS

54. அருட்பணி.‌D. அந்தோனிசாமி, OSM

1. அருட்சகோதரர்.‌ S. ஸீடீபன்ராஜ், SJ

2. அருட்சகோதரர். I. அந்தோணிசாமி, CMSF

3. அருட்சகோதரர். A. டேவிட் பிரான்சிஸ், SHJ

4. அருட்சகோதரர். J. ஸ்டீபன் செல்வராஜ், FSP

1. அருட்சகோதரி. ஜெசிந்தாமரி, FIHM

2. அருட்சகோதரி. பாப்டிஸ்ட் மேரி, FIHM

3. அருட்சகோதரி.‌ அலெக்சாண்ட்ரா மேரி, FIHM

4. அருட்சகோதரி. மரிய சின்னம்மாள், FIHM

5. அருட்சகோதரி.‌ இருமீனாமேரி, FIHM

6. அருட்சகோதரி. தேசிரேமேரி, FIHM

7. அருட்சகோதரி. ஸ்டெல்லா மேரி, FSAG

8. அருட்சகோதரி. அன்னமேரி, FIHM

9. அருட்சகோதரி.‌ ஆபேல்மேரி, FIHM

10. அருட்சகோதரி.‌ கர்சியா மேரி, FIHM

11. அருட்சகோதரி.‌ குளோதியா மேரி, FIHM

12. அருட்சகோதரி.‌ ஹில்தா கார்த், FIHM

13. அருட்சகோதரி. தெசிலீனாமேரி, FIHM

14. அருட்சகோதரி. மார்டினா மேரி, FIHM

15. அருட்சகோதரி.‌ ஹிலாரியன் மேரி, FIHM

16. அருட்சகோதரி.‌ காசியான் மேரி, FSAG

17. அருட்சகோதரி. பிலோமினாள், FIHM

18. அருட்சகோதரி. மேரி அல்போன்சா, SAP

19. அருட்சகோதரி. புளோரா, SJC

20. அருட்சகோதரி.‌ ஜெயமேரி, SJC

21. அருட்சகோதரி.‌ ரேமண்ட், SJC

22. அருட்சகோதரி.‌ செராபின், FSAG

23. அருட்சகோதரி.‌ லில்லி ஜெசிந்தா, FSJ

24. அருட்சகோதரி.‌ அந்தோணியம்மாள், FSAG

25. அருட்சகோதரி.‌ செலின் சகாயமேரி, FSAG

26. அருட்சகோதரி.‌ ஜிவானிட்டா மேரி புஷ்ப தெரேஸ், FIHM

27. அருட்சகோதரி.‌ ஆஞ்சலா, DHM

28. அருட்சகோதரி. ஜெசிந்தா, ME

29. அருட்சகோதரி.‌ விக்டோரியா, OCD

30. அருட்சகோதரி. ஆரோக்கியமேரி, FSAG

31. அருட்சகோதரி. ஜோஸ்பின் நிர்மலா ராணி, SCB

32. அருட்சகோதரி. மேரி வசந்தா, FIHM

33. அருட்சகோதரி. ரோசாலி, FIHM

34. அருட்சகோதரி.‌ கேத்தரின், ME

35. அருட்சகோதரி. ஜூலியன் மேரி, DMI

36. அருட்சகோதரி.‌ அன்னமேரி, FIHM

37. அருட்சகோதரி.‌ ஜோஸ்பின் நிர்மலா ராணி, FSJ

38. அருட்சகோதரி.‌ அமலி, FIHM

39. அருட்சகோதரி. சாராள், SCB

40. அருட்சகோதரி. ஜோஸ்லின் ப்ரீதா, SAP

41. அருட்சகோதரி. சாந்தி பாக்கியம், FIHM

42. அருட்சகோதரி. அன்னம்மாள், SJC

43. அருட்சகோதரி. சகாயம், SCB

44. அருட்சகோதரி. லில்லி புளோரா, SCB

45. அருட்சகோதரி. மேரி செல்வராணி, CSST

46. அருட்சகோதரி. விமல்டா மேரி, CSST

47. அருட்சகோதரி.‌ ஜென்சி ராணி, FIHM

48. அருட்சகோதரி. மரியம்மாள்

49. அருட்சகோதரி.‌ ஷீனா

50. அருட்சகோதரி.‌ அந்துவான் மேரி ரின்சி

வரலாறு:

1660 –ஆம் ஆண்டு “மதுரை மிஷினின்” வட எல்லையில் வேட்டவலத்திற்கும் தெற்கில், கிறிஸ்துவ சமுதாயத்தை கொண்ட ஊராக எறையூர் திகழ்ந்தது.

1679 – ஆம் ஆண்டு இயேசு சபையைச் சேர்ந்த குருவாகிய ப்ரெயர் (Freyre) அவர்களால், எறையூரில் ஒரு சிறிய வீடு செபக்கூடமாகப் பயன்படுத்தப்பட்டு, கிறிஸ்துவ சமுதாயத்தை உருவாகிய பெருமை இவரையே சாரும். மராட்டியர் செஞ்சியை கைவசப்படுத்தி ஆளும் போது ஏற்பட்ட போர்களின் விளைவாக பஞ்சம், பசி, பட்டினி ஏற்பட்டது. அதனால் எறையூரில் வாழ்ந்த கிறிஸ்துவ மக்கள் மேற்கே சேலத்தை நோக்கி சென்றுவிட்டனர்.

1740 –ஆம் ஆண்டில் பரிசுத்த தந்தை பாப்பரசர் 16-ஆம் கிரகோரியர் இந்தியாவில் முறைமையான திருமறை ஆட்சிப் பீடத்தை அமைத்தார். அப்போது எறையூர் புதுவை மிஷனோடு இணைக்கப்பட்டது. ஆனால் போர்த்துக்கீசிய நேரடி ஆட்சிக்கு உட்பட்டிருந்த பத்ருவாதோ (Padlovado) குருக்கள் தங்கள் கண்காணிப்பிலிருந்து, இப்பகுதியை உரோமையினுடைய நேரடி ஆட்சிக்கு விட்டுவிட விரும்பவில்லை. ஒருவித இரட்டை ஆட்சி நிலவியது. இந்நிலை 1887- ஆம் ஆண்டு வரை நீடித்தது.

புதிய ஆட்சிப்பீடம் அமைக்கப்பட்ட பின், கோவிலானுர் பங்கின் விசாரணையாக எறையூரும் அதன் சுற்றுபுறமும் இருந்து வந்தது. இப்புதிய பங்கை கண்காணித்தவர் அருள்தந்தை பார்துயில் (Badouil) இவர் பாரீஸ் வேதபோதகச் சபையைச் சார்ந்தவர். அவர் 1843 –ஆம் ஆண்டு முதல் 1865 வரை கோவிலானுரில் தங்கி மறைப்பணியாற்றினார்.

கோவாவைச் சார்ந்த குருக்களால், ஐந்நூறு பேர் கூடி வழிபாடு நடத்தக்கூடிய 64" 13" அளவுகள் கொண்ட கூரைக்கோவில் ஒன்று கட்டப்பட்டது. பார்துயில் அடிகள் 1844–ஆம் ஆண்டில் அந்தக் கோவிலை தன் வசப்படுத்தி, பழுதுபார்த்து கொடுத்ததால் ஏறக்குறைய 1860–ஆம் ஆண்டுவரை அது நல்ல நிலையில் இருந்து வந்தது. அக்கூரைக்கோவில் பயன்படுத்திய கல்சிலுவை இம்மாபெரும் தேவாலயத்தின்முன் கோபுர உச்சியில் அமைக்கப்பட்டுள்ளது.

புதுவை மிஷனின் ஆட்சிப் பீடத்தில் 1868-ஆம் ஆண்டு முதல் 1892 வரை மறையாட்சி செலுத்திய அருட்பெருந்தகை லவோனான் ஆண்டகை அவர்கள் அருள் கூர்ந்து 1870-ஆம் ஆண்டு கோவிலானுரிலிருந்து எறையூரைப் பிரித்து, தனிபங்காக உயர்த்தி தனி பங்கு குருவையும் நியமித்தார். அப்போது எறையூர் பங்கின் எல்லைக்குள் 46 கிளைப்பங்குகள் உள்ளடங்கியிருந்தது. 

1874-ஆம் ஆண்டு இப்போது உள்ள ஆலய கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, பிரெஞ்சு கோதிக் கட்டிடக்கலையில் அழகுற 1894 -ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.

அப்போது கிறிஸ்துவ சமுதாயம் வாழ்ந்திருந்த ஊர்களாவன: பாளையம், தென்குணம், குரும்பூர், கூத்தனூர், பில்ராம்பட்டு, பெருங்குரிக்கை, நெமிலி, தானம், பல்லவாடி, செல்லூர், தொலாம்பூண்டி, மேமாளூர், அரியூர், வேங்கூர், பழங்குர், மொகலார், நத்தாமூர், குன்னத்தூர், சீவம்பட்டு, தாம்பல், சோழவாண்டிபுரம், காட்டிடையார், பணப்பாடி, பாடியாந்தல், கோளப்பறை, தேனூர், பாசாறு, ரிஷிவந்தியம், குன்னியூர், சிக்காடு, சீதேவி, செரனாவூர், அதியூர், முட்டியம், ஆலங்குழி, துருவம், எலவனாசூர் கோட்டை, மேல்வழி, மெய்யூர், மண்டகாபாடி, பஸ்தர் பாளையம், பின்னலவாடி, புகைப்பட்டி, குஞ்சரம், ஏமம், களவானூர் ஆகியவை ஆகும்.

எறையூரின் கிளைப்பங்குகளாக இருந்த மேமாளூர், 1968  ஆம் ஆண்டு தனிப் பங்கானது.

1988 ஆம் ஆண்டு மேல்வழி தனிப் பங்கானது.

25.08.2010 அன்று சீதேவி தனிப்பங்கானது.

ஆலயமானது புனரமைக்கப்பட்டு, புதிய பீடம் அமைக்கப்பட்டு 30.05.2022 அன்று மேதகு பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

மே மாதம் நடைபெறும் ஆலய திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் விழாவில் பங்கேற்று சிறப்பு செய்கின்றனர். 

பங்கில் உள்ள சபைகள் இயக்கங்கள்:

1. மரியாயின் சேனை

2. மறைக்கல்வி

3. பாலர் சபை

4. சகோதர வாழ்வு சங்கம்

5. கோல்பிங் இயக்கம்

6. திருவழிபாட்டுக் குழு

7. காரியஸ்தர்கள் அமைப்பு 

பங்கில் உள்ள கெபிகள் & சிற்றாலயங்கள்:

1. தூய லூர்து மாதா கெபி

2. தூய ஜெபமாலை மாதா மணிமண்டபம்

3. புனித அந்தோனியார் காட்டுக்கோயில்

4. புனித சகாய மாதா அருட்தலம், இறையூர்

பங்கில் உள்ள கல்வி நிறுவனங்கள்:

1. புனித சூசையப்பர் மழலையர் பள்ளி

2. புனித சூசையப்பர் ஆர்.சி தொடக்கப்பள்ளி

3. புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி (ஆண்கள்/பெண்கள்)

4.புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி

5. புனித சார்லஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 

6. அசிசி மருத்துவமனை

பங்கில் உள்ள கன்னியர் இல்லங்கள்:

புனித மரியன்னை சபை சசோதரிகள்

புனித சார்லஸ் பொரோமியோ சகோதரிகள்

பங்குத்தந்தையர்களும் பணிக்காலமும்:

1. அருள்திரு. பொத்தெரோ (1870 -1874)

2. அருள்திரு. மரிலாப் (1874 -1884)

3. அருள்திரு. நீல் (1884-1887)

4. அருள்திரு. துப்பாஸ் (1887-1896)

5. அருள்திரு. பியர் (1896 -1897)

6. அருள்திரு. மூரி (1897 -1903)

7. அருள்திரு. பூர்னோ (1904 -1905)

8. அருள்திரு. வெருவா (1905 -1919)

9. அருள்திரு. ஒத்மார் (1919)

10. அருள்திரு. A.T. அந்தோணி (1919-1925)

11. அருள்திரு. மரிய தோமினிக் (1926-1928)

12. அருள்திரு. S. தோமினிக் (1928-1931)

13. அருள்திரு. திரிதோ (1931-1933)

14. அருள்திரு. T. அந்தோணிசாமி (1934-1938)

15. அருள்திரு. நோயேல் (1939-1955)

16. அருள்திரு. M.C. அபிரகாம் (1955-1958)

17. அருள்திரு. A.M. இஞ்ஞாசியார் (1958-1960)

18. அருள்திரு. எருவா ஆரோக்கியம் (1960-1963)

19. அருள்திரு. A. லூர்துசாமி (1963-1968)

20. அருள்திரு. T. மரிய நாதலு (1968-1970)

21. அருள்திரு. A. அடைக்கலசாமி (1970-1972)

22. அருள்திரு. அந்தோணிதும்மா (1972-1974)

23. அருள்திரு. K. பால்தலாமூர் (1974-1980)

24. அருள்திரு. K. இருதயம் (1980-1984)

25. அருள்திரு. S. ஜான் போஸ்கோ (1984-1989)

26. அருள்திரு. R. எலியாஸ் (1989-1994)

27. அருள்திரு. L. ஜேக்கப் (1994-1996)

28. அருள்திரு. M. சூசை (1996-1997)

29. அருள்திரு. L. ஜேக்கப் (1997-2000)

30. அருள்திரு. R.S. ஆரோக்கிய ராஜ் (2000-2002)

31. அருள்திரு. S. அல்போன்ஸ் (2002-2007)

32. அருள்திரு. L. ஜான் எடிசன் (2007-2008)

33. அருள்திரு. எலியாஸ் (2008 பிப்ரவரி -ஏப்ரல்)

34. அருள்திரு. ஜெரால்ட் புஷ்ப ராஜ் (2008 மே)

35. அருள்திரு. ரொசாரியோ (2008-2015)

36. அருள்திரு. S. ஆல்பர்ட் (2015.....)

வழித்தடம்: உளுந்தூர்பேட்டை வந்து, வேலூர் -திருக்கோவிலூர் சாலையில் எலவரசனார்கோட்டை -எறையூர்.

திருக்கோவிலூர் -எறையூர்

Location map:

https://g.co/kgs/S9nBK5

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி.‌ ஆல்பர்ட் அவர்கள்