447 தூய அலங்கார உபகார அன்னை ஆலயம், தூத்துக்குடி


தூய அலங்கார உபகார அன்னை ஆலயம்

இடம் : கீழ அலங்காரத் தட்டு தூத்துக்குடி

மாவட்டம் : தூத்துக்குடி
மறை மாவட்டம் : தூத்துக்குடி
மறை வட்டம் : தூத்துக்குடி

நிலை : பங்குத்தளம்

பங்குத்தந்தை : அருட்தந்தை. முனைவர் ஜான் S. செல்வம்

குடும்பங்கள் : 250 +
அன்பியங்கள் : 11

திருவழிபாட்டு நேரங்கள் :

ஞாயிற்றுக்கிழமை :
காலை 06:30 மணி - திருப்பலி
திங்கள் - வெள்ளி வரை:
காலை 06:00 மணி- திருப்பலி.
முதற் வெள்ளிக்கிழமை
காலை 05:30 மணி– நற்கருனை ஆசீர், திருப்பலி
முதற் சனிக்கிழமை :
மாலை 06:00 மணி- சப்பர பவனி, நவநாள், திருப்பலி.

திருவிழா : மே மாதம் 15-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையில்.

church website : www.ourladyofransomchurch.com

Church YouTube : https://www.youtube.com/channel/UC-h-mL9fCTN7yjIuFn4HuVA

facebook : https://www.facebook.com/ransomchurchtuticorin/

Location map : https://maps.app.goo.gl/Mj5xpUzNSc6W8rYt7

பங்கின் வரலாறு:

முத்துக்குளி மறை மாவட்டத்திற்கு முகவரி தந்த அங்காடித்திட்டு (அலங்காரத்திட்டு); முத்து எடுத்து விற்பனை செய்தும், மற்றும் வீடுகள் கட்ட நுரை கற்கள் (கடலின் கீழ் வாழும் பவளத்தை மீனவர்கள் ‘பவளப் பூச்சி’ என்பர். பவளப் பாறைகளை ‘நுரைகல்’ என்பர். அது நுரை போன்று காட்சி தருவதால்.) வெட்டும் தளமாக முத்துக்குளி மக்கள் சிறப்புடன் வாழ்ந்த இடம். முத்துச்சிப்பி மேடே, குவியலே அலங்காரத்திட்டு.

1751 முதல், சிற்றாலயமாக தொடங்கி 1950 - 1953 வரை, அருட்தந்தை வில்லவராயர் அவர்களை கடைசி பங்குத்தந்தையாகக் கொண்டு, 400 கிறிஸ்தவ குடும்பங்களை கொண்ட முத்துக்குளி பாரம்பரிய பக்தி சிறப்பு மிக்க பங்காக இருந்தது.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது, முத்து எடுத்து விற்பனை செய்யும் காலனி ஆதிக்கமும், முத்துகுளித்தலும் நிறைவுக்கு வந்ததால், முத்துக்குளித்த இப்பகுதி மக்கள் மதுரா கோட்ஸ் மில்-ன் பின்புறம் 1950 ல் குடிபெயர்ந்தார்கள்.

இடைபட்ட காலங்களில்; உப்பளம், ஆலய நிலத்தில் பனை பராமரிப்பு, மற்றும் கடற்கரையோரம் கரைவலை மீன்பிடி தொழில் செய்ய தாமிரபரனி ஆற்றோரம்

மீன் பிடித்தோர் அலங்காரத்திட்டு பகுதிக்கு குடிபெயர்ந்தனர்.

அதுமுதல் சிற்றாலயமாக மாற்றப்பட்டது.

கடந்து வந்த பாதைகள் :

1887 - ஆலய மணி பிரான்ஸ் நாட்டிலிருந்து கொணரப்பட்டது.

1902 - பழைய ஆலயத்தினுள் லூர்தன்னை மலை கெபி கட்டப்பட்டது.

1940 - அருட்தந்தை. பவுல் அலங்காரம் (பனிமய அன்னை ஆலய பங்குத்தந்தை) அவர்களால் ஆர்.சி. தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது.

1972 - அருட்தந்தை. அந்தோனிசாமி அவர்களால் ஆர்.சி. தொடக்கப்பள்ளி பழைய ஆலயத்தின் பின்புறம் கட்டப்பட்டது.

22.10.1884 - இவ்வாலயத்திற்கு, திரு.சவரிமுத்து மஸ்கரனாஸ் 4.64 ஏக்கர்,

05.07.1927 - திரு. மனுவேல் சேவியர் மோத்தா ஒரு ஏக்கர் மற்றும்

01.05.1947 - திரு.களஞ்சியம் கோமஸ் 51 சென்ட் நிலம், ஆலய தென்பாக பிரதான “கித்தேரியம்மாள் சாலை” உட்பட பனிமய அன்னை பங்கு மக்களால் தானமாக கொடுக்கப்பட்டு, அப்போதைய பங்குத்தந்தை பேரருட்தந்தை. தல்மேதா சுவாமிகளால் இணைப்பங்காக பராமரிக்கப் பட்டது.

மேலும் இணைப்பங்காக :

1956 - 1960 தருவைகுளம் : அருட்தந்தை. P.M. மாணிக்கம் சுவாமிகள்.

1961 - 1962 ஆம் ஆண்டு காலகட்டத்தில் புனித சூசை தொழுநோயாளர் மருத்துவமனை, அருட்தந்தை. அகஸ்தின் சுவாமிகளின் ஆன்மீக பராமரிப்பில்.

1963 - 86 இன்னாசியார்புரம் : அருட்தந்தை. திபூர்ஸிஸ் சுவாமிகள்.

13.02.1977 - ஆலயம், லூர்துமாதா கெபி, பீடத்துடன் அருட்தந்தை. C. சேவியர் அவர்களால் கட்டப்பட்டது.

1987 - 2001 தாளமுத்துநகர் : அருட்தந்தை. அந்தோனி ராபர்ட் சுவாமிகள்.

2001 - 2015 லூர்தம்மாள்புரம் : அருட்தந்தை. ஜான் S. செல்வம் சுவாமிகள்.

2001 - லூர்தம்மாள்புரம் பங்கு காலத்தில் தற்போதைய ஆர்.சி. தொடக்கபள்ளி ரூ.17,00,000-ல் அருட்தந்தை. முனைவர். ஜான் S. செல்வம் அவர்களின் சொந்த உழைப்பில் கட்டப்பட்டது.

தனிப்பங்காக உயர்வு:

18.07.2015 - மேதகு. ஆயர் யுவோன் அம்புரோஸ் D.D.,Ph.D., அவர்களால் 168 குடும்பங்களை கொண்டு, ஜான்சேவியர் நகர், மேல அலங்காரத்திட்டு, லசால்நகர், கோவில்பிள்ளைவிளை(வடக்கு) பகுதிகள், 112 வது தனிப்பங்காக ஏற்படுத்தப்பட்டு, அருட்தந்தை. முனைவர். ஜான் S. செல்வம் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்கள்.

03.10.2015 - அருட்தந்தை. முனைவர். ஜான் S. செல்வம் அவர்களின் சொந்த உழைப்பில் ஆலய வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் ரூ.14,00,000 -செலவில் கட்டப்பட்டது.

30.12.2015 - புதிய பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது.

23.05.2017 - லூர்தன்னை கெபி அருட்தந்தை. ஜான் S. செல்வம் Ph.D., அவர்களால் கட்டப்பட்டது.

18.12.2017- முத்துக்குளித்துறையின் முத்தாம் மீனவ குலத்தின் புனிதமாம் இறையடியார் அருட்தந்தை. அந்தோனி பர்னான்டோ என்ற சூசை நாதரின் 135 -வது பிறந்த நாளில் தந்தையின் திரு சொரூபம் தந்தையால் தொடங்கப்பட்ட, பரிசுத்த பனிமய தாயின் அமலோற்பவ மாதா இளைஞர் சபையினரால் அலங்காரத்திட்டில் நிறுவப்பட்டுள்ளது என்பதில் பெருமை கொள்கிறோம்.

08.12.2015 - அருட்தந்தை. பங்கிராஸ் எம்.ராஜா சுவாமிகளால் புதிய ஆலயதின் அடிக்கல் நாட்டப்பட்டது.

18.07.2019 - தேவ அன்னைக்கு புதிய ஆலயம் அருட்தந்தை. ஜான் S. செல்வம் M.A., M.Sc., M.Ed., M.L., Ph.D., அவர்களால் ரூ.2,24,12,440 செலவில் கட்டி முடிக்கப்பட்டு, மேதகு ஆயர். முனைவர். அ. ஸ்டீபன் D.D.,Ph.D., அவர்கள் தலமையிலான ஆளுமையில்; மறைமாவட்டத்தில் முதல் பங்கு ஆலயமாக அர்ப்பணிக்கப் பட்டது.

பங்கின் மண்ணின் மைந்தர்கள்:

முதல் மண்ணின் மைந்தர் அருட்தந்தை. M. மரிய மிக்கேல் சுபாஸ் (மியாவோ மறைமாவட்டம், அருணாச்சல பிரதேசம்)
அருட்தந்தை. லிவின் (கிளாரட்சபை)
அருட்சகோதரர். சுதர்சன் (சேசு சபை)

அருட்சகோதரி. டினா (திரு இருதயசபை)
அருட்சகோதரி. டயானா (அன்னாள் சபை,திருச்சி)
அருட்சகோதரி. ரோஜர் (அன்னாள் சபை, திருச்சி)
அருட்சகோதரி. கிளான்சி (கார்மல் சபை)
அருட்சகோதரி. ஷெர்லின் (கார்மல் சபை)
அருட்சகோதரி. சார்மிளா (கார்மல் சபை)
அருட்சகோதரி. லுமினா (கார்மல் சபை)