348 புனித சவேரியார் ஆலயம், பெரிய கொடிவேரி


புனித சவேரியார் ஆலயம்.

இடம் : பெரிய கொடிவேரி

மாவட்டம் : ஈரோடு

மறை மாவட்டம் : உதகை

மறை வட்டம் : சத்தியமங்கலம்

பங்கு உருவான ஆண்டு : கி.பி 1640

நிலை : பங்குத்தளம்

கிளைகள் :
1. புனித சகாய மாதா ஆலயம், ஏழூர்
2. குழந்தை இயேசு ஆலயம், நால்ரோடு.

பங்குத்தந்தை : அருட்பணி R. J. L அந்தோணி ராஜ்

குடும்பங்கள் : 200
அன்பியங்கள் : 10

ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணி மற்றும் காலை 07.30 மணி.

தினந்தோறும் திருப்பலி : காலை 06.15 மணிக்கு

சகாய மாதா ஆலயம், ஏழூர் திருப்பலி : பிரதி வாரம் சனிக்கிழமை மாலை 07.00 மணி.

குழந்தை இயேசு ஆலயம்,(நால்ரோடு),D .G .புதூர் திருப்பலி : பிரதி வாரம் புதன் கிழமை மாலை 06.30 மணி.

வனத்து சின்னப்பர் கெபியில் மாதத்தின் முதல் வியாழன் மாலை 06.00 மணிக்கு திருப்பலி.

பங்கு திருவிழா : டிசம்பர் முதல் ஞாயிறு.

D.G. புதூர் (நால்ரோடு)குழந்தை இயேசு ஆலயம் - ஜனவரி 2ஆம் ஞாயிறு.

வனத்து சின்னப்பர் கெபி - ஜனவரி 3 ஆம் ஞாயிறு.

ஏழூர் சகாயமாதா ஆலயம் - அக்டோபர் முதல் ஞாயிறு.

மண்ணின் மைந்தர்கள் :

1. அருட்பணி ஜே. அலெக்ஸ்
2. அருட்பணி ஜோ பெலிக்ஸ்
3. அருட்பணி அமலதாஸ்
4. அருட்பணி ஆல்வின்.
5. அருட்சகோதரி விக்டோரியா ராணி
6. அருட்சகோதரி அல்போன்ஸ்
7. அருட்சகோதரி சந்தன மேரி
8. அருட்சகோதரி சந்திரா
9. அருட்சகோதரி ராணி
10. அருட்சகோதரி மேரி
11. அருட்சகோதரி ரீட்டா
12. அருட்சகோதரி இருதய மேரி
13. அருட்சகோதரி ரெஜி
14. அருட்சகோதரி ஹெலன் கிறிஸ்டினா
15. அருட்சகோதரி செல்வராணி
16. அருட்சகோதரி ஜாஸ்மின்.

வழித்தடம் :

ஈரோடு - கோபிசெட்டி பாளையம் - பெரிய கொடிவேரி.

கோவை - சத்தியமங்கலம் - பெரிய கொடிவேரி.

வரலாறு :

பவானி ஆற்றின் கரையில் எழில் மிகு வயல்கள் நிறைந்த அழகிய கிராமம் பெரிய கொடிவேரி. ஆற்றின் குறுக்கே மைசூர் மன்னரால் பெரும் பாறைகளைக் கொண்டு கட்டப்பட்ட அணை காணப்படுவது இவ்வூரின் தனிச்சிறப்பு ஆகும். தற்போது தமிழக அரசின் சுற்றுலாத் தலமாகவும் மாற்றப்பட்டு பராமரிக்கப் படுகிறது. போர்ச்சுகீசியர் காலத்திலலேயே திருமறையின் வித்து இம் மண்ணில் ஊன்றப்பட்டுள்ளது.

1640- இல் இங்கு மறைத்தளம் தோன்றிய போது கிறிஸ்தவ ஒளி ஏற்றப்பட்டது.

1775-இல் பாண்டிச்சேரி மிஷன் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளது.

1799-இல் பத்து கிளைப் பங்குகளைக் கொண்ட தலைமைப் பங்காக விளங்கியது.

1845-இல் கோவை மறை மாவட்டம் உருவான போது அதனுடன் இணைக்கப்பட்டது.

1849-இல் அருட்பணி பாஷீன் பங்குத்தந்தையாக நியமிக்கப் பட்டார். இவரது காலத்திலேயே பழைய ஆலயம் கட்டப்பட்டது.

இங்குள்ள மக்களின் முக்கியத் தொழில் விவசாயம். ஆகையால் இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக 1890 முதல் 1910 வரை இங்கு பணியாற்றிய அருட்பணியாளர்கள் ஜோசப் பாது, அகஸ்தின் ராய், கவுச்சர் ஆகியோர் சுமார் 300 ஏக்கர் நிலங்களை விலைக்கு வாங்கி, மக்களிடம் விவசாயம் செய்யக் கொடுத்து உதவினர்.

விவசாயத்திற்கு உதவாத சுமார் 100 ஏக்கர் நிலங்களின் தண்ணீர் பாசனத்திற்காக ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசாங்கம் மூலமாக முயன்று, கட்டி பாசனத்திற்கு உதவினர்.

1902 -இல் கன்னியர் இல்லம் அருட்பணி கவுச்சர் அவர்களால் கட்டப்பட்டது.

1910 -இல் அருட்பணி பெடிட் அவர்கள் அரசு அனுமதியுடன் துவக்கப் பள்ளியை நிறுவினார்.

1940-இல் மைசூர் மறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

1945-இல் அருகிலுள்ள குன்றி மலைவாழ் மக்களின் கல்விக்காக அருட்பணி ஷெர்வியர் கருணை இல்லம் ஏற்படுத்தினார்.

1955-இல் தோன்றிய உதகை மறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

1956-இல் அருட்பணி குரியன் நடுத்தடம் அவர்கள் முயற்சியால் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது.

1961-இல் அருட்பணி நோவே அவர்களின் முயற்சியால் உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது.

1965-இல் சலேசியன் குருக்களான அருட்பணி அந்தோணிசாமி, அருட்பணி J. ஜோசப் மற்றும் அருட்பணி N. A ஜோசப் ஆகியோரால் பழைய ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, 1965-இல் மேதகு ஆயர் அந்தோணி படியாரா அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. இவர் 1946-கல் இப் பங்கின் இணை பங்குத்தந்தையாக பணி செய்தவர் ஆவார்.

2000 -இல் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அருட்பணி ஜான் ஆகியோரின் முயற்சியால் மேல்நிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டது.

ஆலயத்தின் எதிரில் உள்ள பாத்திமா அன்னை கெபியும், ஆலய வளாகத்தினுள் உள்ள லூர்து அன்னை கெபியும் ஆலயத்திற்கு எழில் சேர்ப்பதுடன், பல்வேறு பகுதி மக்களும் வந்து ஜெபித்து தங்கள் வேண்டல்களை இறைவனிடம் எடுத்துக் கூறி அருள் வரங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.

அருகிலுள்ள ஊராகிய D. G புதூரில் அமைந்துள்ள குழந்தை இயேசு சிற்றாலயமும், வயல்களுக்கு மத்தியில் அமைந்துள்ள புனித வனத்து சின்னப்பர் ஆலயமும் இப்பங்கு மக்களின் விசுவாச வாழ்விற்கு சான்றுகளாகும். 379 ஆண்டுகளாக விசுவாசத்தில் வேரூன்றிய இவ்வாலயம், உதகை மறை மாவட்டத்தின் தாய்ப்பங்கு எனில் மிகையில்லை.

பங்கின் துறவற இல்லங்கள் :

காணிக்கை அன்னை சபை
S. D convent
மாண்ட்போர்ட் பிரதர்ஸ் செமினாரி (Montfort Brothers seminary).

கல்வி நிறுவனங்கள் :
புனித சவேரியார் துவக்கப்பள்ளி
புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி
புனித சவேரியார் நர்சரி& பிரைமரி பள்ளி
மாண்ட்போர்ட் பள்ளி.

இதர நிறுவனங்கள் :

புனித சவேரியார் குழந்தைகள் இல்லம்.
குழந்தை இயேசு மருந்தகம்.

தகவல்கள் : ஆலய வரலாற்று மலரிலிருந்து எடுக்கப்பட்டது.