40 தூய ஆரோபண அன்னை ஆலயம், மாத்திரவிளை


தூய ஆரோபண அன்னை ஆலயம்.

இடம் : மாத்திரவிளை.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.
மறை வட்டம் : மாத்திரவிளை

நிலை : பங்குத்தளம்

கிளைப் பங்குகள் :

1. புனித அந்தோணியார் ஆலயம், திக்கணங்கோடு
2. புனித அருளானந்தர் ஆலயம், #அருளானந்தபுரம்.
3. புனித அந்தோணியார் ஆலயம், #மானான்விளை.

குடும்பங்கள் : 1500
அன்பியங்கள் : 30

ஞாயிறு திருப்பலி : காலை 07.30 மணிக்கு.

நாள்தோறும் திருப்பலி (செவ்வாய் தவிர்த்து) : காலை 06.30 மணி

சனிக்கிழமை திருப்பலி : காலை 07.00 மணி மற்றும் காலை 11.00 மணி

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்பணி. பென்சர் சேவியர்.

திருவிழா : ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி நிறைவு பெறுகின்ற வகையில் பத்து நாட்கள்.

மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்பணி. மரிய டேவிட் OCD
2. அருட்பணி. ஜான் டி பிரிட்டோ MSFS
3. அருட்பணி. மரிய இராஜேந்திரன்
4. அருட்பணி. மனோகியம் சேவியர்.

மற்றும் 36 அருட்சகோதரிகள்.

location map : Our Lady Of Assumption Church Mathiravilai, Thikkanamcode, Tamil Nadu 629804
https://g.co/kgs/pdHibJ

வரலாறு :

படைப்புத்தலைவனாம் இறைவனின் மகிமையைப் பறைசாற்றும் குறிஞ்சியும், முல்லையும், மருதமும், நெய்தலும் மகுடம் தரித்து மகிழும் ஏற்றமிகு நிலமாகி காண்பவர் கண்களை கவர்ந்து வளம் பலப் பெற்றுத் திகழ்வது குமரிமாவட்டம். எழுத்துக்கள் தோன்றி எண்ணங்கள் ஏற்றம் பெற்று இறைவனை போற்றும் மதங்கள் வளர்ந்த மலர்ப்பூங்காவும் இதுவே.

அண்டிவந்தோரை அரவணைக்கும் அன்னையாக அருள் நிறைந்தவளே, ஆரோபண அன்னையே. இறைவனின் தாயே என்று மதவேறுபாடின்றி திருயாத்திரையாக வருகைதந்து, அன்னை வழியில் இறைவனை வழிபடும் புனித ஆரோபண அன்னை ஆலயம் குழித்துறை மறைமாவட்டத்தில் மாத்திரவிளை மறைவட்டத்திற்கு உட்பட்ட, மாத்திரவிளையில் அமைந்துள்ள பழம்பெருமை வாய்ந்த ஆலயமாகும்.

பாரம்பரியம் :

அன்று பட்டன்காடு என அழைக்கப்பட்ட மாத்திரைவிளையில், பட்டன்நாடார் என்பவர் பனை ஓலை வேய்ந்த நாலுகட்டு வீட்டில் தனது நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். அவரது வீட்டு முன்பகுதியில் கோயில் அமைத்து வழிபட்டு வந்தார். அவரது மக்களில் ஒருவர் வடக்கன்குளத்தில் தோன்றி நமது மறைமாவட்டத்தில் பல உள்நாட்டுப் பகுதிகளில் மீட்பர் கிறிஸ்துவின் விதையை துாவிய புண்ணியவதி அருளாயி வழியாக வடக்கன்குளம் சென்று திருமுழுக்குப் பெற்று சத்தியகுட்டி எனப்பெயர் மாற்றம் பெற்றார். சிறிது காலத்தில் புண்ணியவதி அருளாயி முயற்சியால் சத்தியகுட்டியின் குடும்பத்தினர் கிறிஸ்தவராயினர். தங்கள் வீட்டு முன்பகுதியிலிருந்து கோயிலை அகற்றிவிட்டு அங்கு இரட்டை ச் சிலுவையை தோமையார் காலச் சிலுவை நட்டு வைத்து ஜெபவழிபாடு நடத்தி வந்தனர்.

வழிபாட்டின் முதல் ஆலயம்

நாளுக்கு நாள் ஆலயத்தை சுற்றிலும் குடியேற்றம் அதிகரித்து, அருளாயியின் முயற்சியால் பலரும் கிறிஸ்தவர்களாயினர். அனைவரும் கூடி வழிபட கி. பி 1435ல் குருசடி அமைக்கப்பட்டது. பின்னர் 1485-ல் பனை ஓலை வேய்ந்த சிறு ஆலயமாக உருவெடுத்தது.

வடக்கன்குளம் ஆலயத்தின் பரலோக மாதாவின் அருளால் ஆலயம் அமைந்தமையால், பாதுகாவலியாக பரலோக மாதாவையே கொண்டனர்.

இவ்வாறு பட்டன்காடு 'மாதா யாத்திரை செய்யும் விளை' என ஆனது. பின்னர் இப்பெயர் மருவி மாத்திரவிளை எனத் திகழ்கிறது.

ஆலயத்தைச் சுற்றிலும் இரவில் விளக்கு வைப்பதற்காகக் கல்லில் செதுக்கப்பட்ட தீப விளக்குக் துாண்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த விளக்குத் துாண்கள் சமீபகாலமாக வரை தற்போதைய ஆலய வளாக வீதியில் இருந்து வந்தன.

கி,பி 1555 ல் தென்னை ஓலையால் கூரை வேயப்பட்ட கற்சுவர் ஆலயமாக புதுப்பிக்கப்பட்டது இக்காலகட்டத்தில் உழைக்கும் மக்கள் உயர்சாதியினரால் கொடுமைபடுத்தப்பட்டனர். உரிமைகள் மநறுக்கப்பட்டன. அந்த நேரத்தில் இவ்வட்டார மக்கள் ஒன்றுபட்டுப் போராடினர். துணிந்து நின்று மேல்சாதிகாரரின் ஆதிக்கத்தை எதிர்த்தனர். இந்த விடுதலை போரட்டத்திற்கு கிறிஸ்தவர்களே காரணம் எனப் பொய்க்குற்றம் சாட்டினதோடு சமுக விரோதிகளால் மாதா ஆலயம் தீக்கிரையாக்கப்பட்டது.

கி.பி 1615 ல் ஓட்டு கட்டடிம் ஆலயம் ஆனது. இதுவும் கி.பி 1752 ல் தீக்கிரையாக்கப் பட்டது.

எனவே மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு ஒத்துழைப்புடன் கி.பி 1825 ஆம் ஆண்டில் கோபுரத்துடன் கூடிய ஆலயம் கட்டப்பட்டது.

மண்ணின் மறை சாட்சிகள் :

கி.பி. 1736 ஆம் ஆண்டு இப்பகுதியைச் சேர்ந்த மரிய அருளப்பன், முத்தப்பன், ஞானி (ஞானப்பிரகாசம்), மரியான் (மரிய செபஸ்தியான்), சாமியப்பன், சாயன் என்ற ஆறு இளைஞர்களும் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவர்கள் ஆயினர். இவர்கள் மன்னர் மார்த்தாண்ட வர்மா ஆணைப்படி பத்மநாபபுரம் கோட்டையில் தூக்கில் இடப் பட்டனர்.

தற்போதைய ஆலயம் :

தொடக்க காலத்தில் இப்பங்கு முளகுமூடு ஆலயத்தின் கிளைப் பங்காக இருந்தது. கி.பி 1908 ல் தனிப் பங்காக உயர்ந்தது. முதல் பங்குத்தந்தை அருட்பணி. வின்சென்ட் பெர்னாண்டஸ் ஆவார்.

தற்போதைய ஆலயம் 06.01.1972 ல் தொடங்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 30.12.1984 அன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு ஆரோக்கியசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

திருவிழாவிற்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள்.

புனித சிறுமலர் தெரசாள் குருசடி
மாதா குருசடி (தாறாவிளை)
புனித அருளப்பர் குருசடி (கோணத்துவிளை)
அன்னை வேளாங்கண்ணி குருசடி (கல்லுப்பொத்தை) - ஆகிய குருசடிகள் உள்ளன.

நிறுவனங்கள் :
புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளி
புனித சூசையப்பர் ஆங்கிலப்பள்ளி
ஆரோபண அன்னை நிதி நிறுவனம்
FSJ அருட்சகோதரிகள் இல்லம்.
ஆகியன சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

பங்கின் பங்குத்தந்தையர்கள் :
1. அருட்பணி. வின்சென்ட் பெர்னாண்டஸ்
2. அருட்பணி. மெல்க்யூர்
3. அருட்பணி. பெர்நான்டின்
4. அருட்பணி. செபஸ்தியான் அராக்கல்
5. அருட்பணி. தோமினிக்கன் நிக்கோலஸ்
6. அருட்பணி. எஸ். டி. மத்தியாஸ்
7. அருட்பணி. எம். லூக்காஸ்
8. அருட்பணி. இ. பிரான்சிஸ்
9. அருட்பணி. என். ஜே. ஜார்ஜ்
10. அருட்பணி. பிரான்சிஸ்
11. அருட்பணி. எரோணிமூஸ்
12. அருட்பணி. ஆர். அந்தோணிமுத்து
13. அருட்பணி. ஸ்தனிஸ்லாஸ் மரியா
14. அருட்பணி. எம். மரியா கிரகோரி
15. அருட்பணி. பெனடிக்ட் ஜே. அலெக்சாண்டர்
16. அருட்பணி. யூஜின் குழந்தை
17. அருட்பணி. அ. ஜோசப்ராஜ்
18. அருட்பணி. எம். பீட்டர்
19. அருட்பணி. எ. ஜோக்கிம்
20. அருட்பணி. ஜே. அகஸ்டின்
21. அருட்பணி. எஸ். அருளப்பன்
22. அருட்பணி. G. பெஞ்சமின்
23. அருட்பணி. ஆண்ட்ரூ
24. அருட்பணி. ஒய்ஸ்லின் சேவியர்
25. அருட்பணி. ஜார்ஜ் யூஜின் ராஜ்
26. அருட்பணி. டோமினிக் சாவியோ
27. அருட்பணி. பென்சர் சேவியர்.

தற்போது அருட்தந்தை #பென்சர் #சேவியர் அவர்களின் வழிகாட்டுதலில் சிறப்பாக வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.