795 புனித மகதலா மரியா ஆலயம், அணையேரி

    

புனித மகதலா மரியா ஆலயம்

இடம்: அணையேரி, அணையேரி அஞ்சல்

மாவட்டம்: விழுப்புரம்

மறைமாவட்டம்: புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: செஞ்சி 

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித பேதுரு பவுல் ஆலயம், வரிக்கல்

2. புனித ஜெபமாலை மாதா ஆலயம், மேல்அருங்குணம்

3. புனித ஆரோக்கிய மாதா ஆலயம், கீழ்மலை

4. புனித வளனார் ஆலயம், வெள்ளையாம்பட்டு

5. காரை

6. அத்தியூர்

பங்குத்தந்தை: அருட்பணி. யூஜின் அருண் குமார்

குடும்பங்கள்: 700 (கிளைப்பங்குகள் சேர்த்து)

அன்பியங்கள்: 3 (பங்கில் மட்டும்)

1. புனித அந்தோணியார் அன்பியம்

2. புனித மதலேன் மரியாள் அன்பியம்

3. குழந்தை இயேசு அன்பியம்

ஞாயிறு திருப்பலி காலை 07:30 மணி

நாள்தோறும் திருப்பலி காலை 06:00 மணி

மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை மாலை 06:00 மணி திருப்பலி (புனித அந்தோணியார் கெபியில்)

மாதத்தின் முதல் வியாழக்கிழமை மாலை 06:00 மணி திருப்பலி (குழந்தை இயேசு கெபியில்)

மாதத்தின் முதல் சனிக்கிழமை காலை 06:00 மணி திருப்பலி (தூய லூர்து மாதா கெபியில்)

திருவிழா: ஜூலை மாதம் 22-ம் தேதி

மண்ணின் இறையழைத்தல்கள்:

அருட்பணியாளர்கள்:

1. Fr. அருளப்பன்

2. Fr. பிரான்சிஸ் சேவியர்

3. Fr. ராபர்ட்

4. Fr. தர்மராஜ்

5. Fr. நசியான் கிரகோரி

6. Fr. கனிசியஸ் அருள்ராஜ்

7. Fr. அலெக்சாண்டர்

8. Fr. பெலிக்ஸ்

9. Fr. ஞானசீல வில்சன்

10. Fr. பால் தாஸ்

11. Fr. ஜெயமரிய வியான்னி

12. Fr. ஜெர்லின்

13. Fr. தீபார்

15. Fr. ஜான் பிரிட்டோ

16. Fr. கிளிட்டஸ் ரெக்ஸ்

17. Fr. ஆல்வின் துரைராஜ்

18. Fr. சின்னப்பா ராஜ்

19. Fr. மைக்கேல் ராஜ்

20. Fr. ஆரோன்

21. Fr. ஆன்றனி பாலன்

அருட்சகோதரிகள்:

1. Sr. A. திதீமூஸ் மரி, FSJ

2. Sr. A. மரிய செலின் (late), FSAG

3. Sr. K. தமாசுஸ் மேரிலுமினா, FSJ

4. Sr. A. சிறிய புஷ்பம், FSAG

5. Sr. M. ஜாக்குலின் மேரி, FSAG

6. Sr. D. சலேசியா, VCC

7. Sr. M. மரிய செல்வி, VCC

8. Sr. P. ஜெசிந்தா, VCC

9. Sr. L. லில்லி இன்பவாணி, SJC

10. Sr. L. லில்லி தேவமாலனி, SJC

11. Sr. C. அமலோற்பவமேரி, GSC

12. Sr. B. சகாய பொற்கொடி, SSHJ

13. Sr. A. ரேச்சல் லீலா, GSC

14. Sr. S. மார்கிரேட் மேரி, SJC

15. Sr. B. பொக்கிஷம்,GSC

16. Sr. S. லில்லி புஷ்பா, FSAG

17. Sr. நித்யா

வரலாறு:

அணையேரி மிகப் பழமையான பாரம்பரியமிக்க கிறிஸ்துவ மக்களைக் கொண்ட கிராமம். 1700 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இரண்டு கிறிஸ்துவ குடும்பங்கள் இங்கு வந்ததாகவும், பின்னர் 1848 ஆம் ஆண்டு மேலும் இரண்டு பிறசமய குடும்பங்கள் கிறிஸ்தவம் தழுவியதாகவும் வரலாறு கூறுகிறது.

1848 ஆம் ஆண்டு அருட்பணி. மேத்யூ அவர்கள் அணையேரியில் சிறிய ஆலயம் ஒன்றை கட்டினார். இந்த சிறிய ஆலயம் (தற்போதுள்ள புனித அந்தோனியார் கெபி) மக்கள் இணைந்து வழிபாடுகளில் பங்கேற்க போதுமானதாக இருக்கவில்லை. ஆகவே 1887 ஆம் ஆண்டு புதிய ஆலயம் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, 1891 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அப்போது 124 கிறிஸ்துவர்கள் அணையேரியில் வாழ்ந்து வந்தனர். அணையேரி ஆலயமானது நங்காத்தூர் பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்தது.

கிறிஸ்துவ மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே 1978 ஆம் ஆண்டு அருட்பணி. K. இருதயம் அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு பின்னர் 1990 ஆம் ஆண்டு வெளிநாட்டு உதவியுடன் அருட்பணி. பொன் அருள்தாஸ் அவர்களின் முயற்சியால், அருட்பணி. K. அகஸ்டின் அவர்கள் ஆலய கட்டுமானப் பணிகளைத் தொடங்கி 1996 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்பட்டது.

1992 ஆம் ஆண்டு ஆலயத்தின் மேற்கூரை போடப்பட்டது. 

1994 ஆம் ஆண்டு ஆலயத்தின் ஜன்னல் கதவுகள் பொருத்தப்பட்டு, ஆலயப் பணிகள் முழுமையடைந்தது. 

23.05.1996 அன்று புதுவை கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் மைக்கேல் அகஸ்டின் அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு, நங்காத்தூர் பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்த அணையேரி, இதுமுதல் தனிப்பங்காக செயல்படும் என்பதை பேராயர் அறிவித்தார்.

புதிய அணையேரி பங்கின் தற்காலிக பங்குத்தந்தையாக அருட்பணி. K. அகஸ்டின் அவர்கள் பொறுப்பேற்றார். பின்னர் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. தேவதாஸ் அவர்கள் 14.07.1996 அன்று பொறுப்பேற்று வழிநடத்தினார்.

முக்கிய நிகழ்வுகள்:

1918 ஆம் ஆண்டு ஆர்.சி ஆரம்பப் பள்ளி தொடங்கப்பட்டது.

1976 ஆம் ஆண்டு ஆரம்பப் பள்ளியானது, நடுநிலைப் பள்ளியாக உயர்ந்தது.

1997 ஆம் ஆண்டு புனித அந்தோனியார் கெபி புதுப்பிக்கப்பட்டது.

2002 ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது.

2002 ஆம் ஆண்டு புனித லூர்து மாதா கெபி கட்டப்பட்டது.

ஆலயம் அழகுற புதுப்பிக்கப்பட்டு 28.02.2022 அன்று அர்ச்சிக்கப்பட்டதுடன், அணையேரி தனிப்பங்கானதன் வெள்ளிவிழாவும் சிறப்புற கொண்டாடப் பட்டது.

பங்கில் உள்ள கெபிகள்:

1. குழந்தை இயேசு கெபி

2. புனித அந்தோனியார் கெபி

3. தூய லூர்து மாதா கெபி

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. A. தேவதாஸ் (14.07.1996-04.06.2003)

2. அருட்பணி. A.  ஆரோக்கியதாஸ் (05.06.2003-06.07.2006)

3. அருட்பணி. M. லூர்துசாமி (07.07.2006-07.06.2007)

4. அருட்பணி.‌ A. ஆரோக்கிய சகாய செல்வம் (08.07.2007-04.06.2009)

5. அருட்பணி. A. எட்வர்ட் பிரான்சிஸ் (05.06.2009-09.06.2016)

6. அருட்பணி. A. அற்புதராஜ் (10.06.2016-09.06.2017)

7. அருட்பணி.‌ P. யூஜின் அருண்குமார் (10.06.2017 முதல்....)

வழித்தடம்: செஞ்சி -ஒட்டம்பட்டு -வரிக்கல் -அணையேரி

Location map:

https://g.co/kgs/ckQqe8