483 தூய ஆவியார் ஆலயம், அக்ரஹாரம்


தூய ஆவியார் ஆலயம்

இடம் : அக்ரஹாரம்

மாவட்டம் : சேலம்
மறை மாவட்டம் : சேலம்
மறை வட்டம் : சேலம்

நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்குகள் :
1. புனித இஞ்ஞாசியார் ஆலயம், மின்னாம்பள்ளி
2. புனித மார்டினார் ஆலயம், காரிப்பட்டி

பங்த்குதந்தை : அருட்பணி. பிலவேந்திரம்

குடும்பங்கள் : 550
அன்பியங்கள் : 10

ஞாயிறு திருப்பலி : காலை 06:15 மணி மற்றும் காலை 08:15 மணிக்கு

வியாழன் : மாலை 06:00 மணிக்கு இடைவிடா சகாயமாதா நவநாள் திருப்பலி

வியாழன் மற்றும் ஞாயிறு தவிர மற்ற அனைத்து நாட்களிலும் திருப்பலி : காலை 06:00 மணிக்கு.

திருவிழா : மே மாதம் நான்காம் ஞாயிறு.

மண்ணின் இறையழைத்தல்கள்:
25 க்கும் மேற்பட்ட அருட்பணியாளர்களையும், 50 க்கும் மேற்பட்ட அருட்சகோதரிகளையும் இறையழைத்தலாகக் கொண்டது அக்ரஹாரம் இறைசமூகம்.

வழித்தடம் : சேலம்- ஆத்தூர் நெடுஞ்சாலையில் 17கி.மீ தொலைவில் காரிப்பட்டி வழியாக அக்ரஹாரம் உள்ளது.

சேலம் - அயோத்தியாபட்டிணம் - அக்ரஹாரம்.

location map : Lourdhu Mary Malai Kovil Church Karumapuram, Tamil Nadu 636106
https://maps.app.goo.gl/b9LeqYjSDrnGkjsC6

வரலாறு

கி.பி.18-ஆம் நூற்றாண்டைப் புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றாண்டாக வரலாறு கூறுகிறது. இந்த நூற்றாண்டில் தான் அக்ரஹாரம் என்ற புதிய ஊரும் உருவாக்கப்பட்டது. இதை உருவாக்கியவர் திரு. காளியப்ப உடையார். இவர் 1702ம் ஆண்டு 200 கல் தொலைவிலுள்ள வீராணம் என்ற கிராமத்திலிருந்து தன் குடும்பத்தினருடனும், பணியாளர்களுடனும் ஓர் அந்தணருடனும் வந்து குடியேறினார். தன்னுடன் கொண்டு வந்த தேவதைக்கு ஒரு கோவில் கட்டினார். அவரது அரிய முயற்சியால் காடாக இருந்த நிலம், பொன் விளையும் பூமியாக மாறியது. இதைக் கண்டு அவரது உறவினர்களும் மற்றும் சிலரும் இங்கு வந்து குடியேறினர். இக்குடியேற்ற பகுதி அக்ரஹாரம் என்ற பெயர் கொண்டது.

புதிய இடத்தில் புகழுடன் வாழ்ந்த காளியப்ப உடையாருக்குத் தன் புகழை நிலைநாட்ட ஒரு மகன் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது. அப்போதே இறை இயேசுவின் தாய் உத்தரிய மாதா (கார்மேல் மாதா) பெயரில் கோவில் ஒன்று காக்காவேரி என்னும் ஊரில் இருப்பதாகவும், அங்கு மாதா புதுமைகள் செய்து வருவதாகவும் கேள்விபட்டு, காளியப்பர் அங்கு சென்று அத்தாயிடம் மன்றாடி மகப்பேறு பெற்றார். இந்த உதவிக்கு நன்றியாக காக்காவேரி கோவிலைப் புதுப்பித்து கூரைக்கு ஓடு வேய்ந்தார். அத்துடன் நிற்காமல் தானும் தன் குடும்பத்தாரும் திருமறையில் சேர முடிவு செய்தார். பெரியநாயகி அன்னையின் பெயரான பெரியதம்பி என்று தனக்கு பெயர் இட்டுக்கொண்டு தன் குடும்பத்தாருடன் திருமறையில் சேர்ந்தார்.

திரு. காளியப்பன் அவர்கள் பெரியதம்பி உடையாராக மாறியதைக் கண்டு அவரது உறவினர்கள் அவரை வெறுத்து ஒதுக்கினர். ஆனாலும் இறையன்பில் அவர் வாழ்ந்த வாழ்வைக்கண்டு மேலும் சிலர் திருமறையில் சேர்ந்தனர். இங்கிருந்த பிறசமய உடையார்களை மனந்திரும்ப வைத்தது.1794 ல் பணியாற்றியது அருட்பணி. அப்பேதூபுவா அடிகள் ஆவார்.

இவ்விதம் நூறு ஆண்டுகள் கிறிஸ்தவர்களாக வாழ்ந்த இறைமக்களில் ஒரு பெண் 1820ம் ஆண்டில் பிறமத சகோதரர் ஒருவரை மணந்து அதன்மூலம் தன் கணவரது குடும்பத்தை திருமறையில் சேர்த்தப் பெருமையைப் பெற்றார். அவரது கணவர் வாழ்ந்த அத்திப்பாக்கத்திலிருந்து மேலும் மூன்று குடும்பங்கள் திருமறையில் சேர்ந்து அக்ரஹாரத்தில் குடியேறினர். இவ்விதம் அக்ரஹாரம் தலத்திருச்சபை வளர ஆரம்பித்தது.

இவ்வாறு வளர்ந்து வந்த திருமறையின் மக்களை பாரீஸ் வேதபோதக சபை குருக்கள் அடிக்கடி சந்தித்து இறையன்பினை ஊட்டி வளர்த்தனர். ஆனால் அவர்கள் ஒன்றுகூடி செபிக்க ஓர் ஆலயம் இல்லை என்ற குறைவந்தது. 1842ம் ஆண்டு அருட்திரு. பிரிக்கோ அவர்கள் கோவில்கட்ட நிலம் வாங்கி அடிக்கல் நாட்டினார். பல இடையூறுகள், இன்னல்களுக்கு பின், ஆரோக்கிய அன்னையை பாதுகாவலியாகக் கொண்டு கோவில் கட்டப்பட்டு 12.10.1845 அன்று மேதகு. போனான் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. இதற்கு பின் இவ்வூரில் நடைபெற்ற தீ விபத்தின் காரணமாக பிறமத சகோதரர்கள் ஊரின் வடக்குப் பகுதியில் சென்று குடியேறினார்கள்.

அவர்களுக்கு நற்செய்தி அறிவிக்க 1868 முதல் 1880ம் ஆண்டுவரை அருட்பணி. பிரிக்கோ அவர்கள் இப்பகுதியில் உள்ள கிறிஸ்தவர்களின் ஆன்மீகத் தேவையை கவனித்து வந்தார். அவருக்குப் பின் 1930 ஆம் ஆண்டுவரை வயதான குருக்கள் இப்பகுதியில் தங்கி மக்களுக்கு இறைப்பணி செய்து வந்தனர். இருந்தபோதிலும், இப்பகுதி செவ்வாய்ப்பேட்டை குருக்களின் கண்காணிப்பிலும், பிறகு சூரமங்கலம் பங்கின் கிளைப்பங்காகவும் இருந்து வந்தது. பெருகி வரும் மக்களின் தேவைக்கேற்ப 1939ம் ஆண்டு அருட்பணி. ஜோசப் பாரல் அவர்களால் தற்போதுள்ள ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டது.

31.08.1945 அன்று அக்ரஹாரம் தனிப்பங்காக பிரிக்கப்பட்டு அருட்பணி. மத்தேயு தெக்கடம் அடிகள் பங்கு குருவாக நியமிக்கப்பட்டார்.1948ம் ஆண்டு அவரால் ஆலயத்தின் மேற்கூரை வேயப்பட்டது.1949ம் ஆண்டு அருட்பணி. சக்கரியாஸ் அவர்கள் பங்குத்தந்தையாக இருந்தபோது, அப்போது மறைமாவட்ட முதன்மை குருவாயிருந்த அருட்பணி. தெக்கடம் அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது.

அருட்பணி.ஜோசப் லாசர் அவர்களின் பணிக்காலத்தில் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. அருட்பணி. துரைராஜ் அவர்களின் பணிக்காலத்தில் கிளைப்பங்கான மின்னாம்பள்ளியில் புனித இஞ்ஞாசியார் சிற்றாலயம் கட்டப்பட்டது. அருட்பணி.ஜான் ஆரோக்கியராஜ் அவர்களின் பணிக்காலத்தில் மணிக்கோபுரம், ஆலய முகப்பு மணி, ஆலயம் புதுப்பித்தல் பணி, புதிய மண்டபம் ஆகிய பணிகளுடன் ஆலயத்தின் பொன்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அருட்பணி. சார்லஸ் அவர்களின் பணிக்காலத்தில் பெல்ஜியம் மாணவர்களால் ஏழை மக்களுக்கு 10 வீடுகள் கட்டித்தரப்பட்டது. இதுவரை 46 அருட்பணியாளர்கள் இப்பங்கில் பணியாற்றி உள்ளனர். தற்போது, இப்பங்கில் 2160 கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது, அருட்பணி. அ. பிலவேந்திரம் அடிகளார் 46 -வது பங்குத்தந்தையாக 2017ம் ஆண்டு ஜூன் முதல் பணியாற்றி வருகின்றார். இவரின் பணிக்காலத்தில் அன்பியங்கள் மீண்டும் புதுப்பொலிவுடன் தொடங்கப்பட்டன. சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லூர்து அன்னை திருத்தல வைரவிழா வளைவு நிறுவப்பட்டது. கிளைப்பங்கான காரிப்பட்டியில் புனித மார்ட்டீனார் ஆலயம் புதியதாய் கட்டப்பட்டது.

மேலும் அருட்பணி. பிலவேந்திரம் அவர்களின் பணிக்காலத்தில் ஆலய வைரவிழா நினைவாக காரிப்பட்டியில் லூர்து அன்னை நினைவு வளைவு வைக்கப்பட்டது.

புனித லூர்து அன்னை திருத்தல வரலாறு:

சூரமங்கலத்தைத் தலைமைப் பங்காகக் கொண்டு செவ்வாய்ப்பேட்டை, அக்ரஹாரம் ஆகியவை இருந்தபோது 1868ம் ஆண்டில் அருட்பணி. பிரிக்கோ அடிகளார் மலைக்கோவில் உச்சியில் லூர்து அன்னைக்கு கோபுரக்கூண்டு வடிவில் செபக்கூடம் எழுப்பப்பட்டது.

லூர்து அன்னை திருக்காட்சியின் நூற்றாண்டு விழா நினைவாக 1958 இல் அருட்பெருந்தகை ஆயர் செல்வநாதர் அவர்கள் திட்டமிட்டபடி புதிய கெபி கட்டப்பட்டு, சேலம் மறைமாவட்ட திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. இப்பணியில் அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி. வர்க்கீஸ் அவர்களும் மறைமாவட்ட முதன்மை குரு அருட்பணி. சாந்தப்பா அவர்களும் முழு ஈடுபாடு காட்டினார்கள்.

அருட்பணி. G. மோவியேல் MEP பணிக்காலத்தில் 30.05.1968 ல் சிலுவைப்பாதை தலங்கள் அமைக்கப் பட்டன.

9.2.1983 ல் கெபியின் வெள்ளிவிழா அருட்பணி. S. ஆரோக்கியசாமி அவர்களின் முயற்சியால் கொண்டாடப்பட்டு, இப்பகுதிக்கு லூர்துநகர் எனப் பெயர் சூட்டப்பட்டது. அக்ரஹாரத்திலும், காரிப்பட்டியிலும் வெள்ளிவிழா வளைவுகள் அமைக்கப் பட்டது. மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டதுடன், சகாய மாதா நவநாள் துவக்கப்பட்டது.

அருட்பணி. R. சேவியர் (1990-1993) பணிக்காலத்தில் கெபியின் முன்பக்கம் விரிவு படுத்தப் பட்டது.

அருட்பணி. ஜெகராஜ் (1993-1995) பணிக்காலத்தில் கெபியில் திருப்பலி மேடை, மற்றும் உயிர்த்த ஆண்டவர் சுரூபம் நிறுவப்பட்டது.

அருட்பணி. சார்லஸ் (1995-2000) பணிக்காலத்தில் ஆழ்துளைக் கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கெபியை சுற்றி தார்சாலை வசதி ஆகியன செய்யப் பட்டது.

2002 ல் சனிக்கிழமை தோறும் தேர்பவனி அருட்பணி. பீட்டர் பிரான்சிஸ் அவர்களால் துவக்கப்பட்டது.

2018 ல் மேதகு ஆயர். சிங்கராயர் தலைமையில் வைரவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.

2019 ல் அருட்பணி. பிலவேந்திரம் பணிக்காலத்தில் அரசாங்க உதவியுடன் திருத்தலத்தை சுற்றி புதிய சாலை அமைக்கப் பட்டது. புதிதாக கட்டப்பட்ட செபமாலை தலங்களை 01.02.2020 அன்று தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு. லாரன்ஸ் பயஸ் அவர்கள் மந்திரிந்தார்.

தூய லூர்து அன்னை திருத்தல வழிபாட்டு நிகழ்வுகள் :

1. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் இரண்டாம் சனிக்கிழமை லூர்து அன்னை திருத்தல திருவிழா.

2. சனிக்கிழமை தோறும் காலை 06.30 மணிக்கு திருப்பலி.

3. மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு அன்னையின் தேர்பவனி, திருப்பலி தொடர்ந்து நோயாளிகளை மந்திரித்தல்.

4. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் (ஜூலை) புனித வனத்து சின்னப்பர் வேண்டுதல் அன்னதானம் வழங்குதல்.

5. மே மாதத்தில் நாள்தோறும் அன்னையின் இறைமக்கள் நடத்தும் வணக்கமாதா செபவழிபாடு.

6. தவக்காலத்தில் வெள்ளிதோறும் மாலை 05.30 மணிக்கு சிலுவைப்பாதை. என அனைத்து வழிபாட்டு நிகழ்வுகளும் சிறப்பாக நடந்து வருகின்றன.

அக்ரஹாரம் பங்கின் பங்குத்தந்தையர்கள்:
1. Rev Fr. Kesar (1864-1865)
2. Rev Fr. Bringent (1865-1866)
3. Rev Fr. Iyes (1866-1867)
4. Rev Fr. Brikkot (1868-1880)
5. Rev Fr. Boscot (1880-1882)
6. Rev Fr.H. Crosborne (1882-1883)
7. Rev Fr.J. M Cross (1883-1887)
8. Rev Fr. J. H Ithriyon (1887-1890)
9. Rev Fr. J. M Nicolas (1890-1892)
10. Rev Fr. A Pier (1892-1893)
11. Rev Fr. A Thuriyar (1893-1893)
12. Rev Fr. La Sattal (1893-1895)
13. Rev Fr. M Suhas (1895-1895)
14. Rev Fr. A Thomas (1895-1897)
15. Rev Fr. Raphale (1897-1897)
16. Rev Fr. Seegusaler (1897-1897)
17. Rev Fr. Pier (1897-1902)
18. Rev Fr. L Pungier (1902-1902)
19. Rev Fr. J.M Cross (1902-1903)
20. Rev Fr. Korananan (1903-1904)
21. Rev Fr. Rayappan (1904-1906)
22. Rev Fr. Kunaktons (1906-1906)
23. Rev Fr. A. Soraen (1907-1909)
24. Rev Fr. S.J Clement (1909-1922)
25. Rev Fr. F. Noel (1922-1924)
26. Rev Fr. G. Athiroopam (1924-1930)
27. Rev Fr. A. Vakoone (1930-1936)
28. Rev Fr. M. Thazhaseera (1936-1936)
29. Rev Fr. Joseph Barral (1936-1942)
30. Rev Fr. Gurusungal Koriyakose (1942-1944)
31. Rev Fr. M. Thekadam (1944-1949)
32. Rev Fr. B. A Zacharais (1949-1950)
33. Rev Fr. M. Vargese (1950-1961)
34. Rev Fr. G. Moviale (1961-1980)
35. Rev Fr. S. Arockiasamy (1980-1985)
36. Rev Fr. Henry George (1985-1988)
37. Rev Fr. H. Arockia Raj (1988-1990)
38. Rev Fr. R Xavier (1990-1993)
39. Rev Fr. M. Jegaraj (1993-1995)
40. Rev Fr .A Charles (1995-2000)
41. Rev Fr. A. Amal Raj (2000-2001)
42. Rev Fr. A. Peter Francis (2001-2004)
44. Rev Fr. DuraiRaj (2007-2012)
45. Rev Fr. John Arockiaraj (2012-2017)
46. Rev Fr. A. Belevendram (2017-Till today..)

அக்ரஹாரம் பங்கின் கல்வி நிறுவனங்கள்:
1. புனித கபிரியேல் பெண்கள் துவக்கப்பள்ளி
2. புனித மரியன்னை ஆண்கள் துவக்கப்பள்ளி
3. மாண்ட்போர்ட் நர்சரி & பிரைமரி பள்ளி
4. புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி.

இல்லங்கள் மற்றும் மருந்தகம் :
1. புனித மரியன்னையின் இருதய சபை கன்னியர் இல்லம்
2. மாண்ட்போர்ட் அருட்சகோதரர்கள் இல்லம்
3. புனித மரியன்னை மருந்தகம்.

பங்கின் சபைகள் :
1. புனித வின்சென்ட் தே பவுல் சபை
2. மரியாயின் சேனை
3. பங்குப்பேரவை
4. தூய ஆவியார் செபக்குழு
5. பாடகற்குழு
6. பீடச்சிறுவர்கள்
7. இளையோர் இயக்கம்.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. பிலவேந்திரம் அவர்கள்.

வரலாறு : பங்கு குடும்ப கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது.