இடம்: சின்னப்பநகர், ஆத்தூர் தாலுகா
மாவட்டம்: சேலம்
மறைமாவட்டம்: சேலம்
மறைவட்டம்: ஆத்தூர்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித ஜெயராக்கினி மாதா ஆலயம், ஆத்தூர்
பங்குத்தந்தை: அருள்பணி. I. கிரகோரி ராஜன்
குடும்பங்கள்: 80
அன்பியம்: 1
புதன்கிழமை மாலை 06.00 மணிக்கு ஜெபமாலை, 06.15 மணிக்கு திருப்பலி
சின்னப்பநகர் மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்சகோதரி. பனி மேரி, Cluny
2. அருட்சகோதரி. ரோஸ்லின் மேரி, DMI
வழித்தடம்: ஆத்தூர் -பைத்தூர் வழித்தடத்தில் 3கி.மீ தொலைவில் சின்னப்பநகர் அமைந்துள்ளது
Location map: st Mary's RC Church
Attur, Tamil Nadu 636102
https://maps.app.goo.gl/R2rNNLTuY1SEBG3L7
வரலாறு:
ஆத்தூர் பங்கின் ஒருபகுதியாக விளங்கிய சின்னப்பநகரில் 1998 ஆம் ஆண்டு அருள்பணி. மரிய சூசை அவர்களால் புனித வனத்து சின்னப்பர் சிற்றாலயம் கட்டப்பட்டது.
அருள்பணி. இருதய செல்வம் (2003-2008) பணிக்காலத்தில் மலைமீது புனித சின்னப்பர் குருசடி கட்டப்பட்டது.
அருள்பணி. சாலமோன் ராஜ் பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்டப்பட்டு, 02.05.2012 அன்று ஆயர் மேதகு செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
தற்போதைய பங்குத்தந்தை அருள்பணி. I. கிரகோரி ராஜன் அவர்களின் ஆன்மீக வழிகாட்டுதலில் வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது சின்னப்பநகர் இறைசமூகம்.
தகவல்கள் : பங்குத்தந்தை அருள்பணி. I. கிரகோரி ராஜன் அவர்கள்
புகைப்படங்கள்: ஆலய இளையோர் மற்றும் பங்கு ஆலய உறுப்பினர்