99 புனித எஸ்தாக்கியார் ஆலயம், பாக்கியபுரம்

IMAGE NOT AVAILABLE
புனித எஸ்தாக்கியார் ஆலயம்

இடம் : பாக்கியபுரம்.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்.
பங்குத்தந்தை : அருட்பணி மரிய வின்சென்ட்.

நிலை : பங்குதளம்
கிளைகள் :
1.புனித விண்ணக அன்னை ஆலயம், அன்னைநகர்.
2.புனித யோசேப்பு ஆலயம், குழிச்சல்.

குடும்பங்கள் : 600
அன்பியங்கள் : 17

ஞாயிறு திருப்பலி : காலை 07.30 மணிக்கு.

திருவிழா : செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் பத்து நாட்கள்.

பாக்கியபுரம் வரலாறு :

19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய குருக்கள் முதன் முதலாக பாக்கியபுரம் பகுதியில் நற்செய்தி அறிவிப்புப் பணியை ஆரம்பித்தனர்.

1887 ஆம் ஆண்டில் அயல் நாட்டைச் சேர்ந்த அருட்பணி. எலியாஸ் அவர்கள் தற்போதைய ஆலயம் அமைந்துள்ள இடத்தை விலைக்கு வாங்கி தூய எஸ்தாக்கியாரைப் பாதுகாவலராகக் கொண்டு ஆலயம் ஒன்றை எழுப்பினார்.

தொடக்க காலத்தில் பாக்கியபுரமானது, களியக்காவிளை பங்கின் கிளைப் பங்காகவும், பின்னர் திரித்துவபுரம் பங்கின் கிளைப் பங்காகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தது.

அருட்பணி. தனிஸ்லாஸ் மரியா காலத்தில் 1936 ஆம் ஆண்டில் தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. பீட்டர் கிறிஸ்டியன் அவர்கள் பணியாற்றினார்.

பங்கின் நூற்றாண்டு விழா நினைவாக புதிய ஆலயம் கட்டப்பட்டு 25.09.1988 அன்று மறைமாவட்ட பரிபாலகர் அருட்பணி. சூசை மரியான் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

அருட்பணி. C. ஸ்டீபன் பணிக்காலத்தில் இதயம் திருமண மண்டபம் கட்டப்பட்டு, 20.12.2002 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் திறக்கப்பட்டது.

இயேசுவின் திரு இருதய அதிகார சபை என்கிற அருட்சகோதரிகள் சபை புதிதாக 2018 ஆம் ஆண்டில் துவக்கப் பட்டுள்ளது.