இடம் : சீவலாதி, இளையான்குடி தாலுகா
மாவட்டம் : இராமநாதபுரம்
மறைமாவட்டம் : சிவகங்கை
மறைவட்டம் : பரமக்குடி
நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய சகாய அன்னை ஆலயம், சாலைக்கிராமம்
பங்குத்தந்தை : அருள்திரு. M. ரமேஷ்
குடும்பங்கள் : 16
திருப்பலி : மாதத்தில் ஒருநாள்.
திருவிழா : அக்டோபர் மாதத்தில்.
வரலாறு :
கி.பி 1900 -ம் ஆண்டு காலகட்டத்தில் 5 கிறிஸ்தவ குடும்பங்களும் 3 பிற சமய குடும்பங்களும் இந்தப் பகுதியில், சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்ததால் இவ்வூர் 'சீவலாதி' என பெயர் பெற்றது.
ஆரம்ப காலத்தில் மக்கள் மரச்சிலுவை வைத்து ஜெபித்து வந்தனர். பின்னர் 1974 ம் ஆண்டு ஆலயம் கட்டப்பட்டது. அதன்பின் 2016 -ம் ஆண்டு ஆலயம் புதுப்பிக்கப் பட்டது.
தினமும் காலை மாலை வேளைகளில் ஜெபம் நடைபெறும். கிறிஸ்துமஸ் திருப்பலி, இறப்பு திருப்பலி, கல்லறை மந்திரிப்பு திருப்பலி, மாதத்தில் ஒருநாள் திருப்பலி, பாதுகாவலி திருவிழா திருப்பலி ஆகியவை சிறப்பாக நடைபெறுகிறது.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. மா. ரமேஷ்