799 புனித அன்னை தெரசா ஆலயம், மீனம்பட்டி

        

புனித அன்னை தெரசா ஆலயம் 

இடம்: மீனம்பட்டி, சிவகாசி 

மாவட்டம்: விருதுநகர் 

மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: விருதுநகர் 

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்கு: புனித விண்ணரசி அன்னை ஆலயம், வெற்றிலையூரணி 

பங்குத்தந்தை: அருட்பணி. பால்ராஜ் 

குடும்பங்கள்: 300

அன்பியங்கள்: 13

1. புனித அன்னை தெரசா அன்பியம்

2. புனித லூர்து மாதா அன்பியம்

3. புனித சவேரியார் அன்பியம்

4. புனித சூசையப்பர் அன்பியம்

5. புனித செபஸ்தியார் அன்பியம் 

6. புனித பரலோக மாதா அன்பியம் 

7. புனித அந்தோணியார் அன்பியம் 

8. புனித குழந்தை தெரசா அன்பியம் 

9. புனித வேளாங்கண்ணி மாதா அன்பியம் 

10. புனித தோமையார் அன்பியம் 

11. புனித விண்ணரசி மாதா அன்பியம்

12. புனித அருளானந்தர் அன்பியம்

13. புனித உபகார அன்னை அன்பியம் 

வழிபாட்டு நேரங்கள்:  

ஞாயிறு திருப்பலி காலை 07:30 மணி

வாரநாட்களில் திருப்பலி இரவு 07:30 மணி

செவ்வாய்க்கிழமை புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் இரவு 07:30 மணிக்கு திருப்பலி

புதன்கிழமை தூய உபகார அன்னை ஆலயத்தில் ஆலயத்தில் இரவு 07:30 மணிக்கு திருப்பலி

வியாழக்கிழமை தூய மிக்கேல் அதிதூதர்  சிற்றாலயத்தில் இரவு 07:30 மணிக்கு திருப்பலி 

ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை நற்கருணை ஆசீர், திருப்பலி

முதல் சனிக்கிழமை தூய லூர்து அன்னை கெபியல் திருப்பலி.

திருவிழா: ஆகஸ்ட் 26 (அன்னையின் மண்ணக பிறப்பு ) முதல் செப்டம்பர் 5 (அன்னையின் விண்ணக பிறப்பு)

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்திரு. தனிஸ்லாஸ், SJ

 2. அருட்திரு. அருள்தாஸ், SJ

 3. அருட்திரு. செல்வக்கனி 

Church Facebook page: https://www.facebook.com/AnnaiTherasachurch/

வரலாறு:

மீனம்பட்டி கிராமமானது  கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் அதிகம் வாழும் ஒரு பகுதியாகும். இங்கு புனிதர்களின் பெயரில் ஆங்காங்கே குருசடிகள் கட்டப்பட்டு மக்கள் ஜெபித்து வந்தனர். 

1948 ஆம் ஆண்டு இங்கு கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களால் ஊரின் நுழைவு வாயிலில், புனித அந்தோணியாருக்கு குருசடி அமைத்து கிறிஸ்தவம் வளர்க்கப்பட்டது. 

மீனம்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பெருவிழாவை, ஊர்த் திருவிழாவாக தொடக்கம் முதல் இன்றுவரை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

ஆரம்பத்தில் சிவகாசி பங்கோடு இணைந்து இருந்த மீனம்பட்டி கிராமம், மதுரை உயர் மறைமாவட்ட மேதகு ஆயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்களால் 05.09.2005 அன்று தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக  அருட்பணி. சேவியர் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். 

பல இன்னல்கள் சிரமங்களைக் கடந்து மக்களின் ஒத்துழைப்புடன், புனித அன்னை தெரசாவுக்கு ஆலயம் கட்டப்பட்டு, 03.05.2009 அன்று மேதகு ஆயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. இவ்வாலயம் புனித அன்னை தெரசாவுக்கு எழுப்பப்பட்ட இந்தியாவின் இரண்டாவது ஆலயமும், தமிழ்நாட்டின் முதல் ஆலயமும் ஆகும். இவ்வாலயம் எழுப்ப அருட்தந்தை சேவியர் அவர்கள் பெரும் முயற்சிகள் மேற்கொண்டதுடன், பல்வேறு ஊர்கள், நாடுகள் என பல இடங்களுக்கும் பயணம் செய்து நன்கொடை பெற்று வந்தார். பங்குத்தந்தை இல்லமும் கட்டப்பட்டது. 

அருட்திரு. அருள்ராயன்  அவர்கள் பணிக்காலத்தில் ஊரின் குருசடிகளான புனித அந்தோணியார் குருசடி, புனித செபஸ்தியார் குருசடி, தெற்கு மீனம்பட்டியில் அமைந்துள்ள புனித உபகார அன்னை குருசடி மற்றும் புனித தோமையார் குருசடி என அனைத்தையும் சீர்படுத்தி, சிற்றாலயமாக புதுப்பித்தார். பின் ஆலயத்தில் தூய லூர்து அன்னைக்கு ஓர் அழகிய கெபி எழுப்பப்பட்டதுடன், ஆலயத்தைச் சுற்றி முள்வேலி மற்றும் மதில் சுவர் எழுப்பப்பட்டு பாதுகாக்கப்பட்டது. 

அருட்திரு. சந்தன சகாயம் பணிக்காலத்தில்  ஆலயத்தை சுற்றிலும் பல மரங்கள் நட்டு வைத்தார். 

அருட்பணி. பிரான்சிஸ் சேவியர் பணிக்காலத்தில் முதல் பணியாக, மீனம்பட்டி ஆர்சி தொடக்கப்பள்ளி புதுப்பிக்கப்பட்டு, 2 மாடிகளுடன் கூடிய தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஒரு பள்ளி எழுப்பப்பட்டது. பின்பு மீனம்பட்டியில் ஓர் இடம் வாங்கப்பட்டு தூய மிக்கேல் அதிதூதர்க்கு  ஒரு சிற்றாலயம் எழுப்பப்பட்டது. புனித தோமையார் சிற்றாலயம் அழகிய முறையில் புதுப்பிக்கப் பட்டது. தெற்கு மீனம்பட்டியில் அமைந்துள்ள புனித உபகார அன்னை சிற்றாலயத்தில் நற்கருணை பேழை எழுப்பப்பட்டு பீடமும் புதுப்பிக்கப்பட்டது.  மீனம்பட்டியின் கிளைப் பங்கான வெற்றிலையூரணியில் அமைந்துள்ள புனித விண்ணரசி ஆலயம் ஆனது 100 ஆண்டுகளை கடந்து மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த நிலையில், அங்கு ஓர் அழகிய ஆலயமும் ஆர்சி தொடக்கப்பள்ளியும் கட்டப்பட்டது. பின்பு ஆலயத்தில் சிலுவை வடிவத்துடன் கூடிய ஐம்பொன்னாலான கொடிமரம் கட்டப்பட்டது. 

தற்போது அருட்பணி. பால்ராஜ் அவர்கள் பொறுப்பேற்று ஒலிஒளி அமைப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கப்பட்டது. புனித அன்னை தெரசா ஆலயத்தின்  பீடம் புதுப்பிக்கும் பணி, ஆலயத்தை சீரமைக்கும் பணி மற்றும் ஆலய சுற்று வளாகத்தில் மதில் சுவர் எழுப்பும் பணி, ஆலய வளாகத்தில் கல் பதித்தல் என பல திட்டங்களை பங்குத்தந்தை செயல்படுத்த காத்திருக்கிறார். இப்பணிகள் நிறைவேற தங்களது ஜெபங்களை உரித்தாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 26 கொடியேற்றம் தொடங்கி, செப்டம்பர் 5 வரை திருவிழா கொண்டாடப்படும். இதன் சிறப்பு என்னவென்றால் அன்னை தெரசாவின் பிறந்த நாளன்று கொடியேற்றப்பட்டு, அன்னை இந்த மண்ணை விட்டு இறைவனிடம் சென்ற நாளில் திருவிழா நிறைவுபெறும்.

பங்கின் சபைகள்/ இயக்கங்கள்: 

1. புனித வின்சென்ட் தே பவுல் சபை 

2. மரியாயின் சேனை

3. புனித அன்னை தெரசா சமூக சேவை இயக்கம்

4. இயேசுவின் கண்மணி பூக்கள்

5. சிறுவழி இயக்கம்

6. மறைக்கல்வி 

பங்கில் உள்ள கெபி/ சிற்றாலயம்:

1. தூய லூர்து அன்னை கெபி

2. புனித அந்தோணியார் சிற்றாலயம்

3. புனித செபஸ்தியார் சிற்றாலயம்

4. தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம்

5. புனித உபகார அன்னை ஆலயம்

6. புனித தோமையார் சிற்றாலயம்

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர் பட்டியல்:

1. அருட்பணி. சேவியர் (2005-2010)

2. அருட்பணி. அருள் ராயன் (2010-2015)

3. அருட்பணி. சந்தானம் சகாயம் (2015 - 2017)

4. அருட்பணி. பிரான்சிஸ் சேவியர் (2017-2022)

5. அருட்பணி. பால்ராஜ் (2022 முதல்....)

வழித்தடம்: சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் மீனம்பட்டி அமைந்துள்ளது.

Location map: https://g.co/kgs/QkSVtC

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்கின் இளையோர்