469 தொன் போஸ்கோ திருத்தலம், அயனாவரம்

    

தொன் போஸ்கோ திருத்தலம்

இடம் : அயனாவரம்

மாவட்டம் : சென்னை
மறைமாவட்டம் : சென்னை -மயிலை உயர்மறைமாவட்டம்
மறைவட்டம் : அம்பத்தூர்

நிலை : திருத்தலம்
கிளைப்பங்கு : அன்னை வேளாங்கண்ணி ஆலயம், திருவள்ளுவர் நகர்.

அதிபர் மற்றும் பங்குதந்தை : அருட்பணி. ம. மரிய லூயிஸ் ச. ச

உதவிப் பங்குதந்தையர்கள் :
அருட்பணி. ஸ்தனிஸ்லாஸ் சுவாமிநாதன் ச. ச
அருட்பணி. ஆன்டோ ஜான் ச. ச
அருட்பணி. மரிய அஷோக் குமார் ச. ச

குடும்பங்கள் : 1200
அன்பியங்கள் : 53 (தமிழ்-35, ஆங்கிலம் -8, கிளைப்பங்கு -10)

வழிபாட்டு நேரங்கள் :
ஞாயிறு திருப்பலிகள் :
காலை 06.00 மணி - தமிழ்
காலை 07.30 மணி -ஆங்கிலம்
காலை 07.30 மணி - தமிழ் (கிளைப்பங்கு)
காலை 09.00 மணி - மறைக்கல்வி
காலை 09.00 மணி - தமிழ்
மாலை 06.00 மணி - தமிழ்

வாரநாட்களில் திருப்பலி (தமிழ்) : காலை 06.15 மணி மற்றும் மாலை 06.30 மணி

புதன் திருப்பலி (ஆங்கிலம்) : மாலை 06.30 மணி

சனி திருப்பலி (ஆங்கிலம்) :மாலை 04.15 மணி

செவ்வாய் மாலை 06.30 மணி (கிளைப்பங்கு)

சிறப்பு திருவழிபாட்டு நிகழ்வுகள் :

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06.30 மணிக்குத் திருப்பலி, 07.00 மணி முதல் 08.00 மணி வரை நற்கருணை ஆராதனை

மாதத்தின் 15 ஆம் நாள் முதல் 23 ஆம் நாள் வரை அனைத்து மக்களின் சகாய அன்னைக்கு நவநாள்

மாதத்தின் 24 ஆம் நாள் : அனைத்து மக்களின் சகாய அன்னை நினைவு நாள் மாலை 06.30 மணிக்குத் திருப்பலி, தேர்பவனி

மாதத்தின் இறுதி நாள் புனித ஜான் போஸ்கோ நினைவுநாள் : மாலை 06.30 மணிக்குத் திருப்பலி, தேர்பவனி

Divine Mercy Novena - Every Saturday from 02.30 pm to 05.30 pm with Holy Mass

Devotion to God Our Loving Father - Every First Sunday of the month from 03.00 pm to 05.30 pm with Holy Mass

மாதத்தின் முதல் சனிக்கிழமை - காலை 09.30 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை - குடும்ப ஆசீர்வாத நற்செய்தி செபக்கூட்டமும் திருப்பலியும்

கிளைப்பங்கு ஆலயத்தில் மாதத்தின் 08 ஆம் தேதி மாலை 06.30 மணிக்குத் தேர் பவனி, திருப்பலி

திருவிழா : புனித ஜான் போஸ்கோ திருவிழா - ஜனவரி 31 ஆம் தேதி அல்லது அதனைத் தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை.

Feast of God Our Loving Father : First Sunday of August

Feast of Divine mercy : Second Sunday of Easter.

பங்கில் இறையழைத்தல்கள் :
1. அருட்பணி. சார்லஸ். G
2. அருட்பணி. ஆரோக்கியசாமி
3. அருட்பணி. தோம்னிக்
4. அருட்பணி. அந்தோணி சேவியர்
5. அருட்பணி. ஜான் மேத்யு
6. அருட்பணி. சார்லஸ்
7. அருட்பணி. தோம்னிக் சகாயராஜ்
8. அருட்பணி. பேட்ரிக் அந்தோணிராஜ்
9. அருட்பணி. ஜெஃபர்சன்
10. அருட்பணி. டான் போஸ்கோ
11. அருட்பணி. சின்னராவ்
12. அருட்பணி. வின்சென்ட்
13. அருட்பணி. வின்சென்ட் பால்
14. அருட்பணி. சேவியர்
15. அருட்பணி. ரஃபேல்
16. அருட்பணி. கஸ்பார்

17. அருட்சகோதரர் அமல் பிராங்க்ளின்
18. அருட்சகோதரர் ஹென்றி
19. அருட்சகோதரர் நீதிமாணிக்கம்

20. அருட்சகோதரி மேரி மைக்கேல் டயானா
21. அருட்சகோதரி சோஃபியா
22. அருட்சகோதரி சில்வியா
23. அருட்சகோதரி கேத்தரின்
24. அருட்சகோதரி வெரோனிக்கா தாஸ்


பங்கு வரலாறு :

அயனாவரம் தொன் போஸ்கோ திருத்தலமானது, பெரம்பூர் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு 1966 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் நாளில் தனிப் பங்காக உயர்த்தப்பட்டு, சலேசியர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

சிறு குடிசையில் 150 குடும்பங்களுடன் புதிய பங்கு உதயமானது.

தற்போதைய ஆலயம் கட்டப்பட்டு, 1978 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாளில் புனிதப் படுத்தப் பட்டது.

2003 ஆம் ஆண்டு ஆலய வெள்ளி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

வில்லிவாக்கம், சிட்கோநகர், திருவள்ளுவர் நகர் ஆகிய மூன்று கிளைப் பங்குகளைக் கொண்டிருந்தது. பின்னர் வில்லிவாக்கம், சிட்கோ நகர் ஆகியவை தனிப்பங்குகளாகப் பிரிக்கப்பட்டு உயர்மறைமாவட்டத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது திருவள்ளுவர் நகர் மட்டுமே 200 கத்தோலிக்கக் குடும்பங்களுடன் கிளைப் பங்காகச் செயல்பட்டு வருகிறது.

திருத்தலத்தோடு இணைந்து தொன்போஸ்கோ மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1978 ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளியாகத் தொடங்கப்பட்டு, 2004 ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாகவும், 2015 ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாகவும் வளர்ச்சியடைந்தது.

2016 ஆம் ஆண்டில் திருத்தலப் பங்கின் பொன்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

புனித ஜான் போஸ்கோவைப் பாதுகாவலராகக் கொண்டு தமிழகத்தில் இயங்கி வரும் ஒரே தனிச் சிறப்புமிக்க திருத்தலம் இதுவாகும்.

பங்கில் இயங்கி வரும் குழுக்கள் :
1. பங்கு மேய்ப்புப்பணிக் குழு
2. புனித வின்சென்ட் தே பவுல் சபை
3. மரியாயின் சேனை
4. கிறிஸ்தவர்களின் சகாய அன்னை சபை (ADMA)
5. தொன் போஸ்கோ இயக்கம்
6. திருவழிபாட்டுக் குழு
7. சலேசிய உடனுழைப்பாளர்கள்
8. அருங்கொடை இயக்கம்
9. கத்தோலிக்கத் தொழிலாளர் இயக்கம்
10. இளையோர் இயக்கம்
11. சாவியோ விங்ஸ்
12. நியோ கேட்டகுமினல் வழி
13. நற்கருணைப் பணியாளர்கள்
14. பாடகர் குழு
15. பலிப்பீடப் பணியாளர்கள்

தொன் போஸ்கோ திருத்தலப் பங்குதந்தையர்கள் :

1. அருட்பணி. அகஸ்டின் ச. ச (1966 - 1970)
2. அருட்பணி.பகவந்த ராஜூ ச. ச (1970 - 1971)
3. அருட்பணி. பிரான்சிஸ் பீரிஸ் ச. ச (1971 - 1972)
4. அருட்பணி. அடைக்கலசாமி ச. ச (1972 - 1977 & 1985 - 1987)
5. அருட்பணி. மரிய அருள்நாதன் ச. ச (1977 - 1981)
6. அருட்பணி. லூர்துநாதன் ச. ச (1981 - 1985)
7. அருட்பணி. மேத்யூ ஓரத்தல் ச. ச (1987 - 1989)
8. அருட்பணி. ஜோசப் அந்தோணி ச. ச (1989 - 1991)
9. அருட்பணி. ஜோசப் எக்ஸ்படிட் ச. ச (1991 - 1995)
10. அருட்பணி. ஜோசப் ஜெஸ்வந்த் ச. ச (1995 - 1997)
11. மரிய அம்புரோஸ் ச. ச (1997 - 1999)
12. அருட்பணி. K. V. செபாஸ்டின் ச. ச (1999 - 2002 & 2003 - 2005)
13. அருட்பணி. மரிய பவுல் போஸ்கோ ச. ச (2002 - 2003)
14. அருட்பணி. இராயப்பா ச. ச (2003)
15. அருட்பணி. அமல்ராஜ் தாமஸ் ச. ச (2005 - 2008)
16. அருட்பணி. ராஜ்குமார் மெர்வின் ச. ச (2008 - 2011)
17. அருட்பணி. சேவியர் பாக்கியம் ச. ச (2011 - 2013)
18. அருட்பணி. A. T. ஜேம்ஸ் ச. ச (2013 - 2019)
19. அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச (2019 முதல் தற்போது வரை..)

வழித்தடம்: 🚌கோயம்பேட்டில் இருந்து பேருந்து எண் 46. பிராட்வேயில் இருந்து பேருந்து எண் 20, 120 பேருந்து நிறுத்தம் : இரயில்வே குவார்ட்டர்ஸ்.

தொடர்புக்கு : தொன் போஸ்கோ திருத்தலம், 86, P. E. கோயில் மேற்கு மாட வீதி, அயனாவரம், சென்னை 600 023 Ph : 044 - 26262108

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : திருத்தல அதிபர் அருட்பணி. ம. மரிய லூயிஸ் ச. ச அவர்கள்.